Wednesday 5 March 2014

உமா மகேஸ்வரிக்கள் உருவாவதை தடுக்க...

இன்றைய ஹாட் டாப்பிக்கே ஐ.டி துறை இளம் பெண் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டது தான். இதுபோல பெண்கள் கொலை செய்யப்படுவதும், பலாத்காரத்துக்கு உட்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்கவும், முற்றிலுமாக தடுக்கவும் செய்வது என்பது ஒரு நாள், இரண்டு நாட்களில் நடக்கும் செயல் அல்ல. ஆனால், வேலை சுமையில் இருந்தும், ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபட சில ஆலோசனைகளை இன்றைய ஜூ.வி யில் (9-3-2014) கொடுத்திருக்கிறேன். இடப்பற்றாக் குறையினால் அதில் கொடுக்க முடியாத சில டிப்ஸ்கள் இதோ...

வாரம் ஒருமுறையாவது 1 மணி நேரம் வாக்கிங் செல்லலாம். (மொட்டை மாடியிலாவது)

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை செய்யச் சொல்லி எந்த நிறுவனமும் கட்டாயப்படுத்துவதில்லை. (பார்ட்டிகளில் மது, சிகரெட் இப்படி). அவற்றை பயன்படுத்துவதும், மறுப்பதும் உங்கள் சுதந்திரம். உதாரணத்துக்கு மாமிசம் சாப்பிடவே சாப்பிடாத ஒருவர் கண் முன் மாமிச உணவை வைத்தால் அவரை எத்தனை கட்டாயப்படுத்தினாலும் அவர் சாப்பிட மாட்டார் அல்லவா? அது போல தான் மது, சிகரெட் போன்றவையும். அவற்றை நீங்கள் பயன்படுத்தினால் அதற்கு 100% காரணம் நீங்கள் மட்டுமே. பிறரையோ, நிறுவனத்தையோ காரணம் காட்டக் கூடாது. உங்களுக்குப் பிடித்திருப்பதால் தான் அப்பழக்கத்துக்கு நீங்கள் அடிமையாகிறீர்கள்.

வீட்டில் சாப்பிடும் நேரங்களில் சாதம், குழம்பு, ரசம், மோர் என்ற நம் இந்தியன் உணவு வகைகளையே சாப்பிடுங்கள். பீட்சா, சப்வே போன்ற ஜங்க் உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அவற்றை மாறுதலுக்காக எடுத்துக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் வருடம் 365 நாட்களும் அவை தான் என்றால் நம் இந்தியன் தட்பவெப்பத்துக்கு அவை உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதே உண்மை. ஒரு உண்மை தெரியுமா? அமெரிக்கர்கள் நம் இட்லி, தோசைக்கு அடிமை. விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் என்று ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு வாழப் பழக வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை விட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை வைத்துக் கொள்ளலாம்.

சரியான முன்னுதாரணங்களை பார்த்து அவர்களை ரோல்மாடல்களாக்கிக் கொள்ளலாம்.

ரெளத்திரத்தை சரியான இடத்தில் சரியானபடி காண்பிக்க வேண்டும். பல இடங்களில் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது கோழை என்று பொருளல்ல. அவர்களுடன் பேசிப் பயனில்லை என்பதே ஆகும். எனவே விவேகத்துடன் கூடிய வீரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற இன்னும் சில கருத்துக்களை ஐ.டி துறை இளைஞர்கள் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபட கொடுத்திருக்கிறேன் இன்றைய ஜூனியர் விகடனில்(9-3-2014)....ஒவ்வொரு பெண்ணும் படித்து பயன்பெறும் ஆர்டிகல்....

- காம்கேர் கே புவனேஸ்வரி