ஃபேஸ்புக் நட்பூஸ்

10 - 09- 2014  புதன்  குவிஸ்

கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு பிசினஸ் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
·       கம்ப்யூட்டர் மூலம் தொழில் செய்ய விரும்பும் அனைவரும் முதலில் கம்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில் நுட்பங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
·       எந்த தொழிலில் இறங்க போகிறீர்களோ, அது தொடர்பான சாஃப்ட்வேர் மற்றும் பேக்கேஜூகளை அழ்ந்து கற்றறிவதோடு, பயிற்சியும் செய்ய வேண்டும்.
·       கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறையில் நடைபெறும் அன்றாட மாற்றங்களை அவ்வப்போது தெரிந்து கொள்வதோடு, அப்டேட் செய்து கொள்ளவும் வேண்டும்.
·       துறை சார்ந்த வல்லுநர்களை சந்திப்பது, அவர்களின் அலுவலகங்களிலேயே பயிற்சிக்காக வேலைக்குச் சேர்வது போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும்.
·       சுய தொழிலில் இறங்க விரும்புபவர்கள், தங்கள் மனப்பாங்கினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமேயானால் எந்த ஒரு விஷயத்தையும் Professional ஆக அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
·       துறை சார்ந்த அனுபவம் இல்லாமல், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை மட்டும் தெரிந்து கொண்டு, கம்ப்யூட்டர்களையும், இதர சாதனங்களையும் வாங்கிப் போட்டுக் கொண்டு பிசினஸ் தொடங்கினால் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
·       எனவே, குறைந்தபட்சம் 1 வருடமாவது துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் பெற்ற பிறகு சுயமாக தொழில் தொடங்கினால் வெற்றி பெற முடியும்.

கம்ப்யூட்டரில் டைப்பிங்
கம்ப்யூட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யத் தெரிந்திருந்தால் பதிப்பகங்கள், பத்திரிகைகள், டேட்டா என்ட்ரி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஜாப் ஒர்க் செய்து கொடுத்து மாதம் 10000 ரூபாய் வரை வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம்.
கம்ப்யூட்டரில் அக்கவுண்ட்ஸ்
கம்ப்யூட்டரில் ஆக்கவுன்ட்டிங் சாஃப்ட்வேர்களை கற்று வைத்துக் கொண்டால் மாநகரங்களைத் தவிர்த்து, சிறிய கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் வீட்டிலிருந்தபடி சிறிய கடைகளில், வியாபார நிறுவனங்களில், கம்ப்யூட்டர் இல்லாத இடங்களில் அவர்களை அணுகி, அவர்களது அக்கவுண்ட்ஸை கம்ப்யூட்டரில் பராமரிக்கும் வேலையை வாங்கி செய்யலாம்.
பிரவுசிங் சென்டர்
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில் நுட்பங்களை முழுமையாக தெரிந்து கொண்டு விட்டால் குறைந்தபட்சம் 4 அல்லது 5 கம்ப்யூட்டர்களுடன் கூட இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களை தொடங்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், வயதானோர்கள், பெண்கள், குழந்தைகள் இப்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற வகையில் சலுகைகளை அளித்து பிசினஸை விரிவுபடுத்தலாம்.
கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள்
மனிதர்கள் இருக்கும் வரை கல்வியும் இருக்கும். அது போல கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் இருக்கும். பள்ளியிலும், கல்லூரியிலும் கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கப்பட்டாலும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வது என்பது இன்றைய கால கட்டத்தில் அவசியமாக உள்ளது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர் கற்றுத் தர அனுபவமிக்க ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். இது மட்டுமல்லாமல் வேலைக்குச் செல்பவர்களும், இல்லத்தரசிகளும், வயதானவர்களும் கூட இன்று கம்ப்யூட்டரின் அடிப்படையைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். அவர்களும் நம்பி இருப்பது கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத்தான். நல்ல திறமையான, அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களுக்கு என்றும் அழிவே இல்லை. எனவே கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி நடத்துவதும், பயிற்சி மையங்களில் வேலைக்குச் செல்வதும் இன்றைய சூழலில் என்றில்லாமல், என்றுமே வரவேற்கப்படும் விஷயமாகவே இருக்கும்.
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்
வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், அன்றாடம் அவர்கள் பார்க்கும் நோயாளிகளின் குறிப்புகளையும், அதற்கான மருத்துவப் பணிகள் பற்றிய செதிகளையும் கம்ப்யூட்டரில் பதிவு செது விட்டு கிளம்பி விடுவார். அவர்களது பகல் பொழுதில் நடைபெறும் மருத்துவப் பணிகளின் குறிப்புகளை நம் நாட்டில் இருக்கும் நபர்கள் புரிந்து கொண்டு ரிப்போர்ட்டுகளை தயார் செது விடுவார்கள். இந்த வேலையை நம் நாட்டில் இரவு நேரங்களில் செது முடித்து, அவர்களது பகல் பொழுதில், அதாவது அடுத்த நாள் காலையில் டாக்டர்களின் பார்வைக்கு ரிப்போர்டுகள் சென்று விடுமாறு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு டாக்டர்களின் குறிப்புகளை வைத்துக் கொண்டு ரிப்போர்டுகளை தயார் செயும் வேலைக்குப் பெயர் தான் மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன். இந்தப் பணியையும் வீட்டில் இருந்தபடி செய்து கொடுக்க முடியும்.

இ-பப்ளிஷிங்

பப்ளிஷிங் என்றால் தகவல்களை பதிப்பித்தல் என்றும், வெளியிடுதல் என்றும் பொருள் கொள்ளலாம். இ-பப்ளிஷிங் என்றால் இன்டர்நெட்டில் தகவல்களை வெளியிடும் முறை என்று எடுத்துக் கொள்ளலாம். அச்சில் உள்ள புத்தகங்களை வெப்சைட்டில் இ-புத்தகங்களாக பதிப்பிக்கும் முறைக்கு இ-பப்ளிஷிங் என்று பெயர். இந்தப் பணியையும் எளிதாகக் கற்றுக் கொண்டு இ-புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களை அணுகி ஆர்டர் எடுத்து சம்பாதிக்கலாம்.
03 - 09- 2014  புதன்  குவிஸ்
யு-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?


