Thursday, 20 March 2014

மார்ச் மூன்றாம் வெள்ளிக் கிழமை என்ன தினம்?

மார்ச் 21, 2014
உலக தூக்க விழிப்புணர்வு தினம்
காம்கேர் கே புவனேஸ்வரி

மார்ச் மாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமை உலக தூக்க விழிப்புணர்வு தினம். தூக்கத்துக்குக் கூடவா விழிப்புணர்வு?
ஆம். இன்று தூக்கமின்மை தான் பல பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது. வேலைச் சுமையினால் மன உளைச்சல், ஸ்ட்ரெஸ் என்றெல்லாம் இளைஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே? அதற்கெல்லாம்  மிக முக்கியக் காரணம் தூக்கமின்மை தான். இரவில் நன்றாக தூங்கி, வேளா வேலைக்கு சத்தான சாப்பாடு சாப்பிட்டு வந்தாலே செய்கின்ற வேலையில் முழுமையாக ஈடுபட முடியும். மனநிறைவு கிடைக்கும். ஸ்ட்ரெஸ் குறையும்.
ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் ஒருநாள் பொழுது எப்படி செல்கிறது என்று பார்ப்போமா?
நடுஇரவு வரை கம்ப்யூட்டர், மொபைல், சமூக வலைதளங்களில் மூழ்கி விடியற்காலையில் தூங்க ஆரம்பித்து, எட்டு மணிக்கு எழுந்து அரக்க பரக்க காலைக் கடன்களை முடித்து, காபி கூட சாப்பிட நேரமில்லாமல் விழுந்தடித்துக் கொண்டு ஆஃபீஸ் சென்று மதியம் வரை சாப்பிடாமல் வேலை செய்து, மதியம் இரண்டு மணிக்கு மேல் ஒப்புக்கு ஏதோ சாப்பிட்டு, நான்கைந்து முறை டீ, காபி சாப்பிட்டு, ஸ்ட்ரெஸ் குறைக்க மூன்று நான்கு முறை சிகரெட் பிடித்து, மாலையில் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் எண்ணெயில் பொரித்த பண்டங்களை சாப்பிட்டு, திரும்பவும் வேலை செய்து, 2 மணி நேரம் பிரயாணம் செய்து இரவு வீடு திரும்பி, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு திரும்பவும் நடுஇரவு வரை கம்ப்யூட்டர், மொபைல்….. இதே தொடர்கதை தான்.
இதில் தூக்கம், நல்ல தூக்கம், அமைதியான தூக்கம் என்பது ஒரு நாளின் 24 மணிநேரத்தில் எந்த இடைவெளியிலும் வரவில்லையே. சாப்பாடு, தூக்கம், வேலை, விளையாட்டு, எல்லாமே கடமைகளாகவே போய்விட்டனவே. இது தான் எல்லா விதமான ஸ்ட்ரெஸூக்கும் காரணம்.
மனதில் எழுதி வைக்கும் கலை!
மனமும் உடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இரண்டையும் ஆளத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள். கொஞ்சம் பயிற்சி எடுத்தால் எல்லோராலும் முடியும். காலையில் 4 மணிக்கு எழுவதற்கு அலாரம் வைக்கவே தேவையில்லை. மனதில் எழுதி வைத்து விட்டுத் தூங்கினாலே காலை 4 மணிக்கு ‘டான்’ என்று விழிப்பு வந்து விடும். மனதில் எழுதி வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முழுமையான ஆழமான நம் மீது ஆளுமை இருந்தாலே ஒழிய அது சாத்தியமில்லை.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் பல வருடங்களாகவே 3 மணிக்கு எழுந்து விடுவார். கிரியேடிவ் பர்சனாலிடி. அமைதியாக எழுதுவது, தன்  ப்ராஜெக்ட்டுகளுக்குத் தேவையான ‘ப்ரீ ப்ராசஸ்’ பணிகளை தயார் செய்வது போன்றவற்றை அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் முடிப்பாராம். பகலில் தூக்கம் வராதா? என்று கேட்டதற்கு தூக்கம் வராது. மிகவும் புத்துணர்வாகத் தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் காலையில் 6 மணி, 7 மணி வரை தூங்கினால் தான் சோர்வாக இருக்கும் என்றார்.
3, 4 மாதங்கள் தொடர்ந்து இதுபோல வேலை செய்து கொண்டே இருக்கும் போது என்றாவது ஒரு நாள் உடலை அடித்துப் போட்டாற் போல தூக்கம் வரும். அன்று முழுமையாக ரெஸ்ட் எடுத்துக் கொண்டு விட்டால் போதும். உடலுக்குத் தெரியும் நமக்கு என்ன தேவை என்று. உடல் அதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் அதனுள்ளே இருந்து பெற்றுக் கொள்ளும் அற்புத ஆற்றல் பெற்றது. என்னால் உடலையும், மனதையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்க முடிகிறது. உங்களாலும் முடியும், முயற்சியுங்கள் என்றார்.
நல்ல தூக்கத்துக்கு குட்டி குட்டி டிப்ஸ்கள்:
 1. ஒவ்வொரும் இரவில் குறைந்தபட்சமாக 5 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
 2. இரவு சாப்பிடுவதற்கு முன் நல்ல வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு சாப்பிட்டால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி. நன்றாக தூக்கம் வரும்.
 3. இரவு தூங்குவதற்கு முன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால் தூக்கம் கலையும். உரையாடலின் வைப்ரேஷன் தூக்கத்தை விரட்டி அடிக்கும். மன உளைச்சலை ஏற்படுத்தும்.
 4. இரவு நேரத்தில் பர்சனல் மொபைல் போனை சைலண்ட் மோடில் போட்டு விட்டு 9 மணி அல்லது 10 மணிக்குப் பிறகு மொபைலில் பேசுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ளலாம்.
 5. மறக்காமல், அடுத்த நாள் மிஸ்டு கால் அல்லது குறுஞ்செய்திகளைப் பார்த்து அவர்களை அழைத்துப் பேசலாம்.
 6. முக்கிய தகவல்களுக்காக வீட்டுக்காகப் பயன்படுத்தும் மொபைல் போனை மட்டும் சைலண்ட்டில் போடாமல் வைத்துக் கொள்ளலாம்.
 7. இமெயிலிலும், ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக் போன்ற சமூக வலைதளங்களில் இரவு நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலும் தூக்கம் தூரமாக ஓடி விடும். எனவே, இரவில் அவற்றுக்கு டாட்டா பை பை சொல்லி விடலாம்.
 8. மனதுக்குப் பிடித்த இசை கேட்கலாம். காமெடி டைம் பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம். எழுத விருப்பம் இருப்பவர்கள் எழுதலாம். வரைய விருப்பம் இருப்பவர்கள் வரையலாம். என்ன செய்தால் மனம் நிறைவாக இருக்குமோ அதை செய்யலாம். கால் மணி அல்லது அரை மணி நேரமானாலும் பரவாயில்லை. செய்து பாருங்கள். மாற்றம் தெரியும்.
 9. வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் சிரித்துப் பேசி, அவர்கள் பள்ளி/கல்லூரியில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டால் மனம் ரிலாக்ஸ் ஆவது உறுதி.
 10. கூடுமானவரை சாப்பிடும் போதோ அல்லது தூங்கச் செல்வதற்கு முன்போ, கடுமையான விவாதங்களை தவிர்க்கப் பழகவும்.
 11. இரவில் முக்கால் வயிறு மட்டும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 12. கொழுப்பு சத்து மிகுதியான உணவு வகைகளைத் தவிர்க்கலாம்.
 13. சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து ஒரு கிளாஸ் வெந்நீர் சாப்பிடலாம். நல்ல ஜீரணம் ஆகும். 
 14. இரவில் படுக்கும் முன் அரை டம்ளர் சூடான பால் சாப்பிடலாம். தூக்கம் வரும். கண்டிப்பாக டீ, காபி போன்றவற்றை தவிர்க்கவும்.
 15. சாக்லெட் போன்ற இனிப்பு வகைகளையும் தவிர்க்கவும். அவை தூக்கத்தைத் துரத்தி அடிக்கும்.
 16. தூங்குவதற்கு முன் சிகரெட், மதுவை தள்ளி வையுங்கள்.
 17. வாகன விபத்துக்கள் பெரும்பாலும் தூக்கமின்மையினாலும், போதையில் வண்டியை ஓட்டுவதாலும் தான் ஏற்படுகிறது. இரவில் வண்டியை ஓட்டும் டிரைவர்கள் கண்களை தூக்கம் அழுத்தும் போது வண்டியை ஓரம் கட்டி விட்டு குட்டித் தூக்கம் போட்டு விட்டு பயணத்தைத் தொடரலாம்.
 18. படுக்கும் அறையில் மெல்லிய கலரில் நைட் லேம்ப் ஒன்றை ஒளிர விடவும். கும்மிருட்டில் தூங்க வேண்டாம்.
 19. என்ன பிரச்சனை என்றாலும் மனதில் ஓரங்கட்டி விட்டு தூங்க முயற்சிக்கவும். கவலைபடுவதால் மட்டும் பிரச்சனைகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டு விடாது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் மீது பாரத்தைப் போடுங்கள் அல்லது உங்களுக்கு எதன் மீது நம்பிக்கை இருக்கிறதோ அதன் மீது பாரத்தை இறக்கி வைத்து விட்டு உறங்கச் செய்யுங்கள். இது கொஞ்சம் கஷ்டம் தான். கஷ்டப்பட்டு முயற்சியுங்கள். பலன் கிடைக்கும்.
 20. ஏதேனும் ஒன்றில் மீது எந்த கேள்வியும் கேட்காமல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கப் பழகுங்கள். அது உங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும் சுமை தாங்கியாகவாவது இருக்க உதவும்.

