|
மங்கையர் மலரின் பொங்கல் நல்வாழ்த்துகள் |
அன்பார்ந்த
வாசகிகளே! உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
- ஜனவரி 16 இதழுடன் மங்கையர் மலரில் கடந்த 1 வருடமாக நான் எழுதி வந்த ஸ்மார்ட் லேடி தொடர் முடிவடைய உள்ளது.
- எழுத்து மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து வந்தது பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. இக்கட்டுரை பற்றி ஏராளமான வாசகிகள் எங்களுக்கு இமெயில் மூலமாகவும், கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் கருத்துக்களைப் பதிவு செய்து எங்களை ஆனந்தத்தில் திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.
- பலர் கம்ப்யூட்டரை பயமில்லாமல் கையாளுவதாகவும், ஒருசிலர் பயமில்லாமல் ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கற்றுக் கொண்டதாகவும், இன்னும் சிலர் தங்களுக்காக ப்ளாகையே இக்கட்டுரை மூலம் வடிவமைத்ததாகவும் கூறி, நாங்கள் 1 வருடமாக எடுத்த முயற்சிக்கான பலனை பலமடங்கு உயர்த்தி விட்டார்கள்.
- அக்கா என்றும், அம்மா என்றும், மேடம்
என்றும், மிஸ் என்றும் அன்போடு
எத்தனை எத்தனைக் கடிதங்கள், இமெயில்கள், தொலைபேசி அழைப்புகள்...அத்தனையிலும் பாராட்டுகள், கேள்விகள், சந்தேகங்கள்.
- பெண்கள்
என்றாலே, ஆடை,
அணிகலன்கள் அணிந்து கொள்வதிலும், அழகு
செய்து கொள்வதிலும், மேக்-அப்பிலும் மட்டுமே அதிக ஆர்வம் உள்ளவர்கள்
என்றெல்லாம் பொதுவாக ஒரு கருத்து
நிலவி வருகிறது.
- தங்கள் தோற்றத்தை மட்டுமல்ல,
மனதையும் அறிவினால் அழகுபடுத்திக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பதை
‘ஸ்மார்ட் லேடி’ என்ற தொழில்நுட்பத்
தொடர் நிரூபித்து விட்டது.
- வாய்ப்பு
கிடைத்தால் ஜமாய்த்து விடுவோம் என்று நிரூபிக்கும் வகையில்
எங்கள் தொடர் மூலம் கம்ப்யூட்டரை
கையாளுதல், இமெயில் அனுப்புதல், தமிழில்
டைப் செய்தல், ஃபேஸ்புக்கில் சாட் செய்தல், ப்ளாக்
உருவாக்குதல் என்று ஜமாய்த்து விட்டார்கள்.
ஸ்மார்ட்
லேடி தொடர் மூலம் பெண்கள்
அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸ் ஆக்குவதே
எங்கள் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தில் நாங்கள்
வெற்றி பெற்று விட்டோம் என்று
மங்கையர்மலர் வாசகிகளின் ஆர்வத்தில் இருந்து தெரிகிறது.
தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலாக மங்கையர் மலரும், காம்கேர் சாப்ட்வேர் நிறுவனமும் (Compcare Software Private Limited) இணைந்து எடுத்த பெருமுயற்சிக்கு
ஆர்வத்துடன் ஊக்கமளித்த பல்லாயிரக்கணக்கான வாசகிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துகள்
காம்கேர் கே புவனேஸ்வரி
மங்கையர் மலர் - ஸ்மார்ட் லேடி - தொடருக்காக
ஆசிரியர் குழுவுடன் இணைந்து....
14-01-2-014, செவ்வாய்