வாசகிகள் சொல்கிறார்கள்

10-09-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து... 
வசுமதி கண்ணன்
“வருமானம் என்றுமே வாழ்க்கையின் பிடிமானம்”. “தெரிந்ததும்... தெரியாததும்...” என்றபடிக்கு, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்னெட் தொழில் நுட்பங்களின் அத்தியாவசியங்களையும், அதனால் கிடைக்கக் கூடிய வருமானத்திற்கான வழிமுறைகளையும் விளக்கிச் சொல்லிய விதம் தெளிவாக இருந்தது. தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகவும், தேவைப் பட்டோருக்கு எடுத்து இயம்பவும், உதவியாயிருந்த டிப்ஸ் களை அளித்த தொகுப்பாளினி புவனா மேடத்திற்கும், எம்‌எம் ஸ்மார்ட் லேடி டீம் க்கும் நன்றிகள்!
ஒவ்வொரு புதனும், டிப்ஸ்களோடு, இணைப்பு புத்தகம் போல் தரும் தலையங்கச் செய்தி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பது கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.
பார்வதி ராமசந்திரன்
இத்தனை வேலைவாய்ப்புகள் இருக்கின்றனவா?!.. ஓரிண்டு மட்டும் தான் இதுவரை தெரிந்து கொண்டிருந்தேன்.. நிஜமாகவே இல்லத்தரசிகளுக்கு ரொம்ப உபயோகமான தகவல். அடுத்த வாரமும் தொடரும் என்பதால் ஆவலோடு காத்திருக்கிறேன்!.
கிளாரா கிளமெண்ட்
இன்னிக்கு சாட் ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஈசியாகவும் இருந்தது  இப்போதெல்லாம் எங்க கான்ஃபிடென்ட் லெவல் அதிகமாகி விட்டது  இப்படி சொல்லித்தர டீச்சர் இருந்தா நாங்க கம்ப்யூட்டர்ல பி ஹெச்டி பண்ற அளவிற்கு முன்னேறி  விடுவோம் நன்றிகள் ஒரு கோடி எம் எம் டீமிற்கும் புவனா மேடம் உங்களுக்கும்
03-09-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து... 
திருமிகு:
கிரிஜா சாரதி
பிற்பகல்  1 மணி முதலே  இன்று  என்ன  குவிஸ்  வரும்  என்றும் .புதிதாக  என்ன  கற்போம்  என்றும் ஆவலாக  இருப்பேன் .நீங்களும்  என்  எண்ணத்தை  பூர்த்தி  செய்கிறீர்கள்  கோடி  நன்றிகள்  மேடம்
 வசுமதி கண்ணன்

பதில்கள் தெரிந்திருந்தாலும், அவசரத்தில்  தமிழும், ஆங்கிலமும் மாறி மாறி டைப் செய்து, இரண்டு நிமிடம் முன்பே  தட்டிவிட்டதில், ஒட்டிக்கொண்டிருந்த  டென்ஷன் ஓடிப்  போனது. இன்றைய டிப்ஸ் & க்விஸ் ஸோடு,  குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை, சமூக நல அக்கரைச் செய்தியாக, தலையங்கத்தை அலங்கரித்த புவனா மேடத்திற்கும், mm smartlady டீமிற்கும் வாழ்த்துக்கள்!

27-08-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து... 
திருமிகு:
வசுமதி கண்ணன்
நேற்று மலர்ந்த பூக்களானாலும், இன்று அலர்ந்த மலர்களாய், கண்களும், கருத்தும் மகிழும் வண்ணம்  மாலை தொடுக்கக் கற்றுக்கொடுத்த எங்கள் புவனா மேடத்தின் டிப்ஸ் & க்விஸ் க்கு  நன்றி!. அத்தோடு, மங்கையர் மலருக்கே மலர் சூட்டும் பாக்கியம் பெற்றது எங்கள் ஸ்மார்ட் லேடி  டீம்.
கிளாரா கிளமெண்ட்
இன்றைய க்விஸ் மிக எளிது ஆனால் கற்றுக்கொண்ட விஷயங்கள் வாழ்க்கைக்கு மிக அவசியம் பிறர் மனம் புண்படாமல் பப்ளிக் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாசுக்காக எப்படி பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாமல் மெய்டன் பண்ணுவது என்று நம்மை சிந்திக்கவைத்து மனதை ரொம்ப இம்ப்ரஸ் செய்துவிட்ட எம் எம் ஸ்மார்ட் லேடி டீமுக்கும் புவனா மேடமுக்கும் மிக்க நன்றி.. அருமை! அற்புதம்!
ராதா ரகு
இன்று புதிதாக என்ன  என்று, ஒவ்வொரு வாரமும் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.  இந்த வாரம் மற்றொரு உபோயோகமான தகவல்களை தெரிந்து கொண்டோம்.
மல்லிகா ஷண்முகம்
ரொம்ப உபயோகமான தகவல்கள். உங்கள் ஆன்லைன் கிளஸ்ஸ்க்கு நான் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. என்கூட சமீபத்தில் வேலையில் ஓய்வு பெற்ற என் கணவரும் இதில் ஆர்வம் கொண்டு உங்கள் பிலோகில் நட்புஸ் படித்து பார்த்து நீங்கள் நடத்துகிற கிளாஸ் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கிறது என்று சொன்னார் இது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்த்தது. அனைத்து .பாராட்டுகள் உங்களைச் சாரும்.ஸ்மார்ட்லேடி டீம்க்கு என்னது அன்பார்ந்த நன்றிகள்.
கிரிஜா சாரதி
இந்த   வாரம்  வந்த  டிப்ஸ்  மிகவும்  முக்கியமானது +உபயோகமானது .இவை  நம்  தினப்படி  வாழ்க்கையில்   நாம்  அதிகமாக  யூஸ்  செய்வது  .மேடம் , எங்கள்  மூளை திறனை  வார வாரம்  அதிகபடுத்தும்  உங்கள்  செயலுக்கு  கோடிகணக்கான  நன்றி