‘போதும், போதும்’ என்ற உங்கள் அனைவரின் மனக்கூவல் என் தூக்கத்தைக் கலைக்கிறது. ப்ளீஸ் என்னை தூங்க விடுங்கள்.
என்னைப் போலவே உங்களுக்கும் நல்ல தூக்கம் வர வேண்டுமா…மேலே சொன்ன விஷயங்களைப் பின்பற்ற முயற்சியுங்கள். அப்படியும் தூக்கம் வரவில்லையா, கடைசியாக ஒரே ஒரு டிப்ஸ்…
 உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். அங்கு வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரருக்கு மூன்று முறை கைதட்டி அட்டண்டென்ஸ் கொடுங்கள். உறக்க நிலையில் இருக்கும் சண்டிகேஸ்வரரின் கவனத்தை ஈர்த்து, நல்ல தூக்கம் வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி தடைபடாத தூக்கத்துக்காக பிராத்தியுங்கள். நிச்சயம் நல்ல தூக்கம் வரும்.
இது ஜோக்கோ, காமெடியோ இல்லை. இனி எப்போதெல்லாம் கோயிலுக்குச் செல்கிறீர்களோ அப்போதெல்லாம் மறக்காமல் சண்டிகேஸ்வரருக்கு கைதட்டி அட்டண்டென்ஸ் கொடுக்கத் தவறாதீங்க…நல்ல தூக்கத்தை மிஸ் பண்ணாதீங்க…
Have a Happy Sleep.Wednesday, 19 March 2014

ஃபேஸ்புக் குவிஸ் பற்றி வாசகிகள் கருத்துக்கள்

Ms. கிரிஜா சாரதி

மிகவும் அறிவுபூர்வமாக இருந்தது . என்னுடைய 63 வயதில் என் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் அதிகமானதற்கு காரணமே ஸ்மார்ட்லடியும் மங்கையர் மலரும் தான் . எப்படி நன்றி சொல்வேன் . புதன் கிழமை 2மணியானால் ஒரு ஆர்வமும் பரபரப்பும் வந்து விடும் . நான் தமிழில் டைப் செய்ய கற்று கொண்டதே உங்கள் முயற்சியால்தான் .என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் மகள் மகன் அண்ட் மருமகளும் உறு துணையாய் இருக்கின்றனர் . வேறு என்ன சொல்ல . நன்றிநன்றி


Ms. மல்லிகா சண்முகம்

இன்றைய முதல் க்விஸ் புதுமையாக இருந்தது. கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.எங்கள் மூளைக்கு நல்ல வேலை.2ஆவது க்விஸ் எப்பவும் மாதிரி இருந்தது.நாங்கள் வார வாரம் இது மாதிரியான க்விஸ் எதிர்பாக்கிறோம்.QUIZயால் நாங்கள் நிறைய கற்றுக் கொள்ளுகிறோம்..நன்றி மேடம்.

Ms. லஷ்மி தேவி

குவிஸ் த்ரில்லிங் ஆக இருக்கு மேடம் .. புது புது விஷயங்கள் கத்துக்கறோம்..

நன்றி...நன்றி...நன்றி...