 1. யு-டியூபில் எந்த வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும் போது, பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்து அதன் முகவரியை காப்பி(Ctrl + C) செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு நாம் மங்கையர் மலர்  யு-டியூப் அக்கவுண்ட்டில் (www.youtube.com/mmsmartlady) இருந்து  Mangayar Malar September 2013 TV Promo என்ற தலைப்பிலான வீடியோவை இயக்கி, அதன் முகவரியை(http://youtube.com/watch?v=geQMeAeLGrU) காப்பி செய்துள்ளோம்.
 2. இப்போது பிரவுசரில் புதிய டேபில், இந்த லிங்கை பேஸ்ட்(Ctrl+V) செய்து கொண்டு youtube என்ற வார்த்தைக்கு முன் SS என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். http://ssyoutube.com/watch?v=geQMeAeLGrU
 3. இப்போது Savefrom.net என்ற தலைப்பிலான திரையில் நாம் பேஸ்ட் செய்த லிங்கின் பெயர் வெளிப்படும். மேலும் Download என்ற பட்டனின் கீழ் எந்த ஃபார்மேட்டில் வீடியோ டவுன்லோடு ஆக வேண்டும் என்ற பட்டியல் இருக்கும். அதிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.  இங்கு உதாரணத்துக்கு MP4 என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
 4. உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த வீடியோ நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகி விடும். வீடியோவில் சைஸிற்கு ஏற்ப டவுன்லோடு ஆகும் நேரமும் வேறுபடும்.
 5. நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆனவுடன் அதை வழக்கம் போல கிளிக் செய்து இயக்கிப் பார்க்கலாம்.

டெஸ்க்டாப், லேப்டாப், மொபைல் - இவற்றில் தமிழ் மொழியில் டைப் செய்வது எப்படி?
           
படிக்கின்ற மாணவர்களுக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் உண்டாகக் கூடிய, தாழ்வுமனப்பான்மையைத் தவிர்ப்பதற்காகவே தான் பள்ளிக்கூடங்களில் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான யூனிஃபார்ம் என்ற உடை கட்டாயமாக்கப்பட்டது. அதுபோலவே, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான குறியீட்டு முறை ஒன்றுண்டு. இக்குறியீட்டு முறையைப் பயன்படுத்தினால் தான் உலக மொழிகள் அனைத்தையும், கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் பயன்படுத்த முடியும். இதற்கு யுனிகோட்(Unicodeஎன்று பெயர். இதை விரிவாக universal Code என்று சொல்லலாம். இக்குறியீட்டு முறையின்படி உலகம் முழுவதும் உள்ள எல்லா வகையான கம்ப்யூட்டரிலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யலாம், எழுத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆங்கிலம் தான் கம்ப்யூட்டரின் மொழி என்ற மொழி ஆதிக்கத்தை முறியடித்து ஒருவித சமத்துவத்தைக் கொண்டு வந்தது யுனிகோட் குறியீட்டு முறை. யுனிகோடினால் கம்ப்யூட்டர் உலக மொழிகள் அனைத்திலும் தேர்ச்சியடைந்து வல்லமை பெற்று விட்டதால், கம்ப்யூட்டரை உலகத்துக்கே பொதுவான ஒரு சாதனமாகச் சொல்லலாம்.

திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வதைப் போல, உலகப் பொது சாதனம் என்று கம்ப்யூட்டரைச் சொல்லலாம். கம்ப்யூட்டரிலும், 
இன்டர்நெட்டிலும் யுனிகோட் முறையில் தமிழில், மலையாளத்தில், கன்னடத்தில், இந்தியில் இப்படி எல்லா மொழிகளிலும் டைப் செய்ய முடியும். யுனிகோட் குறியீட்டு முறையில் டைப் செய்வதற்கென்று இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஃபாண்டுகள் உள்ளன. தமிழ் மொழியில் டைப் செய்வதற்கு Latha என்ற ஃபாண்ட், இந்தியில் டைப் செய்வதற்கு Mangalஎன்ற ஃபாண்ட், தெலுங்கில் டைப் செய்வதற்கு Guatami  என்ற ஃபாண்ட் இப்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு ஃபாண்ட்.

இப்படி, ஒவ்வொரு மொழிக்கும் பிரத்யேகமாக யுனிகோட் ஃபாண்ட்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான Arial Unicode MS  என்பது இந்திய மொழிகள் அனைத்திலும் டைப் செய்ய உதவுகின்ற யுனிகோட் ஃபாண்ட்டாகும்.  மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2002 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திருந்தால், Arial Unicode MS   என்ற ஃபாண்ட்டும் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிடும். 

யுனிகோட் என்பது ஒரு குறியீட்டு முறையில் டைப் செய்வதற்கு ஒரு சாஃப்ட்வேர் தேவை. அதைப் பயன்படுத்தி தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் டைப் செய்து கொள்ள முடியும். பொதுவாக ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் டைப் செய்வதற்குப் பயன்படுகின்ற சாஃப்ட்வேர்கள் அனைத்துமே யுனிகோடில் டைப் செய்யும் வசதியைக் கொடுக்கின்றன.

ஸ்ரீலிபி, இளங்கோ, முரசு அஞ்சல், இ&கலப்பை போன்ற ஏராளமான சாஃப்ட்வேர்கள் யுனிகோடில் டைப் செய்கின்ற வசதியைக் கொடுக்கின்றன. பொதுவாக ப்ரிண்டிங் மற்றும் பப்ளிஷிங் துறைகளின் பணிகளுக்காக, இவ்வகை சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்டர்நெட்டில் டைப் செய்வதற்கு பெரும்பாலும் யுனிகோட் முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் உலகம் முழுவதிலும் இன்டர்நெட்டில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களில் எல்லா மொழிகளையும் பயன்படுத்த யுனிகோட் முறையே ஏற்றதாகும்.

ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை யுனிகோட் முறையில் டைப் செய்வதற்கு, பொனெடிக் எனப்படும் பேச்சு வழக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழில் நாம் என்ன பேச நினைக்கின்றோமோ, அதை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்து கொண்டால், திரையில் தமிழில் வெளிப்படும். இதைத் தான் பொனெடிக் என்கின்றோம்.
யுனிகோட் முறையில் டைப் செய்ய உதவும் சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும் முறை
    கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் யுனிகோட் முறையில் டைப் செய்வதற்கு ஏராளமான சாஃப்ட்வேர்கள் இருந்தாலும், மைக்ரோ சாஃப்ட்டின் MicroSoft Indic Language Input Tool(M-ILIT)  என்ற சாஃப்ட்வேர் தமிழை கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் எளிதாகக் கையாள உதவுகிறது. இந்த சாஃப்ட்வேர் 10-க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான சப்போர்ட்டைத் தருகிறது. இது சுருக்கமாக ILIT  என்றழைக்கப்படுகிறது. இது எழுத்துக்களை ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வெளிப்படுத்துகின்ற பொனெடிக் முறையில் இயங்கும் தன்மை கொண்டதாக செயல்படுகின்றது.
ஏதேனும் ஒரு பிரவுசர் சாஃப்ட்வேரில் http://www.bhashaindia.com/ilit/   என்ற
வெப்சைட் முகவரியை டைப் செய்து கொள்ள வேண்டும்.
இதில் Tamil என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள தேர்ந்தெடுத்துக்
கொள்ள வேண்டும். பிறகு Desktop  Version என்ற விவரத்தின் கீழ் இருக்கும் Install Desktop Version    என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த சாஃப்ட்வேர் உங்களை வழிநடத்திச் செல்லும். அது
காட்டுகின்ற வழியில் கிளிக் செய்து கொண்டே பின் தொடர்ந்தால், சில
நொடிகளில் Tamil.exe  என்ற ஃபைல் டெஸ்க்டாப்பில் பதிவாகி விடும். இதை மவுசால் இருமுறை கிளிக் செய்து இயக்க வேண்டும். 