20-08-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
திருமிகு.................
பிரிந்தா ரமணி:
இப்போது என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாவிட்டாலும் எப்படியும் ஒரு நாள் நான் வாங்கும்போது இந்தத் தகவல்கள் எல்லாம் எனக்கு நிச்சயம் பயன்படும்.  அதுவும் Anti Mosquito என்ற அப்ளிகேஷன் பற்றிப் படித்த போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  நம்மிடம் போன் இல்லாவிட்டாலும் நாம் அதைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நாலு பேர் மத்தியில் பேசும்போது நாம் ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்காது.  இப்படித் தேடித் தேடி நிறைய செய்திகளை, அதுவும் பயனுள்ள செய்திகளைச் சொல்லித் தரும் எங்கள் குரு புவனா மேமிற்கு மனமார்ந்த நன்றிகள்.
வசுமதி கண்ணன்:
சிலரது வரவால், சற்று தாமதமானாலும், டிப்ஸ்களை படித்து /எழுதி முடித்து, க்விஸ் க்கான பதில்களை, தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்து, நேரத்தை பார்க்க கூட தோன்றாமல், அனுப்பிய பிறகு தான் கவனித்தேன்... 4 நிமிடங்கள் முன்னதாக அனுப்பியதை. இன்றைய டிப்ஸ் அண்ட் க்விஸ்,  இத்தனை வசதிகளோடு கூடிய மொபைல்களை வைத்திருப்பவர்களைப் பார்க்க நேரும் போது, இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வத்தை தோற்றுவித்தது. அவசியமில்லை என்றாலும், தெரிந்து கொள்வது நல்லது என்ற படிப்பினை கொடுத்த புவனா மேடத்திற்கு நன்றிகள் பல! மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீமிற்கும் நன்றிகள்!!!
பார்வதி ராமசந்திரன்:
இவ்வளவு ஆப்ஸ் மொபைலில் பயன்படுத்த முடியும் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். ஒன்றிரண்டு மட்டுமே தெரியும்.. டவுன்லோட் செய்து கொள்கிறேன்!..ரொம்ப உபயோகமான பகிர்வு!. மிக்க நன்றி! மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீமிற்கும் நன்றிகள்!!!
ஹேமாபதி:
இன்றைய சாட் மீட்டில் கற்றுக் கொண்டதை, என்னுடைய  மொபைலில்  முயற்சி  செய்து பார்க்கிறேன்  மாம்.. நன்றி..
ராதா ரகு:
ல்லோரும் smart ஃபோன்க்கு தாவி விட்டார்களே! என்னதான் அதில் இருக்கு என்று ஆச்சரியமாயிருந்தது. ஆக! அதில் இவ்வளவு வசதிகளா? ரொம்ப நன்றி மேடம். நாங்கள் மனதில் நினைத்ததும், விளக்கி விட்டீர்கள். உடனே ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டியதுதான்...மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீமிற்கும் நன்றிகள்!!!
மல்லிகா சண்முகம்:
இன்றைய ஆன்லைன் மிகவும் ஸ்பெஷல். கணனி மூலம் செய்ய வேண்டிய வேலைகளை, இப்பொழுது ஸ்மார்ட் ஃபோனில்யே செய்ய முடியும் என்று நீங்கள் எங்களுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும் எங்களுக்கு புரிகிற மாதிரி விளக்கம் கொடுத்து, மேலும் இலவசமாக கற்றுக் கொடுத்த புவனேஸ்வரி மேடம்க்கு பல கோடி நன்றி சொன்னாலும் பத்தாது… மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீமிற்கும் நன்றிகள்!!!
கிரிஜா சாரதி:
மேடம் .ஒவ்வொரு  வாரமும் புதுபுது  விஷயங்கள் அறிந்து  கொள்வதால் . மனது  ஆரவாரம்  செய்கிறது .இந்த  வயதில்  நமக்கும் இவ்வளவு கம்ப்யூட்டர்  நாலெட்ஜ்  இருக்க  காரணமே  புவனா  மேடம்தானே  என்று  களிப்பு கொள்கிறது  . உங்களுக்கு   நன்றி  சொல்ல  வார்த்தை  இல்லை  மேடம்... மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீமிற்கும் நன்றிகள்
லஷ்மி தேவி:

இன்றைய க்விஸ் மிகவும் பரபரப்பாக இருந்தது. நான் இன்னும் "ஹைதர் அலி " காலத்து செல் ஃபோன் உபயோகித்து வருகிறேன். ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் போது உபயோக்கிக்க வேண்டிய அப்ளிகேஷன் அனைத்தையும் இன்றைய சாட் மூலம் அறிந்து கொண்டேன்.. மிகவும் உபயோகமான தகவல்கள் அளித்த "புவனா" மேடம் க்கு மனமார்ந்த நன்றிகள்...மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீமிற்கும் நன்றிகள்

13-08-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
பிருந்தா ரமணி
அப்பப்பா!  எவ்வளவு தகவல்களை இன்று எங்கள் மூளைக்குள் புகுத்தி விட்டீர்கள் மேம்!  பெயரளவில் தான் தெரியும் சில வார்த்தைகளை மட்டும்.  ஆனால் அதன் பயன்பாடுகள் பற்றித் தெரியாது.  அவைகளைப் பற்றி எங்களுக்குப் புரியும் விதத்தில் மிக எளிமையாக உதாரணங்களுடன் சிறு பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதைப் போலச் சொல்லித் தந்திருக்கிறீர்கள்.  இதெல்லாம் எங்களுடைய பூர்வ புண்ணிய பலன் தான் என்று தான் சொல்ல வேண்டும்.  அதனால் தான் இவ்வளவு அருமையான குருவாக நீங்கள் (புவனா மேம்) எங்களுக்கு அமைந்து சொல்லிக் கொடுக்க, நாங்கள் கற்றுக் கொள்கிறோம்.
Thanks a lot Bhuvana Mam!
கிளாரா கிளமெண்ட்
இன்றைய  க்விஸ் ரொம்ப ரொம்ப வித்தியாசம். எவ்வளவு விஷயம் பெரிய கோர்ஸ் நமக்கு கிடைக்கிறது என்றால் மிகையாகாது. கண்டிப்பாக மிக பயனுள்ளதாக இருந்தது. டிப்ஸ் பார்த்துதான் பதில் சொன்னேன் என்றாலும் இரு முறை படித்ததில் மனதில் பதிந்துவிட்டது. நன்றிகள் கூற வார்த்தைகள் இல்லை  நன்றி மேடம் நன்றி எம் எம் லேடி டீம்.
ராதா ரகு
எப்பொழுதும் கணனி யூஸ்  பண்ணும்போது , இந்த URL, http, இதற்க்கு என்ன அர்த்தம் என்று யோசனை  செய்துக்கொண்டே இருப்பேன். அது போல் சர்வர் என்றால் என்ன என்றும் யோசித்துக் கொள்வேன். எனக்கு என் எல்லா சந்தேகங்களுக்கும் விடை கிடைத்து விட்டது..அதற்கு மேலும் நிறைய தெரிந்து கொண்டோம். நன்றி மாம்.
மல்லிகா ஷண்முகம்
இன்றைய ஆன்லைன் கிளாஸில்  நீங்கள் கொடுத்த டிப்ஸ் ரொம்ப உபயோகமாக இருந்த்தது.நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டோம். இவ்வளவு CLEARஆக ,விரிவாக எங்களுக்கு புரியும் படி கற்றுக் கொடுத்த புவனேஸ்வரி மேடம்க்கு நன்றி நன்றி நன்றி..
வசுமதி கண்ணன்
இன்றைய பதில்களை எழுதிக் கொண்டிருக்கும்போது, எனது ஆத்மார்த்த சினேகிதியிடமிருந்து ஃபோன் கால். பேச்சைத் தொடர்ந்து கொண்டே, எழுதியதில், சங்கதிகள் மனதில் பதியவில்லை.  பேசி முடித்தபின், ஒன்றுக்கு, இரண்டு முறை படித்து மனதில் ஏற்றிக் கொண்ட பின், பதில்களை டைப் செய்து அனுப்பினேன்.  இருந்தும் நோ டென்ஷன். காரணம்... புவனா மேடம் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்களுடன், டைம் மேனேஜ்மெண்டையும் சூக்ஷமமாகச் சொல்லிக் கொடுத்ததே!.  இன்றைய தலையங்கத்தில், “அலிபாபாவின் அண்ணனின் (நடிகர். சக்ரபாணி) அவஸ்தைகளைக் கண் முன் நிறுத்தி,  நவீன அலிபாபாவின் பேராசை தந்த வேலைகளை படிக்கும்போது,  சிரிப்போடு சிந்திக்கவும் வைத்தது, சிறப்பாக இருந்தது.

