குறைந்தபட்ச இணையதளவேகம் கட்டாயமாகிறது – டிராய்
புதுடில்லி:மொபைல் போன் வாடிக்கையாளர்கள் விரைவான இணையதள சேவை பெறும் வகையில், குறைந்தபட்ச இணையதள வேகத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நிர்ணயிக்க உள்ளது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு,
‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ தொழில்நுட்பத்தில் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.
மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும் இணையதள சேவை குறிப்பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தகவல்களை பதிவிறக்கம் செய்யும் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடமிருந்து ‘டிராய் அமைப்பிற்கு அதிகளவில் புகார்கள் வந்தன.இது குறித்து, ‘டிராய்’ அமைப்பு விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் இணையதள சேவை வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
மேற்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும் இணையதள சேவை குறிப்பிட்ட வேகத்தில் இல்லை எனவும், தகவல்களை பதிவிறக்கம் செய்யும் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மொபைல் போன் வாடிக்கையாளர்களிடமிருந்து ‘டிராய் அமைப்பிற்கு அதிகளவில் புகார்கள் வந்தன.இது குறித்து, ‘டிராய்’ அமைப்பு விசாரணை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் இணையதள சேவை வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
தினமலர் – April 24, 2014
வீட்டில் இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது. கம்ப்யூட்டர் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் மின்சாரம்தான் இல்லை. அதனால் இண்டர்நெட் இருந்தும் சரியாக அதைப் பயன்படுத்த முடியவில்லை என்பது நம்மில் பலரது கவலை. ஒருசிலரது வீடுகளில் இன்வெர்ட்டெர் பொறுத்தி மின்சாரப் பிரச்சினையைச் சமாளித்துக்கொள்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருக்கும்போது அப்படிச் சமாளிக்கலாம். எங்கேயோ வெளியில் செல்லும்போது இணையத்திற்கான மின்சாரம் எப்படிக் கிடைக்கும்?
இந்த கவலையைப் போக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் கணினி நிபுணர்கள். லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள் இண்டர்நெட் இயங்கவும் தகவல்களைப் பரிமாறவும் இனி சூரிய சக்தியே போதும் என்கிறார்கள்.
அதற்கான ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார்களாம். பகலில் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சூரிய சக்தித் தகடுகள் மூலம் உலகளாவிய வலையின் சமிக்ஞைகளைக் கண்டறியவும் தகவல்களைப் பரிமாறவும் அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் துறை.
கேபிள்கள் மூலம் இணைக்கப்படாத ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் இணி இணையத்தை இயக்கலாம். இணையம் வேலை செய்யத் தேவையான ஆற்றலையும் சூரிய சக்தித் தகடுகள் வழங்கும். அதைப் போலவே இணைய தகவல்களைப் பரிமாறவும் அதே தகடுகள் உதவும். இந்த இரண்டு வேலைகளையும் சூரிய சக்தி தகடுகளைக் கொண்டே முடித்துவிட முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டால் நெருக்கடி நேர நிலைமைகளை எளிதில் சமாளிக்கலாம். கரண்ட் போய்விட்டால் கம்யூட்டரை இயக்க முடியாது என்னும் நிலைமை போயே போய்விடும்.
இந்தத் தொழில்நுட்பத்தை லைஃபை (Li-Fi) என அழைக்கின்றனர். சூரிய சக்தி மூலம் எல்.இ.டி. பல்புகளை எரியவைத்து அதன் வழியே தகவல்களைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளார்கள். எடின்பர்க்கில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் தகவல்தொடர்புத் துறையின் பயோனியரான பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் இந்த்த் தொழில்நுட்பம் குறித்து விரிவுரை வழங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இதைப் போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா?
நன்றி: தி இந்து
விற்பனையில் கூகுள் கிளாஸ்
இணைய வசதியுடன், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கூகுள் கிளாஸ் எப்போது விற்பனைக்கு வரும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது கூகுள் கிளாஸ்.
மற்ற நாடுகளில் உடனடியாக விற்பனை செய்ய முடியாததற்கு, தன் கூகுள் பிளஸ் சமூக ஊடகத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது கூகுள்.
கூகுள் கிளாஸின் விலை 1,500 டாலர்கள் (சுமார் ரூ.90 ஆயிரம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு இது விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பான பதிவை http://google.com/glass/start/how-to-get-one என்ற தளத்தில் மேற்கொள்ளலாம்.
அதேசமயம் வரையறுக்கப்பட்ட அளவு மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதால், எத்தனை கூகுள் கிளாஸ்கள் விற்பனை செய்யப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு எக்ஸ்புளோரர் வகை கூகுள் கிளாஸ் வழங்கப்படும்.
எக்ஸ்புளோரர் வகை கூகுள் கிளாஸில் வழக்கமான மூக்குக் கண்ணாடியில் இருக்கும் கண்ணாடிகள் இருக்காது. வலது கண் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் திரையில், இணையதள வசதியைப் பயன்படுத்தலாம்.
வரும் ஜூன் இறுதியில், கூகுள் கிளாஸ் தொடர்பான முழு விவரங்கள் அனைத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தி இந்து
நன்றி: தி இந்து