அன்பார்ந்த மங்கையர் மலர் வாசகிகளே,

மங்கையர் மலர் ப்ளாக் ஆரம்பித்து 2 மாதங்களுக்குள் 6000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதற்கு முழுமுதற் காரணமான உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெண்கள் அனைவரையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து உயர்த்த வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ‘ஸ்மார்ட் லேடி-கம்ப்யூட்டர் தொடர்’, அதைத் தொடர்ந்து வாரத்தில் 1 நாள் புதன் அன்று சாட்டிங்கில் மீட்டிங், அதையும் தொடர்ந்து மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடிக்காகவே பிரத்யேகமான ப்ளாக்....இவை அத்தனையும் சாத்தியமானது உங்களால் மட்டுமே.... நன்றி...நன்றி....நன்றி

எங்களை தொடர்பு கொள்ள....

www.facebook.com/mm.smartlady
www.mmsmartlady.blogspot.in

உங்கள் தோழிகளையும் மங்கையர் மலர் ஃபேஸ்புக்கில் இணையச் செய்யுங்கள். ப்ளாக் வாசிக்கச் சொல்லுங்கள்.

எங்கள் பணியில் உங்களையும் இணைத்து அழைத்துச் செல்ல நாங்கள் தயாராய் உள்ளோம்.

நாங்க ரெடி...நீங்க ரெடியா?

அன்புடன்
காம்கேர் கே புவனேஸ்வரி
மங்கையர் மலர்
(ஸ்மார்ட் லேடி டீமுக்காக)

Thursday, 13 March 2014

ஐ.டி துறையில் ஸ்ட்ரெஸ் பற்றி…
ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் Stress என்ற மன இறுக்கத்தில் இருந்து விடுபட 9-3-2014 ஜூனியர் விகடனில் நான் அளித்திருந்த சில டிப்ஸ்களைப் படித்துப் பாருங்களேன். பின்பற்ற முடிந்தால் பின்பற்றுங்கள்...

நன்றி: ஜூனியர் விகடன் (09-03-2014)