06-08-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
லஷ்மி தேவி
இப்போதைய கல்வி திட்டத்தில் ஒரு டெர்ம் முடிந்து விட்டால், அந்த பாட புக் யை தூக்கி போட்டு விட்டு.. புது டெர்ம் படிக்க ஆரம்பித்து விடலாம். மேலும் முழு ஆண்டு தேர்வுக்கு கூட குறைந்த சிலபஸ் தான்.. பள்ளி துவங்கும் போது ஜூன் இல் கேட்கும் "திருக்குறள்/கடவுள் வாழ்த்து" பள்ளி முடியும் போது ஏப்ரல் இல் மறந்து விடுகிறது. (நாம் படிக்கும் பொழுது அப்படி இல்லை - இப்பவும் கூட "தேறா மன்னா.. என ஆரம்பித்தால் சொல்லி விடுவோம் இல்லையா!!)..
நம்முடைய பழைய கல்வி திட்டம் போல, புவனா மேடம் மும் முழு பாடதையும், நினைவு கூர்ந்து  அதற்க்கு ஏற்றார்போல க்விஸ் வைத்து நமக்கு புரிய வைத்து விடுகிறார்.. இன்றைய க்விஸ் மற்றும் டிப்ஸ் காணும் பொழுது என்னுடைய மனதில் தோன்றிய எண்ணம்.. அதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்... நம்முடைய தோழிகள் அனைவரும், இதனை ஏற்று கொள்வார்கள் என நினைக்கிறேன்..
மேலும் கூட, ஒவ்வொரு வாரமும் , என்ன டிப்ஸ், என்ன க்விஸ் என்ன எதிர்பார்க்க வைத்து விடுகிறார் மேடம்...

மெமரி கார்ட் இல் ஸ்டோர் பண்ணி வைத்த பாடல் அடுத்து அடுத்து இதுதான் வரும் என்னும் போது ஒரு ஆர்வம் இருக்காது.. ஆனால் எஃப்எம் இல் பாடல் கேட்கும் போது அடுத்து என்ன பாடல் ஒலிபரப்புவார்கள் என்ற ஆர்வம் வரும் இல்லையா??? அது போல இருந்தது... மேடம் .. க்விஸ் அண்ட் டிப்ஸ்..... நன்றி நன்றி நன்றி..
கிளாரா கிளமெண்ட்
இன்றைய க்விஸ் ரொம்ப விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது, இன்னும் சில நாம் பயன்படுத்தவில்லை என்றாலும் தெரிந்து கொண்டது உபயோகமுள்ள செயல்தானே! அதிலும் தலையங்கம் மிக மிக அருமை, ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவோ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று விளங்குகிறது, மிக்க நன்றி மேம், எம் எம் டீமிற்கும் காம்கேர் மேடம் உங்களுக்கும் மிக்க நன்றி  வாழ்த்துக்கள்!
பிருந்தா ரமணி
இன்றைய டிப்ஸ்களைப் படித்துத் தகவல்களைத் தெரிந்து கொண்டவுடன் இன்று எல்.கே.ஜி இல் இருந்து கொஞ்சம் முன்னேறி 2 ஆம் வகுப்பு தேறிய மனோபாவம் ஏற்படுகிறது.  ஐ!  பரவாயில்லையே!  நாமும் கணினி பற்றிய பாடத்தில் இவ்வளவு தெரிந்து கொண்டு விட்டோமே என்று சந்தோஷமாக இருக்கிறது.  இதனாலேயே எப்போது புதன்கிழமை வரும் என்று ஏங்க வைக்கிறது.  அதுவும் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடனேயே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டு விடும்.  அதனால் வீட்டு வேலைகளை எல்லாம் அதற்கு ஏற்றவாறு சீக்கிரம் முடித்துக் கொண்டு வந்து கணினியில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டாக்குகிறது.  இதற்கு மூல காரணம் யார் தெரியுமா?  உங்களுக்கே தெரிந்திருக்கும்,  நம்முடைய ஆசான் புவனா மேம் தான்.  நன்றி மேம்!
மல்லிகா ஷண்முகம்
ரொம்ப உபயோகமான டிப்ஸ்.இதை எல்லாம் கேள்வி பட்டதே இல்லை.நாங்கள் புதியதாக கற்றுக் கொள்ள உதவிய புவேனேஸ்வரி மேடம் நன்றி சொல்ல கடமை பட்டி இருக்கோம்..
ராதா ரகு
சந்தேகங்கள்  கேட்பதற்க்கு  ஒரு தோழி இருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மேடம். என்னைப் போல்  புதியவர்களுக்கு…
வசுமதி கண்ணன்
23.7.14 அன்றைய  டிப்ஸ் படி, Word document இல் புகைப் படத்தை இணைத்துப் பார்த்தேன். நன்றி. இன்றைய கிவிஸ் ஸுக்கான பதிலை அனுப்ப மூளையைக் கசக்க வேண்டிய அவசியம் ஏற்படாததாக இருந்ததாலும்நேரமும் நிறையவே இருந்ததாலும், “நோ டென்ஷன்”.  தகவல்கள்கம்ப்யூட்டர் பைல்களில் மெள்ள சேவ் ஆவதைப் போல், எங்கள் மூளையில் பதியவைக்கும் பெரும்பணியை வாரந்தோறும் செய்து வரும் FRIEND-cum-TEACHER புவனா அவர்களுக்குசாட் டீம்சார்பில் வாழ்த்துக்கள்!


23-07-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...

