முக்கிய இனிய அறிவிப்பு............
கல்கி வார இதழில் 3.8.2014 முதல் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதின தொடர் வாரந்தோறும் வரவிருக்கிறது.
மூன்று வருடங்கள் இந்தத்தொடர் தொடர்ச்சியாக கல்கி வார இதழில் இடம் பெறும்..
கல்கி வார இதழில் 3.8.2014 முதல் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதின தொடர் வாரந்தோறும் வரவிருக்கிறது.
மூன்று வருடங்கள் இந்தத்தொடர் தொடர்ச்சியாக கல்கி வார இதழில் இடம் பெறும்..
இடம்: கல்கி அலுவலகம்
நாள்: 16-04-2014 - புதன் கிழமை
மார்ச் மாத மங்கையர் மலர் இதழில் ஜி.எஸ்.எஸ் 'சிறகடித்துப் பறப்போம்' என்ற தலைப்பில் மாணவர்களின் மேற்படிப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு விடை அளித்தார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஏற்படக்கூறிய சந்தேகங்களுக்கு நேரில் விளக்கம் அளிக்க உள்ளார். கல்கி அலுவலகத்தில் நடக்கவிருக்கும் இந்த ஒன் டே வொர்க்ஷாப்பில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்...முன் பதிவுக் கட்டணம் ரூ.100 வரும் 16.04.2014 (புதன்கிழமை) காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை.
மேல் படிப்பு மற்றும்வேலை வாய்ப்பு தொடர்பாக சில இளைய தலைமுறையினர் கேட்ட சில கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் பிறருக்கும் பயனளிக்கக் கூடியவை.
* எனக்குப் பேச்சுத் திறமை கிடையாது. ஆனாலும் சட்டப் படிப்பில் ஆர்வம் உண்டு. சட்டக் கல்வி எனக்கு ஒத்துப் போகுமா?
‘’கனம் கோர்ட்டார் அவர்களே” என்று தொண்டை கிழிய நீதிமன்றத்தில் பேசுவது மட்டுமே வழக்கறிஞர்களின் வேலை அல்ல. சட்ட உதவிக்காக தன்னிடம் வருபவர்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். எந்தவிதத்தில் செயல்பட்டு அந்த உரிமையை நிலைநாட்டலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்ல வேண்டும். ஒப்பந்தம், உயில் போன்றவற்றை எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதில் ஆலோசனை கூற வேண்டியிருக்கலாம்.
வழக்கறிஞர்களைப் பொருத்தவரை அவர்கள் படித்த படிப்பு உதவுவதைவிட, அவர்கள் பெறும் அனுபவம்தான் அதிகம் உதவும். எனவே திறமையுள்ள சீனியர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளராக சில வருடங்கள் பயிற்சி பெறுவது நல்லது. சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், தொழிலாளர் சட்டம், வரி சட்டம், சர்வதேச சட்டம் என்பது போன்ற பல பிரிவுகளில் நீங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஸ்பெஷலைஸ் செய்யலாம்.
சொல்லப் போனால் நீதிமன்றத்திற்கே வராமல், நிறைய சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள் உண்டு. பிரபல நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருக்கலாம். டிரஸ்டுகளுக்கு டிரஸ்டியாகச் செயல்படலாம்.
* பப்ளிக் ரிலேஷன்ஸ் பதவிக்கென்று படிப்பு ஏதாவது உண்டா?
மக்கள் தொடர்புப் பணியில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள். சூழலை சட்டென்று கிரகித்துக் கொள்ளும் தன்மையும், சரியான தகவல் பரிமாற்றமும்தான். எனவே உங்களால் சரளமாகவும், தெளிவாகவும் பேச முடிகிறது, பிரச்னைகளை உடனுக்குடன் புரிந்து கொண்டு முடிவெடுக்க முடிகிறது என்றால் தாராளமாக நீங்கள் பி.ஆர்.ஓ. ஆகலாம். ஊடகங்களிலும், பெரும் நிறுவனங்களிலும் இந்த வாய்ப்புகள் நிறைய உள்ளன. கார்ப்பரேட் கம்யூனிகேஷன் எனும் படிப்பும், எம்.பி.ஏ.வை சிறப்புப் பிரிவாக ஆங்கிலம் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதும் மக்கள் தொடர்புப் பணிக்கான வேலை வாய்ப்பில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.