இப்போது இந்த ஃபைல் உங்களை வழிநடத்திச் செல்லுகின்ற வழியில்
சென்று கொண்டிருந்தால் இறுதியில் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டு விட்டது(Installation Completed) என்ற தகவலுடன் விண்டோ ஒன்று தோன்றி, சாஃப்ட்வேர் முழுமையாக இன்ஸ்டால் ஆகிவிட்டதை உணர்த்தும். இதில் Close  என்ற பட்டனைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி தமிழில் டைப் செய்யும் முறை
மைக்ரோசாஃப்ட்டின், தமிழில் டைப் செய்யும் வசதியைக் கொடுக்கின்ற MicroSoft Indic Language Input Tool    என்ற சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தவுடன், அது டெஸ்க்டாப்பில் லாங்குவேஜ் பாரில் வெளிப்படும்.
இதில் இரண்டு பகுதிகள் இருப்பதை கவனிக்கவும். முதல் பகுதி மொழியைத் தேர்ந்தெடுக்கும் பகுதி. இரண்டாவது பகுதி, கீபோர்ட் லே-அவுட்டைத் தேர்ந்தெடுக்கும் பகுதி.
முதல் பகுதியில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்க TA Tamil  என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும். இரண்டாவது பகுதியில் அ Microsoft Indic Language Input Tool என்ற கீபோர்ட் லே&அவுட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதல் பகுதியில் தேர்ந்தெடுக்க TA Tamil என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் தான், இரண்டாவது பகுதியில் அ Microsoft Indic Language Input Tool என்ற கீபோர்ட் லே&அவுட் வெளிப்படும்.

லாங்குவேஜ் பாரின் முதல் பகுதியில் இருந்து, தேர்ந்தெடுக்க TA Tamil 
என்ற விவரத்தையும், இரண்டாவது பகுதியில் அ Microsoft Indic Language Input Tool என்ற கீபோர்ட் லே&அவுட்டையும் தேர்ந்தெடுத்த பிறகு, நாம் தமிழில் யுனிகோடில் டைப் செய்து கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு, எம்.எஸ்.வேர்டில் ஆங்கிலத்தில் டைப் செய்யத்
தொடங்கினால், அவை தமிழில் வெளிப்படத் தொடங்கும். ஒவ்வொரு
வார்த்தையையும் டைப் செய்தவுடன் கீபோர்டில் Space Bar - ஐ அழுத்த
வேண்டும் அல்லது Enter கீயை அழுத்த வேண்டும். 


அம்மா ammaa
அப்பா Appa
ஸ்மார்ட் லேடி smart ledi

ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை யுனிகோட் முறையில் டைப் 
செய்வதற்கு, பொனெடிக் எனப்படும் பேச்சு வழக்கு ஆங்கிலத்தையே
பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழில் நாம் என்ன பேச நினைக்கின்றோமோ,
அதை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்து கொண்டால், திரையில்
தமிழில் வெளிப்படும். இதைத் தான் பொனெடிக் என்கின்றோம்.
தமிழில் டைப் செய்ய நினைக்கும் வார்த்தைகள்ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டிய வார்த்தைகள் எனக்கு ஸ்மார்ட் லேடி தொடர் பிடித்திருக்கு என்று டைப் தமிழில் செய்ய நினைத்தால், ஆங்கிலத்தில் enakku Smaart ledi thodar pidiththirukku  என்று டைப்
செய்ய வேண்டும். என்ன தலையை சுற்றுகிறதா? பழகினால் சரியாகிவிடும்.
27 - 08- 2014 புதன் குவிஸ்https://  என்றால் என்ன?
வங்கியின் வெப்சைட் பெயரை https://  என்று டைப் செய்து தொடங்க வேண்டும்.  https – Hppertext transfer Protocol Secure  என்பது பாதுகாப்பான வெப்சைட் என்று பொருள்படும். https:// என்று தொடங்காமல்  http://  என்று தொடங்கி வெப்சைட்டின் பெயரை டைப் செய்தால் அது நமக்கு அச்சு அசலாக நம் வங்கி வெப்சைட்டைப் போன்ற போலி வெப்சைட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம். அதில் நம் வங்கி அக்கவுண்ட்டின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து விட்டோம் என்றால் போதும், நம் தகவல்கள் ஒட்டு மொத்தமாக அந்த போலி வெப்சைட்டுக்கு சென்று சேமிக்கப்பட்டு விடும். பின்பு அவர்கள் நம் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தினை மொத்தமாக எடுத்துக் கொண்டுவிடுவார்கள்.

பொது இடங்களில் ஏன் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தக் கூடாது?
ஓட்டல்களுக்கு செல்லும் போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்லக் கூடிய வகையில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தின் மூலம் உங்கள் கார்டுகள் ஸ்வைப் செய்யப்பட்டு மொத்த பணமும் அபேஸ் செய்யப்படும் வாய்ப்புகளும் உண்டு. நேரடியாக அவர்கள் ஸ்வைப் செய்யும் போது நீங்கள் கவனிக்கும்படி சூழல் இருந்தால் மட்டும் பயன்படுத்துங்கள்.