வசுமதி கண்ணன்
விதவிதமான மொபைல்கள், டெபிட் கார்ட் கள், பல்வேறு வங்கிகளில் நெட்பாங்க் அக்கௌண்ட்ஸ் என்ற இம்மூன்றின் ஆக்கிரமிப்புகள் நம்மிடையே அதிகமாகிவிட்ட நிலையில், இன்றைய சாட் மீட்டில் அத்தனையையும் பாதுகாக்கும் வழிகளையும், பிரச்சனை நேர்ந்து விட்டால்  உடனடியாக சமாளிக்கும் பக்குவத்தையும் விளக்கிச் சொல்லியிருக்கும் விதம் அருமை! அருமை! விவரம் தெரியாமல் இருந்தவர்களுக்கு, அறிவுரையாகவும், விவரம் தெரிந்தவர்களுக்கு, கூடுதல் எச்சரிக்கையாகவும் எடுத்துக்காட்டியதற்கு எங்கள் நல்லாசிரியர் புவனா அவர்களுக்கு...’எங்களது ஸ்பெஷல் தாங்க்ஸ்!’.
ராதா ரகு
இன்றைய  தகவல்கள்  ரொம்பவும் பயனுள்ளது. இதில்  பங்கு பெரும்  வாசகிகள் மட்டும் அல்லாது. அவர்கள் மூலம்  அவர்களின் தோழிகள் , குடும்பத்தவர்  என்று  அனைவருக்கும்  பயன் உண்டு. அவர்களுக்கு தெரியவில்லை  என்றால் நாம் உதவி செய்யலாமே. ரொம்பவும் நன்றி மேடம். மிகவும் உபயோகமான  தகவல்கள்  கொடுத்ததற்கு.
பிருந்தா ரமணி
இன்னிக்கு நாங்க நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.  ATM  சம்பந்தப்பட்டதில் CVV இது வரை கேள்விப்படாத ஒன்று.  ஏனென்றால் நான் இதுவரை கையாண்டதில்லை.  மற்றபடி அது சம்பந்தமான விஷயங்கள் என் மகளுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் மொபைல் போன் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.   IMEI  எண் கூடக் கண்டுபிடிக்கத் தெரியும்.  மற்ற விஷயங்கள் எல்லாம் புதிது தான்.  அப்பப்பா!  எவ்வளவு விஷயங்கள் இன்று தெரிந்து கொண்டோம்.  புவனா மேடத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
கிளாரா கிளமெண்ட்
இன்றைய விவரங்கள் மிகுந்த பயனுள்ளவை ஒரே திரில்லிங் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி காம்கேர் மேடம் அணட் எம்எம் ஸ்மார்ட்லேடி டீம்
லஷ்மி தேவி
இன்றைய சாட் ப்ரோக்ராம்மில் குடுத்த தகவல்கள் அனைத்தும் மிகவும் முக்கியமாக கவனித்து கொள்ள வேண்டியவை.. நாமும் "இந்த அவசர தொழில்நுட்ப யுகத்தில்" இந்டெர்னெட் மூலம் e டிக்கெட் புக்கிங், EB பில் கட்டணம், ஆன்லைன் ரீசார்ஜ் , ஆன்லைன் பர்சேஸ் எல்லாமும் செய்ய முடியும் என்பதை அறிந்து கொண்டோம்.. பக்கத்தில் இருந்து சொல்லிதருவதை போல, அன்பும், அரவணைப்புமாய் சொல்லி தந்த புவனா மேடம் க்கு நன்றிகள்.. பற்பல... எளிமையான வார்தைகள்.. வலிமையான தகவல்கள்.. தட்ஸ் தி ஸ்பெஷல் ஆஃப் மேடம் !!!!
23-07-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
மல்லிகா ஷண்முகம்
நான் இரண்டு வாரங்கள் கழித்து இன்று தான் சாட்இல் கலந்துக் கொண்டேன்ரொம்ப திருப்த்தியாக இருந்தது. எவ்வளவு எளுமையாக சொல்லித் தரமுடியுமோ புரிகிற மாதிரி சொல்லித் தறாங்க. நாங்கள் ஆரம்ப பள்ளிக்கூட மாணவர்கள் போல விளையாட்டாக கற்றுக் கொள்ளுகிறோம்.நன்றி மேடம்
ராதா ரகு
நன்றி மேடம். பள்ளிகளில் நடத்தூவதை , எவ்வளவு மனதில் பதிந்தது என்பதை டெஸ்ட் வைப்பதைப் போலே , நீங்கள் உடனே தேர்வு வைக்கிறீர்கள். ஓரளவு மற்றவர்களிடம்  சொல்லிக்கொள்ளும் அளவு கம்ப்யூட்டர் அறிவு வளர்ந்திருக்கிறது என்றால் அதன் காரணம் மங்கையர் மலர் தான் மேடம்
ரஜினி பாலா
ஒவ்வொரு புதன்கிழமையும்  புதிய செய்திகளை ப் பொறுமையுடன் விளக்கம் தருவதோடு அல்லாமல் வலைப்பூவின் தலையங்கம் மூலம்  சிந்திக்கவும் வைப்பதற்கு மிக்கநன்றி!
வசுமதி கண்ணன்
போன வார சாட் மீட்டில் யூட்யூப் மூலம் வீடியோ அப்லோட் செய்து அனுப்புவது பற்றி தெரிந்து கொண்டதால், ஓர் வீடியோ வை வெற்றிகரமாக என் கிட்டின உறவுகளுக்கு அனுப்பினேன். உதவியதற்கு நன்றி.
இன்றைய க்விஸ்ஸிற்கான தீர்வை  உங்களது டிப்ஸ் மூலம்  எளிதாக கண்டு கொண்டோம். அது போலசீண்டும் மனிதன்...சீறும்  இயற்கைஎன்ற இன்றைய தலையங்கத்தில் அக்கு வேறு ஆணி வேறாக அழுந்த  எடுத்துச் சொல்லி யிருக்கும் (நுனிக் கிளைகளை கழிப்பதைவிட, ஆணி வேரோடு பிடுங்கி எறியவேண்டியஅவலங்களுக்கான  தீர்வை சம்பந்தப் பட்டவர்கள் செய்ய முன் (வரவேண்டும்). வருவார்களா??????????  கணினியோடு, மனிதவளத்தையும் அடிக்கடி  கோடிட்டுக் காட்டும் ஆசிரியை புவனா வின் அரும்பணி போற்றத்தக்கதே!
பிருந்தா ரமணி
இன்னிக்கு குவிஸ் ரொம்பவுமே இன்டரெஸ்டிங் ஆக இருந்ததுஏதோ ஓரளவு தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தவுடன் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்திருக்கிறதுஇப்படியே புவனா மேடத்தின் துணையோடு கற்றுக் கொண்டால் நாங்களும் ஓரளவு கணினித் துறையில் நிபுணத்துவம் பெற்று விடுவோம்அந்த நாள் சீக்கிரமே வந்து விடும் நன்றி மேம்
All the credit goes to our beloved Bhuvana Mam!
16-07-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
பிருந்தா ரமணி
மேம்இன்னிக்கு எங்களை மிகவும் சிந்திக்க வைத்து விட்டீர்கள்இவ்வளவு நாள் L . K . G  லெவலில் இருந்த எங்களை இன்று ஒரேயடியாகப் பத்தாம் வகுப்பில் கொண்டு போய் உட்கார்த்தி வைத்து விட்டீர்கள்கண் விழிகள் பிதுங்கி விட்டனஇருந்தாலும் நாங்கள் தப்பாகவே பதில் தந்திருந்தாலும் நீங்கள் அவைகளுக்கு எளிமையான முறையில் பதில்களைத் தந்து எங்களை உயர்த்தி விடுவீர்கள்அதில் எந்தச் சந்தேகமும் இல்லைதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
வசுமதி கண்ணன்
எக்ஸாம் ஹாலில், கடைசி நிமிடம் வரை answer paper ரை திரும்ப திரும்ப பார்த்து, நான் எழுதிய பதில் சரியா? தவறா? என்று அரை மனதாக கொடுக்கும் மாணவியின் நிலையில், இன்றைய  க்விஸ் ஸூக்கான பதிலைக் கொடுத்திருந்தேன். கற்றுக்கொள்ளும் முயற்சியில்  வெற்றி -  தோல்வி களுக்கு இடமில்லை  என நினைக்கையில் மனம் உவகை கொள்கிறது. இதெல்லாம் சாத்தியமாவது யாரால? எங்கள் புவனா அவர்களால் தான்!
09-07-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
ரஜினி பாலா
கம்ப்யூட்டர் குறித்து சில புதிய விஷயங்களை இன்றைய சாட்டில் தெரிந்து கொள்ள முடிந்தது.  கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை  என்பதை இந்த சாட் மீட் மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறது. மிக்க நன்றி.
கிளாரா கிளமண்ட்
இரண்டு வாரங்களாக சாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மிகவும் மிஸ் பண்ணினேன். ஒரு வாரம் காய்ச்சல், இறங்கு நாள் கழித்து மொபைல் பார்த்தால் ஹாய் மேடம் என்று புவனேஸ்வரி மேடம்  மெசேஜ் அனுப்பி இருந்தாங்க. நம்மை இவ்வளவு கேர் பண்ணும் ஒரு தோழி இவங்கன்னு தோன்றியது. இந்த வாரம் பல விஷயங்களை கற்றுக்கொடுத்த  மேடத்திற்கு நன்றி, ரிவைஸ் பண்ண வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி ஸ்மார்ட் லேடி மற்றும் புவனா மேடம். டீமுக்கு.
சொர்ணாம்பிகை எட்வர்ட்
அறிவை வளர்க்கும் அறிவு பெட்டகம் - புதன் கிழமை சாட்-மீட்
ராதா ரகு
புதியதாக நிறைய  கற்றுக் கொள்ள முடிகிறது. ரொம்ப உபயோகமாக உள்ளது. இரண்டு நாடக ளாயே உடல் நிலை சரி இல்லாத  போதும் நான் இதில் உட்காரும் அளவு என்னை ஈர்துவிட்டதுI
பார்வதி ராமசந்திரன்
நிறைய புது விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம்.. இதை விட எளிமையாகச் சொல்லித் தருவது கடினம்.. நன்றாக நினைவில் நிற்குமாறு சொல்லித் தருகிறீர்கள்.. மிக்க நன்றி தங்களுக்கு.