ஒய்ஃப் டே!
 • ஒயிட் காலர் ஜாப் 
 • கை நிறைய சம்பளம்
 • ஒன்றுக்கு இரண்டாய் கார்கள்
 • குடியிருக்க ஒரு வீடு, ஹை-வையான ஏரியாவில் ஒரு வீடு
 •  நினைத்ததை வாங்கக் கூடிய பொருளாதார வசதி
ஐடி துறை கொடுக்கும் வசதிகளைப் பற்றி இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
      இதற்கிடையில் ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தை அவர்கள் வாழ்க்கையில் நிறைய அடிபடுகிறது. செய்கின்ற வேலையில் பிடிப்பு; அதன் காரணமாய் ஏற்படுகின்ற சந்தோஷம்; மன நிறைவு எதுவுமே இவர்கள் மனதை உற்சாகப்படுத்துவதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாய் ஏற்படுவதே ஸ்ட்ரெஸ்….இதை விரட்டும் ஆயுதம் இவர்கள் கைகளில் தான் உள்ளது.
·         செய்கின்ற வேலையை நேசித்து செய்யுங்கள்
·         100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் பணியாற்றுங்கள்
·         கிடைக்கின்ற சம்பளம் போதும் என்கின்ற மனநிறைவு    கொள்ளுங்கள்
·         குறைந்தபட்சம் 3 வருடங்களாவது ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள்
·         இரவு அலுவலகத்தில் இருந்து வந்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்து விட்டு, சாப்பிட்டும் வழக்கத்தை மேற்கொண்டு பாருங்கள். உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி.
·         இரவு எத்தனை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வந்தாலும், அடுத்த 1 மணி நேரத்துக்குள் தூங்குவதற்குச் செல்ல வேண்டும் என்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
·         அதுபோல வீட்டிற்கு வந்ததும் கால் செருப்பை/ஷூவை வெளியே வைத்து விட்டு வருவதைப் போல மற்ற எல்லா நினைவுகளையும் வெளியே விட்டு விட்டு உள்ளே நுழைய வேண்டும். வீட்டையும் இரண்டாவது அலுவலகமாக மாற்றிக் கொள்ளக் கூடாது.
·         இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினால் மொபைல், லேப்டாப் இவற்றுக்கு டாட்டா பை,பை சொல்லி உங்களை விட்டு தூர வைத்து விடுங்கள்.
·         வீட்டில் சாப்பிடும் நேரங்களில் சாதம், குழம்பு, ரசம், மோர் என்ற நம் இந்தியன் உணவு வகைகளையே சாப்பிடுங்கள். பீட்சா, சப்வே போன்ற உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அவற்றை மாறுதலுக்காக எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் வருடம் 365 நாட்களும் அவை தான் என்றால் நம் இந்தியன் தட்பவெப்பத்துக்கு அவை உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதே உண்மை. ஒரு உண்மை தெரியுமா? அமெரிக்கர்கள் நம் இட்லி, தோசைக்கு அடிமை. விரும்பி சாப்பிடுகிறார்கள்.
·         தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் என்று ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை வைத்துக் கொள்ளலாம்.
·         சரியான முன்னுதாரணங்களை பார்த்து அவர்களை ரோல்மாடல்களாக்கிக் கொள்ளலாம்.
·         ரெளத்திரத்தை சரியான இடத்தில் சரியானபடி காண்பிக்க வேண்டும். பல இடங்களில் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது கோழை என்று பொருளல்ல. அவர்களுடன் பேசிப் பயனில்லை என்பதே ஆகும். எனவே விவேகத்துடன் கூடிய வீரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
·         சினிமாவில் மட்டும் தான் ஒரு ஹீரோ 10,15 பேரை அடிது துவைத்தெடுக்க முடியும். நிஜ வாழ்வில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவரை கூட ஒரு சமயத்தில் அடித்து வீழ்த்த முடியாது. எனவே அசட்டு தைரியத்தை விட்டு விட கற்றுக் கொள்ள வேண்டும்.
·         கூடுமானவரை அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும் போது குறைந்தபட்சம் ஒருவருடனாவது திரும்பலாம்.
·         எல்லோரிடமும் உங்கள் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுயநலம் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் யாரையும் 100% நம்பிவிட முடியாது.
·         தாமரை இலை மேல் தண்ணீராகப் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
·         ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மது, சிகரெட்டிற்கு இணையாக போதை ஏற்றுபவை. அதில் உட்கார்ந்து விட்டால் எழுந்து கொள்வது என்பது மிகவும் கடினம். எனவே, கூடிமானவரை இரவி 9 மணிக்குப் பிறகாவது அவற்றில் நாட்டம் கொள்ள வேண்டாம்.