ATM இயந்திரத்தில் கார்ட் மாட்டிக் கொண்டு விட்டால் என்ன செய்வது?
• ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்ட் மாட்டிக் கொண்டு விட்டால், உடனடியாக கான்சல் பட்டனை தொடர்ந்து மூன்று முறை அழுத்துங்கள். வெளியே வந்து விடும்.
• அதுபோல கார்டை போட்டு விட்டு பணம் வரவில்லை என்றாலோ அல்லது பணம் வந்த பிறகு கார்ட் வரவில்லை என்றாலோ அல்லது கார்ட், பணம் இரண்டுக்குமே பாதகம் என்றாலோ பதட்டப்படாமல், எந்த வங்கியின் கார்டை பயன்படுத்துகிறோமோ, அந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்து, கார்ட் எண்ணை ப்ளாக் செய்யச் சொல்லலாம்.
• பிறகு காவல் துறையின் சைபர் க்ரைம் துறைக்கு எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம்.உங்கள் மொபைல் உங்களுக்கு மட்டுமே…
ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேனாவை மற்றொருவர் பயன்படுத்தினாலே சரியாக எழுத வராது என்பது எழுத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயம். அதுபோல தான் மொபைலும். உங்கள் மொபைல் உங்களுக்கு மட்டுமே. மற்றொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கர்சீஃபை யாராவது கேட்டு வாங்கி பயன்படுத்துவார்களா? அல்லது மற்றவர்களது உள்ளாடையை யாராவது விரும்பி பயன்படுத்துவார்களா? இதுபோன்றதொரு நாசூக்கு மொபைல் போனிலும் இருக்க வேண்டும்.
மொபைல் போனை தெரியாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம். குறிப்பாக உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் போது, குழந்தைகள் அல்லது இளைஞர்கள் கேம்ஸ் விளையாடுவதற்காக உங்கள் மொபைலைக் கேட்டால் நாசூக்காக மறுக்கவும். ஏனெனில் தவறுதலாக எஸ்.எம்.எஸ்களை அனுப்பி விட வாய்ப்புண்டு. நீங்கள் முக்கியமாக சேமித்து வைத்திருக்கும் எஸ்.எம்.எஸ்கள் டெலிட் ஆகி விடலாம். உங்கள் பர்சனல் விஷயங்கள், பிசினஸ் தொடர்புகள் போன்றவை மற்றவர்களுக்கு லீக் ஆகும் சூழலும் உண்டாகும்.

பிறர் ஸ்டேட்டஸ் பதிவுகளுக்கு நாசூக்கான கமெண்ட்டுகள்
•மேலும் நம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் அத்தனை தகவல்களுக்கும் Share, Like செய்ய வேண்டும் என்பதில்லை. அதுபோல நம் நண்பர்களின் பதிவுகள் அத்தனையையும் Comment செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமும் இல்லை. ஒரு பத்திரிகையை படிப்பதைப் போல படித்து விட்டு சென்று கொண்டே இருக்கலாம்.
•அப்படி பிறரின் கருத்துக்களுக்கு கமெண்ட் கொடுக்கும் போது அவர்களை புண்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும்.
•நம் இமெயில் முகவரி போல, தொலைபேசி எண், மொபைல் எண் போல சோஷியல் நெட்வொர்க் ஐடியை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
•மாற்றவே முடியாத சமுதாயப் பிரச்சனைகள் குறித்து நம் கருத்துக்களை தெரிவித்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.20 - 08- 2014 புதன் குவிஸ்

இன்றைய தலைமுறையினரிடம் ‘ஸ்மார்ட் போன்களின்’ உபயோகமும், அவற்றைக் கையாளும் திறனும் அதிகமாகிவிட்டன. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ‘ஆப்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அப்ளிகேஷன்கள் தான் இதற்கு மிக முக்கியக் காரணம். இன்டர்நெட் வசதியுடன் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சில ஆப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

Whats App:
‘வாட்ஸ் ஆப்’ என்கிற ‘இன்ஸ்டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ், இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். எஸ்.எம்.எஸ் அனுப்புவதைப் போல எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் டெக்ஸ்ட், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் விரைவாக அனுப்ப முடியும்.

Viber:
வைபரின் முக்கிய அம்சமே வாய்ஸ்கால்கள்தான். மிகக்குறைவான செலவில் இன்டர்நெட்டை பயன்படுத்திப் பேசிக்கொள்வதற்கு  ‘வைபர்’ ஆப்ஸ் உதவிசெய்கிறது. இவை தவிர டெக்ஸ்ட், ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் அனுப்ப முடியும். இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
Instagram:
இந்த அப்ளிகேஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கும், அப்லோடு செய்து ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகிறது. மேலும் எடுத்தப் புகைப்படங்களை ஃபில்ட்டர் தன்மைகளைக் கொடுத்து இன்னும் அழகாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதில் இலவச புகைப்பட பகிர்வுத் திட்டம் என்ற வசதி உள்ளது. அதன் தனித்தன்மை புகைப்படங்கள் சதுர வடிவமாகவோ, கோடாக் இன்ஸ்டாமெட்டிக், போலராய்டு படங்களைப் போன்று மொபைலில் எடுத்த படங்களை மாற்றி அனுப்ப முடியும்.
Anti Mosquito:
டார்டாயிஸில் இருந்து தொடங்கி ஆல் அவுட் வரை எத்தனையோ பயன்படுத்தியும் கொசுக்கள் பயப்படுவதாகத் தெரியவில்லை. கடைசியில் மனிதன் டிஜிட்டல் அப்ளிகேஷனை நம்ப ஆரம்பித்ததன் விளைவு, கொசு கடிக்காமல் இருப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஆண்டி மஸ்கிடோ அப்ளிகேஷன். இதை ஆன் செய்தவுடன் போனிலிருந்து ஒருவகையான சத்தம் வரும். அந்தச் சத்தத்தால் கொசுகள் பக்கத்தில் வராமல் ஒதுங்கி ஓடிவிடும். 


Find My iPhone:
நம் ஐபோன்(ஐபேட், ஐபாட் டச்) தொலைந்து விட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு ‘ஃபைண்ட் மை ஐபோன்’ என்ற அப்ளிகேஷன் உதவுகிறது. இந்த அப்ளிகேஷனை மற்றொரு ஐபோனில் இன்ஸ்டால் செய்து கொண்டு இயக்க வேண்டும். உடனடியாக தொலைந்துபோன நம் ஐபோன் எங்கிருக்கிறது என்று மேப்பில் வெளிப்படுத்தி, அதனை லாக் செய்து, ஒரு சப்தத்தை வெளிப்படுத்தி, அதிலுள்ள தகவல்களை பிறர் பயன்படுத்தாவண்ணம் அழித்துவிடும்.

