யு-டியூபில் நாம் எழுதிய கவிதையை பப்ளிஷ் செய்ய முடியுமா?
யு-டியூபில் வீடியோ வடிவில் உள்ள எல்லாவற்றையும் பப்ளிஷ் செய்ய முடியும். உங்கள் கவிதையை ஃபோட்டோஷாப்பில் டைப் செய்து இமேஜ் ஃபைலாக்கிக் கொண்டு, அதை Windows Live Movie Maker போன்று ஏதேனும் ஒரு சாஃப்ட்வேரில் கொண்டு சென்று மெல்லிய இசையையும் சேர்த்து வீடியோ ஃபைலாக்கிக் கொண்டு, யு-டியூபில் உங்கள் சானலில் பப்ளிஷ் செய்யலாம். இன்னொரு அருமையான வழியும் உண்டு. Windows Live Movie Maker சாஃப்ட்வேரில் ஒவ்வொரு ஸ்லைடிலும் உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியையோ அல்லது இரண்டிரண்டு வரிகளையோ டைப் செய்து கொண்டு, நீங்களே உங்கள் கவிதை வரிகளை வாசித்து ரெகார்ட் செய்து வீடியோ ஃபைலாக்கிக் கொள்ளலாம். இந்த வீடியோ ஃபைலை யு-டியூபில் பப்ளிஷ் செய்து கொள்ளலாம்.
நான் புதிதாக ஃபேஸ்புக் அக்கவுண்ட் திறந்துள்ளேன். அதில் என் புகைப்படங்களை வெளியிடலாமா?
இந்த கேள்வியை மாலினி என்பவர் கேட்டிருந்தார். அவரது கேள்விக்கான பதிலை உங்கள் அனைவருக்குமாக பொதுவாக்கி வெளியிடுகிறேன்.
இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் Profile Picture - ல் தங்கள் புகைப்படங்களை மாற்றிக் கொண்டே இருப்பது அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக்கினால் அதிகரித்து வரும் CYBER CRIME எனப்படும் சைபர் குற்றங்களுக்கும் இதுதான் பிரதானக் காரணமாகிறது.
‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு புத்தகத்தை எழுதிய போது, அதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் கமிஷ்னரை சந்தித்து அவர்களிடமும் கருத்து கேட்டு அப்புத்தகத்தில் வெளியிட்டோம். ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதினால் ஏற்படுகின்ற பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள்.
அப்போது அவர்கள் சொன்னதில் இருந்து சிறு துளி இதோ உங்கள் கவனத்துக்காக....
‘எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருக்கின்ற சமயத்தில் புகைப்படங்கள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்துவதில்லை. ஏதேனும் கருத்து வேறுபாடு என்று வரும் போது பழிவாங்குவதற்கு மிக சுலபமான வழியாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.
எனவே கூடுமானவரை புகைப்படங்களை தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக மட்டும் வெளிப்படுத்திக் கொண்டால் பிரச்சனைகளை 50 சதவிகிதம் தடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளைக் கடத்துபவர்கள் குழந்தைகள் படிக்கின்ற பள்ளி, அவர்கள் பெற்றோர் போன்ற விவரங்களை சமூக வலைதளங்களில் இருந்து வெகு சுலபமாக பெற்றுக் கொண்டு செயல்படுத்தி விடுகிறார்கள்.’
இதே கருத்தை தான் நான் சந்திக்கின்றவர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம் திறமைகள் மூலம் நம்மை அடையாளம் காணச் செய்வோம். ஆண் எப்படி அவனது திறமையினால் அடையாளம் காணப்படுகிறானோ, அதைப்போல பெண்ணும் அவளது திறமையினால் அடையாளம் காணப்பட வேண்டும். அப்படி அடையாளம் காணப்பட முதலில் அவள் மனதார விரும்ப வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும்.
சமூக வலைதளங்களில் கவனமாக இருப்போம். Wish you a happy Journey in Social Networks....
இமெயிலில் பாதி டைப் செய்து கொண்டிருக்கும் போதே கரண்ட் ஆஃபாகி விட்டால் என்ன செய்வது? கரண்ட் வந்ததும் சைன் இன் செய்து சைன் அவுட் செய்து கொள்ளலாமா?
நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டு தான் உள்ளது. இண்டர்நெட் தொடர்பில் இருக்கும் கம்ப்யூட்டரில் சைன் இன் செய்து வேலை செய்து கொண்டிருக்கும் போது நடுவில் கரண்ட் போனால், கரண்ட் வந்ததும் திரும்பவும் சைன் இன் செய்து, சைன் அவுட் செய்து கொள்ளலாம்.