03-07-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
பிருந்தா ரமணி
இப்படி நீங்கள் வித்தியாசமான முறையில் குவிஸ் வைப்பதால் நாங்கள்
அதற்கான பதில்களை google இல் போய் தேடிக் கண்டுபிடித்து அவைகளைப்
பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறதுஅதோடு நீங்கள்
எளிமையான முறையில் டிப்ஸ் தரும்போது இன்னும் பூரணமான முறையில் தெரிந்து கொள்ள முடிகிறதுநன்றி மேம்!
வசுமதி கண்ணன்
அன்று வறியவர்களுக்கு வறுமையைப் போக்க பொன், பொருளை வாரி வழங்கிய (கடந்த கால) கொடை வள்ளல் கர்ணன் இருந்தது போல், இன்று... மகளிரின் கணினி கல்வியறிவை மேம்படுத்த அறிவொளி  வள்ளலாய் கிடைத்தவர் ( நிகழ் கால)   குரு - புவனா என்பதை    கூறிக் கொள்ளுவதில் பெறு மகிழ்ச்சி அடைகிறது mmsmart lady team!

25-06-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
வசுமதி கண்ணன்

இன்றைய  விண்டோ சாட்டில் இடம் பெறப்போகும் சப்ஜெக்ட் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் நண்பரை நினைவு கூர்ந்து, மகிழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது இன்றைய MS EXCEL TIPS & QUIZ. “இதெல்லாம் யாரால்?” என்பதை... புதன் ஸ்பெஷல் புவனா வைத் தவிர வேறு யாரால்?” என்பதை சொல்லவும் வேண்டுமோ?
மல்லிகா ஷண்முகம்
இன்றைய சாட்இல் ஆன்லைன் கிளாஸ் சூப்பர் மேடம்.எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லித் தருவதருவதற்கு எவ்வளவு முயற்சி செய்கிறார்கள். மேடம் உங்களுக்கு பாராட்டுக்கள். உங்களால் நாங்கள் கணனியில் வார வாரம் புதுமையாக கற்றுக் கொள்ளுகிறோம். நன்றி.

18-06-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...

திருமிகு. வசுமதி கண்ணன்
வாசகிகளுக்கு, இலவசமாக, விவரங்களை எடுத்துக் காட்டி, அதிலிருந்து கேட்கும் கேள்விகளை  வாராவாரம் .க்விஸ் மூலம் எங்களை அறிவுப் பரிசோதனைக்கு உட்படுத்தி உற்சாகப் படுத்தி   அசத்தும் பெருமை அனைத்தும் ஸ்மார்ட் லேடி புகழ் புவனா அவர்களையே சாரும்.

திருமிகு. மல்லிகா சண்முகம்
இன்றைய க்விஸ் ஒரு REVISION TEST மாதிரி இருந்தது. எங்களுக்கு நீங்கள் கொடுத்த பழைய டிப்ஸ் REVISE பண்ண உதவியாக இருந்தது. எங்கள் ஞாபகசக்திக்கு நல்ல ட்ரைனிங் கொடுத்தீர்கள்.நன்றி  மேடம். இதற்க்கு . நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ தெரியலையே?

திருமிகு. கிரிஜா சாரதி
I am not well last 10days. So I take rest in my daughter's house. There is network problem. So I came back yesterday night, because of today wednsday. How can l explain my feeling? Th. Mam

திருமிகு. பார்வதி ராமசந்திரன்
எளிமையான அழகான பயிற்றுவிக்கு முறை!.. மிக எளிதாக நினைவுகூரும் வகையில் குறிப்புகள் தந்து சொல்லித் தருகிறீர்கள்!..மிகப் பயனுள்ள, போற்றத் தகுந்த முயற்சி இது!.. நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடியாது!.. எனினும் எங்கள் இதயங்கனிந்த நன்றி!
திருமிகு. கிளாரா கிளமென்ட் 
எம் எம் ஸ்மார்ட் லேடீஸ்  குவிஸ் ரொம்ப வித்தியாசம் இந்த முறை, கடந்த வார பாடங்களையும் ரிவைஸ் பண்ண வைத்துவிட்டார்  நம்ம மேடம். எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் படித்தது கொஞ்சம் ஞாபகத்தில் இருந்ததால் ஈசியாக இருந்தது. இதனால் மேலும் அழுத்தமாக விவரங்கள் மனதில் பதிந்தது, உண்மையிலேயே மிகவும் ஸ்மார்டாக நம்மை மாற்றும் நிகழ்ச்சி. நன்றி மேடம். நன்றி எம் எம் ஸ்மார்ட் லேடி டீம்.!

11-06-2014 - ஃபேஸ்புக் சாட்-மீட் பற்றி வாசகிகள் கருத்து...
திருமிகு. வசுமதி கண்ணன்
இன்றைய க்விஸ், எனக்கென்று கம்ப்யூட்டர் அளிக்கப் படாத நிலையில், லஞ்ச் டயத்திலும், மற்றும் கிடைக்கும் தருணங்களிலெல்லாம், M S Word ஐ தட்டுத் தடுமாறி கற்றுக் கொண்ட... என் அலுவலக அனுபவங்களை  நினைக்கும் இலவச மலரும் நினைவாக கண் முன் நிறுத்திய இந்நாள் (11.6.2014) புதனோடு சேர்ந்த பொன்னாள். இதனை உருவாக்கிகொடுத்த குரு. புவனாவுக்கு என் மனமார்ந்த  நன்றிகள்!.