Truth Detector:
ஒருவர் பொய் சொல்கிறாரா அல்லது உண்மையைச் சொல்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்கு ‘ட்ரூத் டிடெக்டர்’ என்ற அப்ளிகேஷன் பயன்படுகிறது. ஒருவர் பேசும் பொழுது, அவரது கட்டவிரலை ஸ்கிரீனில் வைத்து பேச வேண்டும். அந்த ஆப்ஸ் விரலை ஸ்கேன் செய்துவிட்டு அதன் முடிவை வெளியிடும். இது விளையாட்டாக நண்பர்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ringtones:

ரிங்டோன்ஸ் என்ற இந்த நம் மொபைல் உட்பட்ட பல்வேறு டிஜிஸ்ட்டல் சாதனங்களுக்கு ரிங்டோன்களைப் பொருத்திக் கொள்ள உதவுகிறது. இதில் ஏராளமான ரிங்டோன்கள் வடிவமைக்கப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் டோன், இமெயில் டோன், டிவிட்டர் டோன், காலண்டர் டோன், வாய்ஸ்மெயில் அறிவுறுத்தும் டோன் என்று ஏராளமான உள்ளன. இவற்றில் இருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நமக்கு விருப்பமான பாடல்களை வைத்து ரிங்டோன் மேக்கர் என்ற வசதி மூலம் நாமாகவும் புதிதாக ரிங்டோன்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

Kingsoft Office:

கிங்சாஃப்ட் ஆஃபிஸ் என்ற அப்ளிகேஷனை மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் சாஃப்ட்வேரைப் போலவே பயன்படுத்தலாம். இதன் மூலம், டாக்குமெண்ட்டுகளை டைப் செய்து தயாரிப்பது, அலுவல் சார்ந்த கடிதங்கள் எழுதுவது, கற்பனைக் கவிதைகளை எழுதுவது என்று அத்தனை வேலைகளையும் ஸ்மார்ட் போனில் செய்ய இயலும்.  எழுத்துப்பிழை,  இலக்கணப் பிழை என அத்தனையையும் சரிசெய்யும் வசதிகளை உள்ளடக்கியுள்ளது இந்த ஆப்ஸ். பி.டி.எஃப், டெக்ஸ்ட் என பல்வேறு ஃபார்மெட்டுகளில் டாக்குமெண்ட்டுகளில் தயார் செய்யலாம். எம்.எஸ்.வேர்டின் டாக்குமெண்ட்டுகள், எம்.எஸ்.எக்ஸலில் ஸ்பெரெட்ஷீட்டுகள், எம்.எஸ்.பவர்பாயிண்ட்டின் பிரசண்டேஷன் ஃபைல்கள் அனைத்தையும் திறந்து பயன்படுத்த முடியும். மேலும் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம், உருவாக்கிய ஃபைல்களை இந்த ஆப்ஸின் உள்ளேயே சேகரித்தும் கொள்ளலாம்.

13 - 08- 2014 புதன் குவிஸ்

டிப்ஸ்-1
ரிமோட் கம்ப்யூட்டர் அக்ஸஸ்(Remote Computer Access) 

நம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு, உலகில் வேறோர் இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரை இயக்க முடியும். அதற்கு ரிமோட் கம்ப்யூட்டர் அக்ஸஸ் என்று பெயர். இவ்வாறு இயக்குவதற்கு அந்த கம்ப்யூட்டரின் ஐபி முகவரி தேவை.

 
டிப்ஸ்-2
ஐ.பி-IP முகவரி என்றால் Internet Protocol என்றி பெயர். இண்டர்நெட்டில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு முகவரி இருக்கும். அதற்கு ஐபி முகவரி என்று பெயர். அதை வைத்து தான் கம்ப்யூட்டர் ஒன்றை ஒன்று இனம் கண்டு கொள்கின்றன. தொடர்பு கொள்கின்றன.


டிப்ஸ்-3
Uniform Resource Locator என்பதன் சுருக்கமே URL. இது வெப்சைட்டுகளின் முகவரியை குறிக்கிறது.
 http://www.google.com/என்பது கூகுள் வெப்சைட்டின் யு.ஆர்.எல் ஆகும். வெப்சர்வரில் பதிவாகியிருக்கும் வெப்சைட்டுகளை பார்வையிட, பிரவுசர் சாஃப்ட்வேர் மூலம், அவற்றின் யு.ஆர்.எல் முகவரியை கொடுத்தால் தான், அவை வெப்சர்வரில் இருந்து நம் கம்ப்யூட்டர் மானிட்டரில் வெப்பக்கமாக வெளிப்படும்.

டிப்ஸ்-4

உலகளாவிய அளவில் செயல்டுபடுகின்ற அதிகத் திறன்வாய்ந்த கம்ப்யூட்டர் சர்வர் எனப்படுகிறது. அதிக வேகம், அதிக சேமிப்பு, அதிக கொள்ளளவு கொண்ட சர்வர் கம்ப்யூட்டரில் உலகெங்கிலும் உள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டு இன்டர்நெட் இணைப்பில் இணைகின்றன. 


டிப்ஸ்-5
File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இது 

இன்டர்நெட்டில் இணைந்துள்ள நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை வெப்சர்வருக்கு அப்லோடு செய்து அனுப்பவும், வெப்சர்வரில் இருந்து தகவல்களை நம் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்து 
இறக்கிக் கொள்ளவும் உதவுகின்றது. பொதுவாக வெப்டிஸைனிங் செய்து விட்டு, அதை சர்வரில் ஹோஸ்ட் செய்யும் போது இவ்வகை சாஃப்ட்வேர்கள் உதவுகிறது.
டிப்ஸ்-6
Hypertext Transfer Protocol என்பதன் சுருக்கமே HTTP. இது
 
வெப்சர்வரில் இருந்து தகவல்களை வெப்பிரவுசரில் வெளிப்படுத்த உதவுகிறது. அதாவது
 http://mmsmartlady.blogspot.inஎன்று டைப் செய்தால், வெப்சர்வரில் இருந்து மங்கையர் மலர் வலைப்பூவில் பதிவாகியுள்ள தகவல்களை நம் கண் முன் உள்ள கம்ப்யூட்டர் மானிடரில் பிரவுசர் சாஃப்ட்வேர் மூலமாக வெளிப்படுத்த உதவுகிறது.


டிப்ஸ்-7
இன்ஃப்ரின்ஞ்மெண்ட்(Infringement) என்பது விதிமுறையை அல்லது ஒப்பந்தத்தை மீறுதல் என்று பொருள்படும். ஒருவரது படைப்பை தன்னுடையதைப் போலவே வெளிப்படுத்துதல் இந்தப் பிரிவில் வரும். மேலும் அப்படைப்பை புகழ்பெற்ற நபர்களின் பெயரில் வெளியிடும் போது அதன் மூலம் லாபமும் அதிகமாக கிடைக்கும். ஆனால் இவை சட்டப்படி தவறான செயலாகும்.