சென்னையில் மாபெரும் திருவிழா...
மங்கையர் மலரின்
34-வது ஆண்டு விழா கொண்டாட்டம்...
இடம்: பத்மராம் மஹால் (பழைய ராம் தியேட்டர் வளாகம்)
ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை - 600024
நாள்: பிப்ரவரி 15, 2014, சனிக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி
நடிகை சுகன்யா |
டாக்டர் மீனா |
பூஜா & மாளவிகா |
சரவெடி பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் |
இவர்களின் பங்களிப்பைக் காண தவறவிடாதீர்கள்... பிப்ரவரி 15, 2014, சனிக்கிழமை அன்னிக்கு காலை சரியா 9.30 மணிக்கு பத்மராம் கல்யாண மண்டபத்துக்கு வந்துடுங்க...மிஸ் பண்ணிடாதீங்க...
23-01-2014 நிகழ்ச்சி
சென்னை ரோட்டரி சங்கம், சென்னைப் பாட்னா ஜனவரி 23, 2014 அன்று சாஃப்ட்வேர், மருத்துவம் மற்றும் விளையாட்டு என்ற மூன்று துறை சார்ந்த வல்லுநர்களுக்கு சிறப்பு விருதளித்து சிறப்பித்தது. இந்நிகழ்ச்சிக்கு திரு. பாக்கியராஜ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியை திரு. ஆர். திலீப் குமார், பிரசிடண்ட், திரு. ஜி. பிரபாகர், செகரட்டரி, திரு. எஸ். பட்டாபிராமன், டைரக்டர், வொகேஷனல் சர்வீஸஸ் ஆகியோர் சிறப்புற நடைபெறச் செய்து விருது பெறுபவர்களை கவுரவித்தார்கள்.
டாக்டர் மல்லிகா திருவதனன்
இவர் Pain and Palliative
Care நிபுணர். புற்று நோயாளிகளின் நோய் அகற்றப் பாடுபடுபவர். வலியில் இருந்து விடுதலை
என்பது மனித உரிமை என்று நம்புபவரும், அவரது டிரஸ்டின் மூலமாக ஏழை எளியோருக்கு உதவுபவர்
ஆவார். புற்று நோயாளிகளின் உடல் மற்றும்
மன வலிகளை போக்குவதற்கு போராடும் இவரது சமுதாய உணர்வுக்காக சென்னைப் பட்னா இவருக்கு
SERVICE ABOVE SELF AWARD என்ற விருதை அளித்து கவுரவித்தது.
காம்கேர் கே புவனேஸ்வரி
காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட்
லிமிடட் என்ற நிறுவனத்தின் CEO & MS ஆக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு
வருகிறார். இதன் மூலம் கம்ப்யூட்டரையும் தமிழையும் இணைத்து ஏராளமான சாஃப்ட்வேர்களை
தயாரித்துள்ளார். மேலும் தமிழில் குழந்தைகளுக்கான அனிமேஷன் சிடிக்கள், தனிமனித ஆவணப்படங்கள்,
ஏராளமான கம்ப்யூட்டர் புத்தகங்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறார். இவர் நடத்தி வருகின்ற
டிரஸ்ட் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் ஒர்க்ஷாப்புகளை நடத்தி அதன்மூலம்
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு வித்திடுகிறார். வருடா வருடம் திறமையானவர்களைத்
தேர்ந்தெடுத்து ஸ்ரீபத்மகிருஷ் விருதளித்து கவுரவிக்கிறார். கம்ப்யூட்டர் துறையில் தன் நிறுவனப்
பணிகளுக்கு இடையேயும், சமுதாயத்துக்காகவும் நேரத்தை ஒதுக்கி பணி செய்து வருவதால் சென்னைப்
பட்னா இவரை கவுரவித்தது.
திரு. குஷ் குமார்
17- வயதான குஷ் குமார் Squash
Champion. இத்துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். Asian Junior Squash
Champion பெற்றுள்ளார். மேலும் 8 முறை தொடராக இந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளார். இளம் வயதில் Squash விளையாட்டில்
மிகுந்த ஈடுபாடு கொண்டதற்காக சென்னைப் பட்னா இவரை கவுரவித்தது.