திருமிகு. சொர்ணாம்பிகை எட்வர்ட்
அறிவை தேடும் புதையலில் இன்றை கணினி உலகில் பல விபரம் சொல்லி பாதையை தரும் இந்த மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி க்கு ஒரு சல்யூட்.
திருமிகு. பிருந்தா ரமணி
என்னைப் போன்றவர்களுக்குக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும்
வெளியே வகுப்புகளுக்குப் போய்ப் படிப்பது என்பது பல வழிகளில்
முடியாத காரியம்இது போல வீட்டில் இருந்தபடியே அதுவும் நீங்கள்
உங்கள் நேரத்தையும் எங்களுக்காகச் செலவிட்டு, இலவசமாகச் சொல்லித்
தருகிறீர்கள்இது நாங்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.
திருமிகு. கிளாரா கிளமென்ட் 
ஸ்மார்ட் லேடிக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். இந்த சாட் கம் குவிஸ் டைம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமா எங்களை ரொம்ப ஸ்மார்டாக மாற்றிக்கொண்டே வருகிறது. வீட்டில் இருப்பவர்கள் இப்போது நம்மை ஒரு விதமாகத்தான் பார்க்கிறார்கள்! என்னடா இவ கம்ப்யுட்டரில் முன்னேறிக்கொண்டே வருகிறாளே என்று. தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்து வரும் ஸ்மார்ட் லேடி டீம் மற்றும் காம்கேர் மேடமுக்கும் இதயபூர்வமான நன்றி நன்றி நன்றி!
திருமிகு. லஷ்மி தேவி 
கல்வி கண் திறக்கும் ஆசானாய்
கண்டிப்பு இல்லாத நல் ஆசிரியராய்
கற்ற வித்தை பயன்படுத்தி பெயர் பெற வைக்கும்
நல் மாணவணாய் - எங்களை
மாற்றிய மங்கையர் மலர் - ஸ்மார்ட் லேடி
ஒவ்வொருவாரம் - ஆரவாரம்
அமர்களமாய் அனைத்து தகவல்கள்
அரவணைத்து அழைத்துசெல்லும்...
கற்றதை செயல் படுத்தி பார்க்கும் குவிஸ்!!!
எல்லோருக்கும் முன்னோடி.. எங்கள் ஸ்மார்ட்லேடி!!!!
04-06-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
கிரிஜா சாரதி
இன்றைய  பதிலும்  பின்பு  வந்த  கேள்வியும் அருமை . புதன்  கிழமை  2to 4 பயனுள்ள  நேரமாக  கழிகிறது . இந்த  டிப்ஸ்  என்றும்  நமக்கு  உதவும் . வயது  கூடுகிறதோ  இல்லையோ  இந்த  ஒரு  வருடத்தில்  அறிவும்  அனுபவமும்  கூடியுள்ளது . எல்லாம்  ஸ்மார்ட்லடி யின் கருணையால் தான்.  புவனா  மேடமுக்கும்  நன்றி
வசுமதி கண்ணன்
மேலெழுந்தவாரியான விவரங்களை, ஆழப் புதுப்பித்து, க்விஸ் மூலம், எங்களது அறிவைப் பட்டை தீட்ட, RivisionTest கொடுத்து வரும் ஆசிரியை புவனாவின் சேவை... எங்களுக்கு என்றென்றும் தேவை.
மல்லிகா ஷண்முகம்
க்விஸ் ரொம்ப interestingஆக போய் கொண்டு இருக்கிறது. எளிதில் புரியும் வகையில் சின்ன ஆன்லைன் வகுப்பு எடுத்து, எங்களுக்கு கசப்பான மருந்தை தேனில் கலந்துக் கொடுப்பதைப் போல் கணனி பற்றிய தகவல்களை கொடுத்து, அதற்கு சின்ன க்விஸ் வைத்து எங்களை சந்தோஷப் படுத்திகிறீர்கள்.ரொம்ப அசத்துகிறீர்கள் மேடம். நன்றி..
பிருந்தா ரமணி
தாயினும் சாலப் பரிந்து" என்பது போல எங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊன்றிக் கவனித்து நீங்கள் அக்கறை காட்டுவது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.  நன்றி மேம்!
28-05-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
சொர்ணாம்பிகை எட்வர்ட்
திருக்குறள் போல நச் என்று 
ஷார்ட் கட் keys சொல்லி கொடுத்த க்விஸ் வாழ்க
கிரிஜா சாரதி
பள்ளி  மாணவர்களுக்கு வருடத்திற்கு  காலாண்டு , அரையாண்டு , முழு  ஆண்டு  தேர்வுதான்  டென்ஷன் . ஆனால்  எங்களுக்கோ  52 வாரமும்  டென்ஷன் தான் .  ஆனால்  இது  இன்பம்  கலந்த  டென்ஷன் . எல்லா  புதனும்  2 to  3 தேர்வு தான் ரிசல்ட் தான் . எங்கள்  பெயர்  வந்தாலோ  குஷி தான்  . பொன்  கிடைத்தாலும்  புதன்  கிடைக்காது  என்பார்கள் . எங்களுக்கோ  பொன்னும்  கிடைத்து  அறிவுக்கு தீனியும் கிடைத்தது  அதிர்ஷ்டம் தான் . நன்றி 
வசுமதி கண்ணன்
தூக்கம் கண்களை ஆக்கிரமிக்கும் நேரத்தை, லாவகமாகப் புறந்தள்ளி, “தூக்கத்தை விட, சாட் மீட்டிங்கே மேலானது என்று... கணினியின் முன் அமரச் செய்து, கற்கும் ஆர்வத்தைத் தூண்டுமளவுக்கு, சிறப்பு செய்யும் , புவனா மேடத்தின் அரும்பணியினை மனதாரப் பாராட்டுகிறேன்.
14-05-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
வசுமதி கண்ணன்
இன்றைய க்விஸ், புத்தகத்தைப் புரட்டத் தேவையில்லாமல், மனதில் பதிந்த கருத்துக் களஞ்சியத்தை சற்று கலைத்துப் போடச் செய்தது. யோசிக்க, டைப் அடிக்க, என்று நேரம் பிரித்து செயல் பட்டதால், “நோ டென்ஷன்”. எங்களுக்குள் குவியும் சிறு சிறு அறிவுத் துகள்களுக்கு சொந்தக்காரரான புதன் ஸ்பெஷல் புவனா மேடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!.
வசுமதி கண்ணன்
இன்றைய க்விஸ், எனக்கென்று கம்ப்யூட்டர் அளிக்கப் படாத நிலையில், லஞ்ச் டயத்திலும், மற்றும் கிடைக்கும் தருணங்களிலெல்லாம், M S Word ஐ தட்டுத் தடுமாறி கற்றுக் கொண்ட... என் அலுவலக அனுபவங்களை  நினைக்கும் இலவச மலரும் நினைவாக கண் முன் நிறுத்திய இந்நாள் (11.6.2014) புதனோடு சேர்ந்த பொன்னாள். இதனை உருவாக்கிகொடுத்த குரு. புவனாவுக்கு என் மனமார்ந்த  நன்றிகள்!
07-05-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
வசுமதி கண்ணன்
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. 
“வாரா  வாரம் புதனும் கிடைக்கும் கூடவே மங்கயர் மலரின் ஸ்மார்ட் லேடி மலர் தரும் அறிவென்ற வாசமும்  கிடைக்கும் என்பது புது மொழி. புதுப் புது பாணியில் கேள்வி மலர்களை எங்களிடம் கேட்டு, இருக்கும் பதில் குவியல்களிலுருந்து, வேண்டியதை எடுத்து மாலையாக்கி நாங்கள் கொடுத்தத்தைக் கண்டு, நிறை குறைகளை பிரித்தெடுத்து சொல்லி,  தானும் மகிழ்ந்து, பங்கேற்றவர்களையும் உற்சாகமாக மகிழ்விக்கும் நினது பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்!.
மல்லிகா ஷண்முகம்
ஸ்மார்ட் லேடி 
ஸ்மார்ட் லேடி எங்கள் நண்பி 
புதன் கிழமைதோறும் சட்டிங்க்கும், க்விஸ்க்கும் எதிர்பார்க்கும் நாங்கள் 
வாரத்தில் புதன் கிழமையே ஸ்பெஷல் ஆக்கிவிட்ட ஸ்மார்ட் லேடி  
எங்கள் கணனி அறிவை வளர்க்கும் ஸ்மார்ட் லேடி 
எங்களை படைப்பாளி ஆக்கியது ஸ்மார்ட் லேடி 
எங்கள் சந்தேகத்தை தீர்க்கும் ஸ்மார்ட் லேடி 
க்விஸில் கலந்துக் கொள்ள தூண்டும் ஸ்மார்ட் லேடி 
க்விஸின் பதிலை எளிய முறையில் எடுத்து சொல்லும் விதமே அவளுடைய தனித்துவம் 
வெற்றி பெற்றவர்கள்இன் முகநூலில் போடும் போது எங்களுக்கு கிடைத்தது சந்தோஷம் 
வெற்றி பெற்றவர்களின் தனித்தனியே வாழ்த்துக்கள் சொல்லும் விதமே ஸமார்ட் லேடியின் தனித்துவம். 
எங்களுக்கு ஊக்கத்தை அளித்திடும் ஸ்மார்ட் லேடி 
எத்தனை முறை நன்றி சொன்னாலும் மிகையாகாது
மங்கையர் மலரின் வாசகிகளர்ளின் புண்ணியமும் ,ஆசீர்வாதமும் தேடிக் கொள்ளுகிறாள்
எங்களை கணனி அறிவை வளர்க்கும் ஸ்மார்ட் லேடிக்கு நன்றியை தவிர வேறு வார்த்தை இல்லை 
ஒவ்வொரு புதன் கிழமை ஸ்மார்ட் லேடி இரயில் ஓடுகிறது 
நாங்கள் ஸ்மார்ட் லேடி இரயிலில் பயணம் செய்கிறோம் 
அதில்  இஞ்ஜின்நாக இருப்பது ஸ்மார்ட் லேடி, 
அதை தொடரும் இரயில் பெட்டிகள் நாங்கள் 
ஸ்மார்ட் லேடி இரயிலை என்றும் தவற விடமாட்டோம்
எங்கள் கணனி அறிவு மேம்படட்டும்
ஸ்மார்ட் லேடி என்றும் நேசிப்போம்
ஸ்மார்ட் லேடி வாழ்க வளமுடன் .உங்கள் பணி தொடரட்டும்
வாழ்த்துக்கள் எங்கள் ஸ்மார்ட் லேடி புவனஸ்வரி மேடம்.