டிப்ஸ்-8
ப்ளேகியாரிசம்(Plagiarism) 

ஒருவரது படைப்பை எடுத்து, அதில் ஆங்காங்கே மாற்றியமைத்து வேறொரு புதிய படைப்பாக மாற்றி வெளிப்படுத்தும் ஏமாற்று வேலைக்கு ப்ளேகியாரிசம் என்று பெயர். ப்ளேகியாரிசம் என்பது, ஒருவரது படைப்பில் ஆங்காங்கே வார்த்தைகளை மாற்றிஅமைக்கலாம்; அப்படியே ஒவ்வொரு வார்த்தைக்கும் புதிதாக வார்த்தைகளைப் போட்டு புதிதான படைப்பைப் போல வெளிப்படுத்தலாம்; ஐடியாவை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு படைப்பை புதிதாக வெளிப்படுத்தலாம். 


டிப்ஸ்-9
பைரசி(Piracy)
 
பைரசி என்பது விலை கொடுத்து வாங்க வேண்டியதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் இலவசமாகப் பெறுதல் என்பதாகும். உதாரணத்துக்கு திருட்டு விசிடி மூலம் படம் பார்ப்பதை விசிடி பைரசி எனலாம். அதுபோல ஒரிஜினல் சாஃப்ட்வேரை பயன்படுத்தாமல் அதை காப்பி செய்து பயன்படுத்துவதை சாஃப்வேர் பைரசி எனலாம்.
 
இதுபோல ஒருவரது படைப்பை(அது சினிமாவாக இருக்கலாம் அல்லது சாஃப்ட்வேராக இருக்கலாம் அல்லது வேறு எந்த படைப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம்) அவரது உரிமை இல்லாமல், அவருக்கே தெரியாமல் திருட்டுத் தனமாகப் பயன்படுத்துவதை பைரசி என்று சொல்லலாம்.

குக்கீஸ் (Cookies) 
Cookies என்பது நாம் அடிக்கடி பார்வையிட்ட வெப்சைட்டுகள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் வசதியாகும். உதாரணத்துக்கு கூகுளிலோ அல்லது யு&டியூபிலோ நாம் குறிப்பிட்ட தகவலை தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் அவை பற்றிய சிறு குறிப்பு, குக்கீஸாக பதிவாகி இருக்கும். திரும்பவும் அது சம்பந்தப்பட்ட தகவலை அதே கம்ப்யூட்டரில் தேடும் போது அவை வேகமாக திரையில் வெளிப்படும். அதுவே புதிதாக ஒரு டாப்பிக்கைக் கொடுத்து தேடும் போது சர்வரில் முழுமையாக தேடி எடுத்து வெளிப்படுத்த, சில நொடிகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.

காம்கேர் கே புவனேஸ்வரி
மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீம்
06 - 08- 2014 புதன் குவிஸ்
1. ABACUS: மணிச்சட்டம்: மணிகள் வரிசையாகக் கோக்கப்பட்ட, கம்பிகள் பொருத்தப்பட்ட, எளிய கணக்குகளைச் செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டக் கருவி.
2. AI: Artificial Inteligence: செயற்கை நுண்ணறிவு. பகுத்தறிதல், கற்றல் போன்ற மனித அறிவுத் திறனோடு தொடர்புடைய செயல்களைச் செய்யும் கருவி ஒன்றின் திறனோடு தொடர்புடையது.
3. Auxiliary memory: துணை நினைவகம்
4. Babbage: பாபேஜ் என்பவர் கம்ப்யூட்டரின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.
5. Backup Files: பாதுகாப்பு ஃபைல்கள்: ஒரிஜினல் ஃபைல்களின் பிரதிகள். ஒரிஜினல் ஃபைல்கள் அழிந்து விட்டாலோ அல்லது சேதமாகி விட்டாலோ Backup Files மூலம் திரும்பப் பெற இயலும்
6. BIOS - Basic Input Output System: அடிப்படை உள்ளீடு / வெளியீடு அமைப்பு. கம்ப்யூட்டரினுள் இன்புட் செய்வதையும், அவுட்புட்டாகக் கிடைப்பதையும் கட்டுப்படுத்தும் செயலாக்க அமைப்பின் பகுதி
7. Buffer Memory: கூடுதல் நினைவகம்: உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக கூடுதல் நினைவகப் பகுதி
8. Browser: பிரவுசர்: இண்டர்நெட்டில் வெப்சைட்டுகளைப் பார்வையிட உதவும் சாஃப்ட்வேர்
9. BIT: Binary Digit: 0 அல்லது 1 என்ற இரு எண்களில் ஏதேனும் ஒன்று