ஒரே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டுகளுக்குப் பயன்படுத்தும் போது, ஏதேனும் ஒரு அக்கவுண்ட்டில் இருந்து சைன் அவுட் செய்து கொண்டு வெளியே வந்தால், மற்ற அக்கவுண்ட்டுகளும் தானகவே சைன் அவுட் ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு.
உதாரணம்: ஜிமெயில் மற்றும் ப்ளாகிற்கு ஒரே ஜிமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தினால், ஏதேனும் ஒன்றில் இருந்து சைன் அவுட் ஆனால், மற்ற அக்கவுண்ட் தானாகவே சைன் அவுட் ஆகி விடும்.
யு-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

- யு-டியூபில்
எந்த வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும்
போது, பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்து அதன் முகவரியை காப்பி(Ctrl + C) செய்து
கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு நாம் மங்கையர் மலர் யு-டியூப் அக்கவுண்ட்டில் (www.youtube.com/mmsmartlady)
இருந்து Mangayar Malar September
2013 TV Promo என்ற தலைப்பிலான வீடியோவை இயக்கி, அதன் முகவரியை(http://youtube.com/watch?v=geQMeAeLGrU)
காப்பி செய்துள்ளோம்.
- இப்போது பிரவுசரில்
புதிய டேபில், இந்த லிங்கை பேஸ்ட்(Ctrl+V) செய்து கொண்டு youtube என்ற வார்த்தைக்கு
முன் SS என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும்.
http://ssyoutube.com/watch?v=geQMeAeLGrU
- இப்போது
Savefrom.net என்ற தலைப்பிலான திரையில் நாம் பேஸ்ட் செய்த லிங்கின் பெயர் வெளிப்படும்.
மேலும் Download என்ற பட்டனின் கீழ் எந்த ஃபார்மேட்டில் வீடியோ டவுன்லோடு ஆக வேண்டும்
என்ற பட்டியல் இருக்கும். அதிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் இரண்டு முறை
கிளிக் செய்ய வேண்டும். இங்கு உதாரணத்துக்கு
MP4 என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
- உடனடியாக நாம்
தேர்ந்தெடுத்த வீடியோ நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகி விடும். வீடியோவில் சைஸிற்கு
ஏற்ப டவுன்லோடு ஆகும் நேரமும் வேறுபடும்.
- நம் கம்ப்யூட்டரில்
டவுன்லோடு ஆனவுடன் அதை வழக்கம் போல கிளிக் செய்து இயக்கிப் பார்க்கலாம்.
டெஸ்க்டாப், லேப்டாப், மொபைல் - இவற்றில் தமிழ் மொழியில் டைப் செய்வது எப்படி?
படிக்கின்ற மாணவர்களுக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் உண்டாகக் கூடிய, தாழ்வுமனப்பான்மையைத் தவிர்ப்பதற்காகவே தான் பள்ளிக்கூடங்களில் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான யூனிஃபார்ம் என்ற உடை கட்டாயமாக்கப்பட்டது. அதுபோலவே, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான குறியீட்டு முறை ஒன்றுண்டு. இக்குறியீட்டு முறையைப் பயன்படுத்தினால் தான் உலக மொழிகள் அனைத்தையும், கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் பயன்படுத்த முடியும். இதற்கு யுனிகோட்(Unicode) என்று பெயர். இதை விரிவாக universal Code என்று சொல்லலாம். இக்குறியீட்டு முறையின்படி உலகம் முழுவதும் உள்ள எல்லா வகையான கம்ப்யூட்டரிலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யலாம், எழுத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆங்கிலம் தான் கம்ப்யூட்டரின் மொழி என்ற மொழி ஆதிக்கத்தை முறியடித்து ஒருவித சமத்துவத்தைக் கொண்டு வந்தது யுனிகோட் குறியீட்டு முறை. யுனிகோடினால் கம்ப்யூட்டர் உலக மொழிகள் அனைத்திலும் தேர்ச்சியடைந்து வல்லமை பெற்று விட்டதால், கம்ப்யூட்டரை உலகத்துக்கே பொதுவான ஒரு சாதனமாகச் சொல்லலாம்.
திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வதைப் போல, உலகப் பொது சாதனம் என்று கம்ப்யூட்டரைச் சொல்லலாம். கம்ப்யூட்டரிலும்,
இன்டர்நெட்டிலும் யுனிகோட் முறையில் தமிழில், மலையாளத்தில், கன்னடத்தில், இந்தியில் இப்படி எல்லா மொழிகளிலும் டைப் செய்ய முடியும். யுனிகோட் குறியீட்டு முறையில் டைப் செய்வதற்கென்று இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஃபாண்டுகள் உள்ளன. தமிழ் மொழியில் டைப் செய்வதற்கு Latha என்ற ஃபாண்ட், இந்தியில் டைப் செய்வதற்கு Mangal என்ற ஃபாண்ட், தெலுங்கில் டைப் செய்வதற்கு Guatami என்ற ஃபாண்ட் இப்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு ஃபாண்ட்.இப்படி, ஒவ்வொரு மொழிக்கும் பிரத்யேகமாக யுனிகோட் ஃபாண்ட்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான Arial Unicode MS என்பது இந்திய மொழிகள் அனைத்திலும் டைப் செய்ய உதவுகின்ற யுனிகோட் ஃபாண்ட்டாகும். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2002 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திருந்தால், Arial Unicode MS என்ற ஃபாண்ட்டும் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிடும்.
யுனிகோட் என்பது ஒரு குறியீட்டு முறையில் டைப் செய்வதற்கு ஒரு சாஃப்ட்வேர் தேவை. அதைப் பயன்படுத்தி தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் டைப் செய்து கொள்ள முடியும். பொதுவாக ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் டைப் செய்வதற்குப் பயன்படுகின்ற சாஃப்ட்வேர்கள் அனைத்துமே யுனிகோடில் டைப் செய்யும் வசதியைக் கொடுக்கின்றன.
ஸ்ரீலிபி, இளங்கோ, முரசு அஞ்சல், இ&கலப்பை போன்ற ஏராளமான சாஃப்ட்வேர்கள் யுனிகோடில் டைப் செய்கின்ற வசதியைக் கொடுக்கின்றன. பொதுவாக ப்ரிண்டிங் மற்றும் பப்ளிஷிங் துறைகளின் பணிகளுக்காக, இவ்வகை சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்டர்நெட்டில் டைப் செய்வதற்கு பெரும்பாலும் யுனிகோட் முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உலகம் முழுவதிலும் இன்டர்நெட்டில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களில் எல்லா மொழிகளையும் பயன்படுத்த யுனிகோட் முறையே ஏற்றதாகும்.
ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை யுனிகோட் முறையில் டைப் செய்வதற்கு, பொனெடிக் எனப்படும் பேச்சு வழக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழில் நாம் என்ன பேச நினைக்கின்றோமோ, அதை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்து கொண்டால், திரையில் தமிழில் வெளிப்படும். இதைத் தான் பொனெடிக் என்கின்றோம்.
யுனிகோட் முறையில் டைப் செய்ய உதவும் சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும் முறை
கம்ப்யூட்டரிலும்,
இன்டர்நெட்டிலும் யுனிகோட் முறையில் டைப் செய்வதற்கு ஏராளமான சாஃப்ட்வேர்கள் இருந்தாலும்,
மைக்ரோ சாஃப்ட்டின் MicroSoft Indic Language Input Tool(M-ILIT) என்ற சாஃப்ட்வேர் தமிழை கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும்
எளிதாகக் கையாள உதவுகிறது. இந்த சாஃப்ட்வேர் 10-க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான சப்போர்ட்டைத்
தருகிறது. இது சுருக்கமாக ILIT என்றழைக்கப்படுகிறது.
இது எழுத்துக்களை ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வெளிப்படுத்துகின்ற பொனெடிக்
முறையில் இயங்கும் தன்மை கொண்டதாக செயல்படுகின்றது.
ஏதேனும் ஒரு
பிரவுசர் சாஃப்ட்வேரில் http://www.bhashaindia.com/ilit/ என்ற
வெப்சைட் முகவரியை டைப் செய்து கொள்ள வேண்டும்.
இதில் Tamil என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள தேர்ந்தெடுத்துக்
கொள்ள வேண்டும்.
பிறகு Desktop Version என்ற விவரத்தின் கீழ் இருக்கும்
Install Desktop Version என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
காட்டுகின்ற வழியில் கிளிக் செய்து கொண்டே
பின் தொடர்ந்தால், சில
நொடிகளில் Tamil.exe என்ற ஃபைல் டெஸ்க்டாப்பில் பதிவாகி விடும். இதை
மவுசால் இருமுறை கிளிக் செய்து இயக்க வேண்டும்.
