செஞ்சுத் தான் பாருங்களேன்

படிப்பும், திறமையும்!

·        படிப்போடு சேர்த்து, திறமைகளையும் பயிற்சி செய்து வர முயற்சிப்போம்.
·        ஹாபியையே பணியாகப் பெறும் வாய்ப்பைத் தவற விடாமல் கைப்பற்றிக் கொள்ள கவனமாக இருப்போம்.

·        பலவீனத்தைக் குறைக்கும் முயற்சியில், பலத்தைப் பெருக்கத் தவற விட்டு விடாமல் கருத்தாய் இருப்போம்.

இன்று உலக புத்தக தினம்!

தினமும் இரவு படுக்கும் முன் ஏதேனும் ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்கின்ற  வைராக்கியத்தை எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் புத்தகங்கள் அறிவை விரிவுபடுத்தும். விசாலமான ஞானத்தைக் கொடுக்கும்.

சிறு வயதில் இருந்தே புத்தகங்களைப் படிப்பதால்
தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஒரு வாசகியின் நேர்காணலை தினமலர் வெப்சைட்டில் படிக்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=903120

நன்றி சொல்வோம்!

இன்றைய அவசர பரபர யுகத்தில் எங்கு பார்த்தாலும் சிரிப்பை மறந்த இறுக்கமான முகங்கள்.

கோயிலில் கூட கடவுளிடம் அவசரமாக முறையிட்டு விட்டு ஓட்டமாக ஓடும் மனிதர்களைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆட்டோ, கால்டாக்ஸி, ஷேர் ஆட்டோ - இவற்றிலும் மரத்துப் போன இதயங்களுடன் பயணிக்கும் இயந்திர மனிதர்களையே பார்க்கிறோம். இந்தச் சூழலை இனிமையாக்க ஒரு குட்டி யோசனை.

கோயிலில் குருக்களிடம் விபூதி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டவுடன், ‘தேங்க்யூ...’ என்று சொல்லலாம். அதுபோல பயணத்தின் போதுநாம் சென்றடைய வேண்டிய இடம் வந்ததும்,  இறங்கிக் கொண்டு பணம் கொடுத்து விட்டு சென்று விடுவோம். இனி, இறங்கியதும் ‘தேங்கியூ...பை’ என்றோ, ‘தேங்க் யூ...நல்லா டிரைவ் பண்ணீங்க, குட் டே...’ என்றோ சற்றே சிரித்த முகத்துடன் சொல்லித் தான் பாருங்களேன். அந்த சந்தோஷம் உங்களையும், வண்டி ஓட்டுனரையும் தொற்றிக் கொண்டு அந்த நிமிடத்தை அழகாக்குவதை உணருவீர்கள்.