30-07-2014, புதன் குவிஸ்

மொபைல் போன் தொலைந்து விட்டால் என்ன செய்வது?
•மொபைல் போன் வாங்கும் போதே அதில் நாம் AntiTheft
சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அப்போது அது இரண்டு வேறு மொபைல் எண்களை பதிவு செய்யச் சொல்லி கேட்கும். அதற்கு ரெஃபரென்ஸ் எண்கள் என்று பெயர். அதற்கு நம் அம்மா, அப்பா, கணவன், மனைவி அல்லது பிள்ளைகளின் மொபைல் எண்களைக் கொடுத்துக் கொள்ளலாம். ஏன், நம் மற்றொரு மொபைல் எண்ணையே கொடுத்துக் கொள்ளலாம். அந்த எண் வேறொரு தனி மொபைலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நம் மொபைல் போன் தொலைந்து போய், வேறு நபர்கள் திருடி விட்டால் அவர்கள் நம் சிம் கார்டை அல்லது மெமரி கார்டை வேறு போனில் மாற்றும் போதோ அல்லது கம்ப்யூட்டரில் தகவல்களை டவுன்லோட் செய்ய முயலும் போதோ, நாம் கொடுத்துக் கொண்ட இரண்டு மொபைல் எண்களுக்கும் தொலைந்த அந்த போனில் இருந்த தகவல்களும், மற்ற விவரங்களும் பதிவாகத் தொடங்கும். மேலும், நம் மொபைலை எடுத்தவர் நம் சிம்மை எடுத்து விட்டு, அவரது சிம்மை போடும் போது அந்த சிம்மின் எண் ரெஃபரென்ஸாக நாம் கொடுத்துள்ள மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வரும். நம் போனை எடுத்த நபர் எத்தனை முறை போனை ஆஃப் செய்து ஆன் செய்தாலும், அவரது சிம் எண் எஸ்.எம்.எஸ்ஸாக வந்து கொண்டே இருக்கும். அவர் தப்பிக்கவே முடியாது.
•போன் தொலைந்து விட்டால், உடனடியாக மொபைல் சர்வீஸ் புரொவைடரின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்து புகார் கொடுத்தால், நம் மொபைல் எண்ணை ப்ளாக் செய்து விடலாம். நம்முடைய அதே எண்ணுக்கு வேறு சிம்கார்ட் வாங்கிக் கொள்ள முடியும்.
•மொபைல் சர்வீஸ் புரொவைடர் புகார் அளிக்கும் போது, அவர்கள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வியே ‘போனின் IMEI எண் என்ன?’ என்பது தான். அதை நாம் சரியாக சொல்லவில்லை என்றால், கடையாக நாம் போன் செய்த எண் அல்லது நமக்கு வந்த அழைப்பின் எண் என்ன என்பது தான் அடுத்த கேள்வியாக இருக்கும். இரண்டையும் வைத்து நாம் புகார் அளிக்கும் மொபைல் எண்ணின் சொந்தக்காரர் நாம் தான் என்று உறுதி செய்து கொண்டு, நம் எண்ணை ப்ளாக் செய்து விடுவார்கள். போனை எடுத்தவர்கள் நம் சிம்மை தவறாக பயன்படுத்த முடியாது.
•மேலும் காணாமல் போன போனின் மிவிணிமி எண்ணுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். புகார் அளிக்கும் போது மொபைல் போனின் மாடல் எண், தயாரித்த நிறுவனம், மிவிணிமி எண், கடைசியாக பேசிய தொலைபேசி/மொபைல் எண், மொபைல் போன் தொலைந்த தேதி போன்றவற்றை சரியாக சொல்ல வேண்டும்.
•காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளதால், நம்முடைய மொபைல் போனின் மிவிணிமி எண்ணை வைத்து நம் போனை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், போனை யார், எந்த இடத்தில் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து விடுவார்கள்.
நெட்பேங்கிங் பாஸ்வேர்டுகளை மறந்து விட்டால்?
ஒவ்வொரு வங்கிக்கும் கஸ்டமர் கேர் தொலைபேசி எண் இருப்பதைப் போல, கஸ்டமர்கேர் இமெயில் முகவரியும் இருக்கும். நெட்பேங்கிங் பாஸ்வேர்டுகளை மறந்து விட்டால், வங்கியின் கஸ்டமர் கேர் இமெயிலுக்கு இமெயில் அனுப்பி தகவல் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் நெட்பேங்கிங் ஏற்படுத்திக் கொண்ட போது எந்த இமெயிலை உங்கள் இமெயிலாக குறிப்பிட்டிருந்தீர்களோ அந்த இமெயில் முகவரியில் இருந்து தான் இமெயில் அனுப்ப வேண்டும். வேறு இமெயில் முகவரியில் இருந்து இமெயில் அனுப்பினால் அவர்களால் உங்களை அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவர்கள் டேட்டா பேஸில் நீங்கள் விண்ணப்பபடிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த உங்கள் இமெயில் முகவரி பதிவாகி இருக்கும். அதோடு நீங்கள் எந்த இமெயில் முகவரியில் இருந்து இமெயில் அனுப்பி உள்ளீர்களோ அதை ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் ஒத்திருந்தால் தான், உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் முகவரியை வைத்திருந்தால், எந்த இமெயில் முகவரியை நெட்பேங்கிங் உருவாக்கும் போது கொடுத்திருந்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தடுமாற வேண்டியிருக்கும்.
இமெயிலை சரிபார்த்த பிறகு, ஒரு வார காலத்துக்குள் உங்களுக்கு புதிய பாஸ்வேர்டை தபாலில் அனுப்பி வைப்பார்கள். தபாலில் பாஸ்வேர்ட் வந்ததும் வழக்கம் போல உடனடியாக அதில் மாற்றம் செய்து கோண்டு விட வேண்டும். வெப்சைட்டில் அதற்கான வசதி இருக்கும்.
இப்போது சில வங்கிகளில் அவர்கள் நெட்பேங்கிங் வெப்சைட்டிலேயே பாஸ்வேர்ட் மறந்து விட்டால் மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுக்கிறார்கள்.
ATM இயந்திரத்தில் கார்ட் மாட்டிக் கொண்டு விட்டால் என்ன 
செய்வது? 
•ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்ட் மாட்டிக் கொண்டு விட்டால், உடனடியாக கான்சல் பட்டனை தொடர்ந்து மூன்று முறை அழுத்துங்கள். வெளியே வந்து விடும்.
•அதுபோல கார்டை போட்டு விட்டு பணம் வரவில்லை என்றாலோ அல்லது பணம் வந்த பிறகு கார்ட் வரவில்லை என்றாலோ அல்லது கார்ட், பணம் இரண்டுக்குமே பாதகம் என்றாலோ பதட்டப்படாமல், எந்த வங்கியின் கார்டை பயன்படுத்துகிறோமோ, அந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்து, கார்ட் எண்ணை ப்ளாக் செய்யச் சொல்லலாம்.
•பிறகு காவல் துறையின் சைபர் க்ரைம் துறைக்கு எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம்.
நெட்பேங்கிங் வழியாக டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியவை:
ஆன்லைனில் மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வருமான வரி போன்ற கட்டணங்களை கட்டி விட்டோ அல்லது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பிறகோ அல்லது பொருட்களை வாங்கி விட்டோ டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது அவர்கள் கீழ்க்காணும் விவரங்களை கேட்பார்கள்.
•டெபிட் கார்ட் எண்
•காலாவதி ஆகும் தேதி
•CVV எண்
•கார்டில் அச்சிடப்பட்ட உங்கள் பெயர்