·         தினமும் ஏதேனும் ஒரு புத்தகம் படித்தல் அல்லது பிடித்த ஹாபியை செய்தல் படம் வரைவதாக இருக்கலாம், பாட்டுப் பாடுவது/கேட்பதாக இருக்கலாம், கதை/கட்டுரை எழுதுவதாக இருக்கலாம்…இப்படி ஏதேனும் ஒரு வழக்கத்தை கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ளலாம். இதற்காக 1/2 மணி நேரம் அல்லது  1 மணி நேரம் செலவிடலாம். இதன் காரணமாய் மனதில் ஒரு நிறைவு ஏற்படும். நல்ல தூக்கம் வரும்.
·         குறைந்த பட்சம் 4-5 மணி நேரங்களாவது தூங்க வேண்டும்.
·         வீட்டிற்கு வந்ததும் அம்மா/அப்பா/கணவன்/மனைவி இவர்களில் யாரிடம் ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும். அவர்களையும், சமூக வலைதள நட்புகளைப் போல விரும்பினால் பேசலாம் அல்லது பேசாமல் கண்டும் காணாதது போல இருக்கலாம் என்ற பாவனையில் கையாளக் கூடாது.
·         கடவுள் பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை கோயிலுக்குச் சென்று வரலாம். பீச்சிற்கு செல்லுகின்ற எல்லா நாட்களும் கடலில் நின்று கால் நனைப்பதில்லையே. அது போல கோயிலுக்குச் சென்று சாமியிடம் வேண்டித் தான் ஆக வேண்டும் என்பதில்லை. மாறுதலுக்காக சென்று வரலாம். அந்த அமைதி மனதில் மாற்றத்தை உண்டு செய்யும்.
·         வாரம் ஒரு சினிமா பார்க்கலாம் அல்லது  பீச்சிற்குச் செல்லலாம் அல்லது கோயிலுக்குச் செல்லலாம். எதுவாக இருந்தாலும் வீட்டு மனிதர்களுடன் செய்யவும். அலுவலக நண்பர்களைத் தவிர்த்து விடவும்.
·         மாதம் ஒரு முறை நம் விருந்தினர்கள் வீடுகளுக்குச் சென்று வரலாம். அக்கா, சித்தி, பெரியப்பா, மாமா, மாமி என்று உறவு முறை சொல்லி அழைத்துப் பேசுவோம்.
·         வாரம் ஒருமுறையாவது 1 மணி நேரம் வாக்கில் செல்லலாம். (மொட்டை மாடியிலாவது)
·         அதுபோல வார விடுமுறை நாட்களில் மாறுதலுக்காக வீட்டு வேலைகளைச் செய்யலாம். மனம் ஒன்றிச் செய்யும் போது மனதில் உங்களை அறியாமல் ஒரு நிறைவும், சந்தோஷமும் உண்டாகும்.
·         வார விடுமுறையை திரும்பவும் அலுவலக நண்பர்களோடு கொண்டாட வேண்டாம். வீட்டு மனிதர்களுடன் செலவிடுங்கள். எனக்குத் தெரிந்த சிறிய அளவில் பிசினஸ் செய்யும் ஒருவர் ஞாயிற்றுக் கிழமையை ‘ஒய்ஃப் டே’ என்று சொல்லுவார். ஏனெனில் அன்று முழுவதும் அவர் வீட்டிற்காகவே தன் நேரத்தை செலவழிப்பார். இது நல்ல ஐடியாவாக இருக்கிறதல்லவா?
·         நேரத்துக்கு சரியான சாப்பாடு, தூக்கம், வீட்டு மனிதர்களிடம், குறிப்பாக பெரியோர்களிடம் அக்கறைக் காட்டுதல், மனம் விட்டுப் பேசுதல் போன்ற குணநலன்களை வளர்த்துக் கொண்டால் போதும் ஸ்ட்ரெஸ் காணாமல் போய்விடும்…
·         ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்… 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் வேலை வாய்ப்பு என்பதே மகா கஷ்டம். BE படித்தவர்கள் கூட 2000 – க்கும் 3000-க்கும் பணிபுரிந்தவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். அதுபோல பெண்களுக்கான படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணத்தில் முடிவெடுக்கும் சுதந்திரம் இவை எதுவுமே இன்று போல 20 வருடங்களுக்கு முன்பு இல்லை. அந்த சூழல் மறைய எத்தனை பேர் போராடி இன்றைய பொருளாதார மலர்ச்சியையும், பெண்களுக்கான அடிப்படை சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேலை பிடிக்கவில்லை, ஸ்ட்ரெஸ், பிழிந்து எடுக்கிறார்கள் என்பதைப் போன்ற வார்த்தைகளுக்குக் கூட உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவை உங்களை அரித்துத் தின்று விடும்.
·         எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை செய்யச் சொல்லி எந்த நிறுவனமும் கட்டாயப்படுத்துவதில்லை. (பார்ட்டிகளில் மது, சிகரெட் இப்படி). அவற்றை பயன்படுத்துவதும், மறுப்பதும் உங்கள் சுதந்திரம். உதாரணத்துக்கு மாமிசம் சாப்பிடவே சாப்பிடாத ஒருவர் கண் முன் மாமிச உணவை வைத்தால் அவரை எத்தனை கட்டாயப்படுத்தினாலும் அவர் சாப்பிட மாட்டார் அல்லவா? அது போல தான் மது, சிகரெட் போன்றவையும். அவற்றை நீங்கள் பயன்படுத்தினால் அதற்கு 100% காரணம் நீங்கள் மட்டுமே. பிறரையோ, நிறுவனத்தையோ காரணம் காட்டக் கூடாது. உங்களுக்குப் பிடித்திருப்பதால் தான் அப்பழக்கத்துக்கு நீங்கள் அடிமையாகிறீர்கள்.
இங்கு நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் என் லைஃபில் பின்பற்றுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் முயற்சித்தான் பாருங்களேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருக்கும். பலன் கிடைக்கும் போது சந்தோஷம் பலமடங்காகும். முயற்சியுங்கள். வெற்றி பெறுங்கள். வெற்றி நிச்சயம்.