இப்போது இந்த
ஃபைல் உங்களை வழிநடத்திச் செல்லுகின்ற வழியில்
சென்று கொண்டிருந்தால் இறுதியில் சாஃப்ட்வேர்
இன்ஸ்டால் செய்யப்பட்டு
விட்டது(Installation
Completed) என்ற
தகவலுடன் விண்டோ ஒன்று தோன்றி,
சாஃப்ட்வேர் முழுமையாக இன்ஸ்டால் ஆகிவிட்டதை உணர்த்தும்.
இதில்
Close
என்ற பட்டனைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
சாஃப்ட்வேரைப்
பயன்படுத்தி தமிழில் டைப் செய்யும் முறை
மைக்ரோசாஃப்ட்டின்,
தமிழில் டைப் செய்யும் வசதியைக் கொடுக்கின்ற MicroSoft Indic Language Input Tool என்ற சாஃப்ட்வேரை இன்ஸ்டால்
செய்தவுடன், அது டெஸ்க்டாப்பில் லாங்குவேஜ் பாரில் வெளிப்படும்.
இதில் இரண்டு பகுதிகள்
இருப்பதை கவனிக்கவும். முதல் பகுதி மொழியைத் தேர்ந்தெடுக்கும் பகுதி. இரண்டாவது பகுதி,
கீபோர்ட் லே-அவுட்டைத் தேர்ந்தெடுக்கும் பகுதி.
முதல் பகுதியில்
தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்க TA Tamil என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது பகுதியில் அ Microsoft Indic Language Input Tool என்ற கீபோர்ட் லே&அவுட்டைத் தேர்ந்தெடுக்க
வேண்டும்.
லாங்குவேஜ் பாரின்
முதல் பகுதியில் இருந்து, தேர்ந்தெடுக்க TA Tamil
என்ற விவரத்தையும்,
இரண்டாவது பகுதியில் அ Microsoft Indic Language Input Tool என்ற கீபோர்ட் லே&அவுட்டையும் தேர்ந்தெடுத்த
பிறகு, நாம் தமிழில் யுனிகோடில் டைப் செய்து கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு,
எம்.எஸ்.வேர்டில் ஆங்கிலத்தில் டைப் செய்யத்
தொடங்கினால், அவை தமிழில் வெளிப்படத் தொடங்கும்.
ஒவ்வொரு
வார்த்தையையும் டைப் செய்தவுடன் கீபோர்டில் Space Bar - ஐ அழுத்த
வேண்டும் அல்லது Enter கீயை அழுத்த வேண்டும்.
அம்மா ammaa
அப்பா Appa
ஸ்மார்ட் லேடி smart ledi
ஆங்கிலம் தவிர்த்து
பிற மொழிகளை யுனிகோட் முறையில் டைப்
செய்வதற்கு, பொனெடிக் எனப்படும் பேச்சு வழக்கு
ஆங்கிலத்தையே
பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழில் நாம் என்ன பேச நினைக்கின்றோமோ,
அதை
அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்து கொண்டால், திரையில்
தமிழில் வெளிப்படும். இதைத்
தான் பொனெடிக் என்கின்றோம்.
தமிழில் டைப் செய்ய
நினைக்கும் வார்த்தைகள்ஆங்கிலத்தில் டைப் செய்ய
வேண்டிய வார்த்தைகள்
எனக்கு ஸ்மார்ட்
லேடி தொடர் பிடித்திருக்கு என்று டைப் தமிழில் செய்ய
நினைத்தால், ஆங்கிலத்தில் enakku Smaart ledi
thodar pidiththirukku என்று டைப்
செய்ய வேண்டும். என்ன தலையை சுற்றுகிறதா?
பழகினால் சரியாகிவிடும்.
அன்பார்ந்த வாசகிகளே,
இந்த இடம் உங்களுக்காகவே...
இந்த இடம் உங்களுக்காகவே...
கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த உங்கள் சந்தேகங்களை mmsmartlady@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.
இமெயில் Subject என்ற இடத்தில் ‘டெக்னோ-கேள்வி, பதில்’ என்று குறிப்பிட்டு அனுப்பும் இமெயில்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்படும். வாழ்த்துக்கள்.

காம்கேர் கே புவனேஸ்வரி
ஸ்மார்ட் லேடி டீம்
மங்கையர் மலர்