30-04-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
கிரிஜா சாரதி
ஹாய் , என்றுமே எனக்கு  புதன்  ஸ்பெஷல் தான் . நேற்று  உங்கள்  நேர  மாற்ற  அறிவிப்பை  பார்த்ததும்  என்  டென்ஷன்  அதிகரித்தது . நானும்  என்  காலை  நேரவேலைகளை  எப்படி  மாற்றி  அமைக்கலாம்  என்று  நேற்றே  பிளான்  செய்தேன் . பிரேக்  பாஸ்ட் , லஞ்ச்  பூஜை  எல்லாவற்றயும்  எளிமை யாக்கி ,நடை பயிற்சி  கான்சல் செய்து  டைம்  அட்ஜஸ்ட்  செய்தேன் . இந்த  அளவு  ஸ்மார்ட்லடி  என்னை  ADDICT  செய்து விட்டது . நன்றி
சொர்ணாம்பிகை எட்வர்ட்
தொழில்நுட்ப வார்த்தைகளை எல்லாம் இந்த க்விஸ்கக்கவே தேடி தேடி படித்து வருகிறேன் பள்ளிக்கூடம் போல.....
பிருந்தா ரமணி
இன்னும் சொல்லப் போனால் எல்.கே.ஜி சிறுமியைப் போல அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இந்த இரண்டு மணி நேரமும்.  எதிர்பார்ப்பு, படபடப்பு, ஆவல், ரிசல்ட் அறிவித்த பிறகு மகிழ்ச்சி.  சூப்பர் தான் போங்கள்.
23-04-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
வசுமதி கண்ணன்
தெரியாத பதிலைத் தேடிப் பிடித்து (தேடும் கலையை கற்றுக் கொடுத்ததால்) மனப் பாடம் செய்யாதத்தை பார்த்து எழுதி, மனதில் பதிந்ததை சட்டென கண்டு பிடித்து இப்படி பல விதங்களில் தொகுத்ததை புவனா மேடத்திற்கு அனுப்பி வைக்கும்போது, ஏதோ... நம்ம வீட்டுக் கல்யாணத்துல சுறு சுறுப்பா, ஓடி ஓடி வேலை செய்த மகிழ்வை  ஏற்படுத்தி விட்டது. காயும் வெயிலில், புகழ் மழையால் அனைவரையும் குளிர வைத்து விட்டீர்களே!
பிருந்தா ரமணி
இப்படி நீங்க ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கவனித்து ஊக்கப்படுத்துவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தாங்கள் அளிக்கின்ற பதில்கள் என்னைப் போன்றோர்க்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கின்றன.  நன்றி.
16-04-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
கிரிஜா சாரதி
இன்றைய  வலைப் பூவின்  அனைத்து  செய்தி களுமே  நாங்கள்  அறியாதது .என்னுடைய  பொது  அறிவு வளர  வலை பூவும்  காரணம்  இந்த  வலை  என்னை உங்களோடு பின்னி  பிணைத்த  வலை
பிருந்தா ரமணி
ஏகப்பட்ட பகுதிகள் அப்பப்பா!  கருத்துக்கள் நிறையப் பதிவு செய்யலாம்.
நிறையப் படித்தும் தெரிந்து கொள்ளலாம்.
மல்லிகா சண்முகம்
வார வார புதன். கிழ்மைக் காத்திருப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கு.தினமும் 2-4 சாட் வைத்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷ்மாக இருக்கும்.
உங்களலால் கம்ப்யூட்டர் பற்றிய தகவல்களை கொடுத்து மேலும் கற்றுக் கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது.ரொம்ப நன்றி சொன்னாலும் மிகைஆகாது.
நான் இதுக்கக்காகவே ஒரு diairyஇல் குறித்து வருகிறேன். க்விஸ் பதில்களை எழுதி வருகிறேன். iநன்றி மேடம்.
கீதா சுந்தர்
உங்களால் என்னுடைய தொழில் நுட்ப அறிவு விரிவடைந்துள்ளது. உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டியில் கலந்து கொள்வதால் பலவற்றையும் தெரிந்து கொள்ள பயனாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு இந்த போட்டி நல்ல சவாலாக உள்ளது. இதை மேலும் தொடர என் வாழ்த்துகள். நன்றி.
சொர்ணாம்பிகை எட்வர்ட்
ஸ்மார்ட் லேடி பிளாக்-திறமைக்கு தீனி போடும் சவால்.... இந்தவலைப்பூ எங்கள் மத்தாப்பு