காம்கேர் கே புவனேஸ்வரி

Sunday, 9 March 2014

முக்கிய அறிவிப்பு

ஹாய் மங்கையர் மலர் ரீடர்ஸ்,
12-03-2014, புதன் கிழமை சாட்டிங் இல்லை. 
13-03-2014, வியாழன் அன்று வழக்கம் போல 2 மணிக்கு சாட்டிங்கில் சந்திப்போம். 
காம்கேர் கே புவனேஸ்வரி, 
ஸ்மார்ட் லேடி டீம், மங்கையர் மலர்.Friday, 7 March 2014

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்!


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா… என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. உண்மை தான். மாதவம் செய்து வரம் பெற்று வந்திருந்தால் மட்டுமே அவளால் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடியும்.

எப்படி?

அவள்....

  தனக்கு உடம்புக்கு வந்து விட்டது என்று சொல்லி படுக்கவே மாட்டாள். தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வாள்...கடுமையான ஜூரத்திலும் குடும்பத்துக்காக செய்கின்ற வேலைகளில் எந்தக் குறையும் இல்லாமல் செய்து முடித்து விட துடிப்பாள்...
உடம்பு முடிவதால் தானே செய்கிறாள் என்ற பிறரின் எண்ணத்தையும் தாங்கிக் கொள்வாள்
 ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட தொடர்ந்து உழைப்பாள்...தேவைப்பட்டால் 24 மணி நேரமும் கண்விழித்திருப்பாள்...
சின்னதாக நன்றியை/பாராட்டை எதிர்நோக்குகின்ற நேரத்தில், செய்ய வேண்டியது அவள் கடமை என்பதைப் போன்ற கட்டாயச் சுமைதாங்கியாக்குகின்ற சுமையைத் தாங்கிக் கொள்வாள்
  இவள் பார்வைக்கு மிருதுவானவள்...ஆனால் மனதளவில் இரும்பை விட வலிமையானவள்... இவளது எதையும் தாங்கும் சக்தியை யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது... 
ஆனாலும் பலவீனமானவள் என்ற பட்டத்தை சுமப்பவள்
  சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும் தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும் கொண்டவள்...
இதனால் திமிர் பிடித்தவள் என்ற பட்டங்களை பல சமயம் பெண்களிடம் இருந்தே பெறுபவள்
 அவளது கண்ணீர் துளி தான் அவளது ஒட்டு மொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு...அவளது சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை அத்தனையையும் அந்த கண்ணீர்த்  துளிதான் வெளிப்படுத்துகிறது...
அழுதே காரியத்தை சாதித்துக் கொள்வாள் என்ற ஆதிக்க வார்த்தைகளையும் கண்ணீரோடே கேட்டுக் கொள்வாள்
 அவளால் மட்டும் தான் அழ வேண்டிய நேரத்தில் கூட அழகாய் சிரிக்கவும், பாடவும் முடியும். பாரேன்...
கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா என்ற ஏளன வார்த்தைகளையும் தாங்கிக் கொள்வாள்
 அவளால் மட்டுமே நெருக்கடியான பரபரப்பான சூழ்நிலையிலும் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடு இருக்க முடியும். 
கொஞ்சமாவது டென்ஷன் இருக்கா பார்...கல்நெஞ்சக்காரி என்ற கல்லெறி வார்த்தைகளையும் இன்முகத்தோடே எதிர்கொள்வாள்
  அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும். 
ஆனந்தக் கண்ணீர் விடுமளவுக்கு என்ன சாதித்து விட்டாள் என்ற பொறாமை எண்ணங்களையும் எதிர்கொள்வாள்
 அவளால் மட்டுமே மற்றவர்கள் சாப்பிடுவதற்காக தான் பட்டினி கிடக்க முடியும். 
அவளுக்கு பசிக்காது...சின்ன வயிறு என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு அண்ணப்பூரணியாக இருப்பாள்
  அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, ஒரு குட்டி முத்தம் கொடுத்து ரணமாகிய உள்ளங்களுக்கு மருந்திட முடியும். 
இது மட்டும் எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது.
 அவளால் மட்டுமே உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரது சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களை பாதியாக்க முடியும். 
அப்போது கூட விவஸ்தை இல்லாமல் ஏன் பிறர் விவகாரங்களில் தலையிடுகிறாள் என்ற பட்டம் கிடைக்கும். இன்முகத்துடன் வாங்கிக் கொள்வாள்
 தன் குழந்தைகளின் சாதனைகளுக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்து மேலும் ஊக்கப்படுத்த முடியும். 
ஆனால் அவளுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கூட தெரியாத குழந்தைகளைப் பற்றி அவள் கவலைப்படுவதே இல்லை
  ஐயோ...என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே என்று உடைந்து கொண்டிருக்கும் போதே, தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளால் வாழ்க்கையை எதிர் நோக்க முடியும். 
என்ன திமிர்...இத்தனை பட்டும் கொஞ்சமும் பயமில்லாமல்... என்ற அடக்குமுறை வார்த்தைகளை தாங்கிக் கொள்வாள்
 இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு. அது என்னவென்றால்...தன்னிடம் இருக்கின்ற இந்த அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்...

ஆம். மாதவம் செய்து வரம் பெற்று வந்திருந்தால் மட்டுமே இவை அத்தனையும் சாத்தியமாகும். பெண்ணைப் பற்றிய இந்த உண்மைகளை நம்மில் யாராலாவது மறுக்க முடியுமா?

பெண்மையைப் போற்றுவோம்.

மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

மதிக்கக் கற்றுக் கொடுப்போம்.

குறிப்பாக 

நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

Happy Women’s Day.
வாழ்த்துக்கள்.
காம்கேர் கே புவனேஸ்வரி

Wednesday, 5 March 2014

உமா மகேஸ்வரிக்கள் உருவாவதை தடுக்க...

இன்றைய ஹாட் டாப்பிக்கே ஐ.டி துறை இளம் பெண் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டது தான். இதுபோல பெண்கள் கொலை செய்யப்படுவதும், பலாத்காரத்துக்கு உட்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்கவும், முற்றிலுமாக தடுக்கவும் செய்வது என்பது ஒரு நாள், இரண்டு நாட்களில் நடக்கும் செயல் அல்ல. ஆனால், வேலை சுமையில் இருந்தும், ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபட சில ஆலோசனைகளை இன்றைய ஜூ.வி யில் (9-3-2014) கொடுத்திருக்கிறேன். இடப்பற்றாக் குறையினால் அதில் கொடுக்க முடியாத சில டிப்ஸ்கள் இதோ...

வாரம் ஒருமுறையாவது 1 மணி நேரம் வாக்கிங் செல்லலாம். (மொட்டை மாடியிலாவது)

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை செய்யச் சொல்லி எந்த நிறுவனமும் கட்டாயப்படுத்துவதில்லை. (பார்ட்டிகளில் மது, சிகரெட் இப்படி). அவற்றை பயன்படுத்துவதும், மறுப்பதும் உங்கள் சுதந்திரம். உதாரணத்துக்கு மாமிசம் சாப்பிடவே சாப்பிடாத ஒருவர் கண் முன் மாமிச உணவை வைத்தால் அவரை எத்தனை கட்டாயப்படுத்தினாலும் அவர் சாப்பிட மாட்டார் அல்லவா? அது போல தான் மது, சிகரெட் போன்றவையும். அவற்றை நீங்கள் பயன்படுத்தினால் அதற்கு 100% காரணம் நீங்கள் மட்டுமே. பிறரையோ, நிறுவனத்தையோ காரணம் காட்டக் கூடாது. உங்களுக்குப் பிடித்திருப்பதால் தான் அப்பழக்கத்துக்கு நீங்கள் அடிமையாகிறீர்கள்.

வீட்டில் சாப்பிடும் நேரங்களில் சாதம், குழம்பு, ரசம், மோர் என்ற நம் இந்தியன் உணவு வகைகளையே சாப்பிடுங்கள். பீட்சா, சப்வே போன்ற ஜங்க் உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அவற்றை மாறுதலுக்காக எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் வருடம் 365 நாட்களும் அவை தான் என்றால் நம் இந்தியன் தட்பவெப்பத்துக்கு அவை உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதே உண்மை. ஒரு உண்மை தெரியுமா? அமெரிக்கர்கள் நம் இட்லி, தோசைக்கு அடிமை. விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் என்று ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை வைத்துக் கொள்ளலாம்.

சரியான முன்னுதாரணங்களை பார்த்து அவர்களை ரோல்மாடல்களாக்கிக் கொள்ளலாம்.

ரெளத்திரத்தை சரியான இடத்தில் சரியானபடி காண்பிக்க வேண்டும். பல இடங்களில் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது கோழை என்று பொருளல்ல. அவர்களுடன் பேசிப் பயனில்லை என்பதே ஆகும். எனவே விவேகத்துடன் கூடிய வீரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற இன்னும் சில கருத்துக்களை ஐ.டி துறை இளைஞர்கள் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபட கொடுத்திருக்கிறேன் இன்றைய ஜூனியர் விகடனில்(9-3-2014)....ஒவ்வொரு பெண்ணும் படித்து பயன்பெறும் ஆர்டிகல்....

- காம்கேர் கே புவனேஸ்வரி