09-04-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
லஷ்மி தேவி

02-04-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
சொர்ணாம்பிகை எட்வர்ட்
நம் ஸ்மார்ட் லேடி எங்களை எல்லாம் ஸ்மார்ட் ஆக்க கேட்கும் கேள்விகளும் சொல்லிதரும் விசயங்களும் அடி தூள் தான்
சித்ரா ராஜ்
now a days iam becoming smart in the computer.you only have made me won in today s quiz. thank you so much s m lady. so much of straining you are taking to make us smart .thank you so much mam.
கிளாரா கிளெமெண்ட்
ஒவ்வொரு வாரமும் எனக்காக  ஒரு தோழி காத்திருப்பது போல் உணர்கிறேன்  அந்த  தோழியின் மூலம் அநேக தோழிகள்  பாசத்துடன் எங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள இந்த சாட்டிங் நேரம்  ஒரு தங்கமான நேரம்

ஒவ்வொரு வாரமும் இந்த நேரத்தை நழுவ விடக்கூடாது என்று மனதுக்குள் தோன்றுகிறது ஸ்மார்ட் லேடி மற்றும் காம்கேர் புவனேஸ்வரி மேடமுக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்...
கிரிஜா சாரதி
இந்த ஒரு  வருட குவிஸ்  புரோகிராமில்  இன்று  போல்  நான்  டென்ஷன் ஆனதே  இல்லை. அந்தளவு  திரில்  ஆக  இருந்தது .நேரம்  ஆகிறதே  என்று கவலை. உங்கள்  குவிஸ் காக  நோட்  தயார் செய்து  வைத்துள்ளேன். அதை  ரெபர்  செய்ய  டைம்  ஆகிவிட்டது .எனிவே  தே ன் க்யு  மேடம்.

26-03-2014 - ஃபேஸ்புக் சாட் பற்றி வாசகிகள் கருத்து...
Ms. பிருந்தா ரமணி
உண்மையிலேயே நீங்கள் வைக்கும் குவிஸ் ரொம்பவும்
திரில்லிங் ஆகவும், அறிவு சார்ந்த விஷயமாகவும்
இருக்கிறது.  பாராட்டுக்கள்.  தொடரட்டும் தங்கள் பணி!
ஒவ்வொரு வாரமும் நீங்கள் என்ன குவிஸ் வைப்பீர்கள்
என்று எங்களை ஆர்வத்துடன்  ஏங்க வைக்கிறது.
Ms. மல்லிகா ஷண்முகம்
இந்த வார க்விஸ் கஷ்டமாக. தான்இருந்த்தது. இருந்தாலும் எங்களால் முடிந்தவரை பதில் கொடுத்தோம்.ரொம்ப திரில்லாக இருந்த்தது. அடுத்த வாரமும் இதே மாதிரி புதுமையாக எதிர்பார்க்கிறோம்.நிறைய உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுகிறோம். நன்றி மேடம்..

19-03-2014, புதன் கிழமை ஃபேஸ்புக் சாட்டிங் பற்றி வாசகிகள் கருத்து....
Ms. கிரிஜா சாரதி
மிகவும்  அறிவுபூர்வமாக  இருந்தது . என்னுடைய  63 வயதில்  என்  கம்ப்யூட்டர்  நாலெட்ஜ்   அதிகமானதற்கு  காரணமே ஸ்மார்ட்லடியும்  மங்கையர் மலரும் தான் . எப்படி நன்றி  சொல்வேன் . புதன் கிழமை 2மணியானால் ஒரு  ஆர்வமும்  பரபரப்பும்  வந்து விடும் . நான்  தமிழில் டைப்  செய்ய  கற்று  கொண்டதே உங்கள்  முயற்சியால்தான் .என்னுடைய  இந்த  வளர்ச்சிக்கு  என் மகள் மகன்  அண்ட்  மருமகளும்  உறு துணையாய் இருக்கின்றனர் . வேறு  என்ன  சொல்ல . நன்றிநன்றி
Ms. மல்லிகா சண்முகம்
இன்றைய முதல் க்விஸ் புதுமையாக இருந்தது. கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.எங்கள் மூளைக்கு நல்ல வேலை.2ஆவது க்விஸ் எப்பவும் மாதிரி இருந்தது.நாங்கள் வார வாரம் இது மாதிரியான க்விஸ் எதிர்பாக்கிறோம்.QUIZயால் நாங்கள் நிறைய கற்றுக் கொள்ளுகிறோம்..நன்றி மேடம்.
Ms. லஷ்மி தேவி
குவிஸ் த்ரில்லிங் ஆக இருக்கு மேடம் .. புது புது விஷயங்கள் கத்துக்கறோம்.
ஃபேஸ்புக் சாட்டிங் பற்றி வாசகிகள் கருத்து....
-ரா. சொர்ணாம்பிகை எட்வர்ட்

     சாதாரண இல்லத்தரசியாக இருந்தவள் நான். கொஞ்சம் கொஞ்சம் கவிதைகள் மற்றும் என் அனுபவங்களை எழுதுவேன். அதை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது இல்லை. ஆனால், எனக்கு மங்கையர் மலர் என் மகள் மூலம் அறிமுகம் ஆனது. அதன் பின்னர் தான் நான் என் படைப்புகளை எல்லாம் அனுப்பினேன். அதை பிரசுர படுத்தி என்னை ஊக்கப்படுத்தினர். ஆனால், ஸ்மார்ட் லேடி மூலம் தமிழில் என் முக நூலில் என் படைப்புகளை எல்லாம் அரங்கேற்ற முடிந்தது. என் மகள், மங்கையர் மலர், ஸ்மார்ட் லேடி புவனேஸ்வரி அம்மா எல்லாரும் தான் காரணம். என் சூழலில் எனக்கு என் எழுத்து மட்டும் தான் ஆறுதல்..... எனக்கு ஆறுதல் தரும் நம்பிக்கை தரும் அனைவருக்கும் நன்றி.
     நான் 8-ஆம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன் ஆனால் இது எல்லாம் சாத்தியம் தான் எல்லாம் என் குடும்பம் மற்றும் என் நம்பிக்கையால் தான்.