இவற்றை சரியாக டைப் செய்தால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து கட்டணம் சரியாக அவர்கள் அக்கவுண்ட்டிற்கு கிரெடிட் ஆகி விடும். இவ்வாறு ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வெப்பக்கத்தை F5 அழுத்தி REFRESH செய்தால் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி நடக்கும். நேரம் நிறைய எடுத்துக் கொண்டாலும் பொறுமையாக காத்திருக்கவும். கட்டணம் செலுத்தப்பட்டதற்கான உத்திரவாதம் வந்த பிறகு உங்கள் வெப்பக்கத்தை விட்டு வெளியேறலாம்.
கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கும் போது உங்கள் வங்கிக்கான வெப்பக்கம் திடீரென வேலை செய்யாமல் போனாலோ அல்லது மின்சாரம் நின்று போய் தானாகவே உங்கள் கம்ப்யூட்டரே ரீ-ஸ்டார்ட் ஆனாலோ நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆகி இருக்கலாம். ஆனால் உரிய இடத்துக்கு அந்த தொகை கிரெடிட் ஆகாமல் போகலாம். உதாரணத்துக்கு இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இதுபோல பிரச்சனை ஏற்பட்டு, கட்டணம் உங்களிடம் இருந்து டெபிட் ஆகிவிடும். ஆனால் டிக்கெட் உங்களுக்கு உறுதி செய்யப்படாமல் இருந்தால் கவலை வேண்டாம். முன்பதிவு செய்கின்ற வெப்சைட்டில் 'Your Payment is not successful. If debited from your account, it will be credited in 3-4 working Days' ' என்ற தகவல் வெளிப்படும்.
எனவே தைரியமாக, மீண்டும் முன்பதிவு செய்யுங்கள். கட்டணம் செலுத்துங்கள். முன்பு உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன தொகை நான்கைந்து நாட்களுக்குள் உங்கள் அக்கவுண்ட்டிற்கு கிரெடிட் ஆகி விடும்.
பணம் டெபிட் ஆவதும், கிரெடிட் ஆவதும் உடனுக்குடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு தகவலாக அனுப்பப்பட்டு விடும். இதை வங்கி ஸ்டேட்மெண்ட்டுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
டெபிட் கார்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
•டெபிட் கார்டின் பின்புறம் தெளிவாக கையெழுத்திட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
•உங்கள் டெபிட் கார்டை நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
•டெபிட் காட்டை ஜெராக்ஸ் எடுத்து யாருக்கும் கொடுக்கக் கூடாது.
•வங்கி ஏஜென்ட்டுகள் என்று யாரும் வந்து கேட்டாலும் டெபிட் கார்டின் நகலை ஸ்கேன் செய்தோ, ஜெராக்ஸ் எடுத்தோ கொடுக்கக் கூடாது.
•இன்டர்நெட் மூலமோ, தொலைபேசி மூலமோ, உங்கள் டெபிட் கார்ட் எண் மற்றும் CVV எண்ணை(கார்டின் பின்புறம் உள்ள எண்ணின் கடைசி மூன்று இலக்குகள்) யாரும் கேட்டால் தெரிவிக்கக் கூடாது.
•அதுபோல இன்டர்நெட் மூலம் பஸ்/ரயில்/விமான டிக்கெட்டுகளை வாங்க பிற ஏஜென்டுகளிடம் டெபிட் கார்ட் எண் மற்றும் CVV எண்ணை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. டெபிட்கார்டை நீங்கள் மட்டுமே நேரடியாகப் பயன்படுத்தவும்.
டெபிட் கார்டை ‘பின் எண்ணை’ பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
•ஏ.டி.எம் இயந்திரத்தில் டெபிட் கார்டை போட்டு, முதன் முதலில் வங்கி அனுப்பி இருக்கும் ‘பின் எண்ணை’ பயன்படுத்தி உள்ளே சென்று, Change PIN Number என்ற விவரத்தின் மூலம் பின் எண்ணை மாற்றிக் கொள்ள வேண்டும்.
•அது போல பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு மாதத்துக்கு ஒரு முறையோ பின் எண்ணை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.
•டெபிட்கார்டிலேயோ அல்லது அதற்கான கவரின் மேலேயோ பின் எண்ணை எழுதி வைக்கக் கூடாது.
•உங்கள் ரசனை அறிந்த உங்கள் நண்பர்களும்,உறவினர்களும் கூட அந்த எண்ணை கண்டுபிடிக்காத வண்ணம் சிக்கலான எண்ணாக அமைத்துக் கொள்வது சிறந்தது.
•அதுபோல உங்கள் மொபைல் மற்றும் இமெயிலில் டெபிட் கார்டின் பின் எண்ணை பதிவாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது.
சைபர் க்ரைம் என்றால் என்ன?
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர்.
சைபர் உலகில் வாழுந்து வரும் டிஜிட்டல் மனிதர்களாகிய நம்மை இணைப்பது இன்டர்நெட், வங்கி மற்றும் மொபைல் இவை மூன்றும் தான். இவற்றின் மூலம் கிடைக்கின்ற பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற போதே, அவற்றினால் உண்டாகக் கூடிய ஆபத்துக்களையும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. நமக்கு ஏற்பட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இல்லாமல், இப்போதே அவற்றில் கவனம் செலுத்துதல் சாலச் சிறந்தது.
வெர்ச்சுவல் உலகம்
ஒரு தனிமனிதன் பெரிய தவறுகள் எதையும் திறம்பட செய்து விடமுடியாது. அவனுடன் இணைந்து செயலாற்ற அவன் மனநிலையை ஒத்த ஒருசிலர் இருந்தால் மட்டுமே, தவறுகளை கூட தவறில்லாமல் செய்ய முடியும். அதுபோல ஒரு தனிமனிதன் தன்னளவில் மிகச் சிறிய அளவில் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களை, பலருடன் இணைந்து செய்யும் போது, அவன் செய்கின்ற நற்செயல்கள் பெரிய அளவில் விஸ்வரூபமெடுத்து பலரைச் சென்றடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகத்துக்கு இடமேயில்லை. நற்செயலோ, தீயசெயலோ பலர் கூடி செய்யும் போது அவற்றின் பலன் இரட்டிப்பாகிறதல்லவா? அதுபோல தான் தனி கம்ப்யூட்டரினால் உண்டாகும் பலன்கள், நெட்வொர்க்கில் இணைக்கப்படும் போது பலமடங்காகிறது. அதுபோலவே, பிரச்சனைகளும் சற்று கூடுதலாகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? எனவே, பிரச்சனைகள் வரவே கூடாது என்று நினைப்பதை விட்டு, எப்படி அவற்றைக் குறைக்கலாம் என்று யோசித்து செயல்பட வேண்டும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில், அன்றாடம் நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலையையும் இன்டர்நெட்டில் இயங்கி வரும் வெர்ச்சுவல் உலகில் செய்ய முடியும் என்று பார்த்தோம் அல்லவா? அதுபோல, இவ்வுலகில் நேரடியாக நமக்கு உண்டாகின்ற பிரச்சனைகளும், ஆபத்துக்களும் வெர்ச்சுவல் உலகிலும் ஏற்படும். திருட்டு, கொலை, கொள்ளை, வழிபறி, ஏமாற்று வேலை, பிளாக் மெயில் செய்தல் இப்படி எல்லாவிதமான தீயசெயல்களும் சைபர் உலகிலும், டிஜிட்டல் முலாம் பூசிக்கொண்டு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, நேரடியாக நம் பாக்கெட்டில் வைத்திருக்கும் பணத்தை திருடிக் கொண்டு செல்லும் செயல், நம் அக்கவுண்ட்டில் இருந்து நம் பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக் கொண்டு அபேஸ் செய்கின்ற செயலாகி விட்டது. அதுபோல கைகளால் எழுதிய கடிதங்களையும், புகைப்படங்களையும் ஜெராக்ஸ் எடுத்து பலருக்குக் கொடுத்து அதன்மூலம் ப்ளாக் மெயில் செய்கின்ற செயல், இன்டர்நெட் மூலம் வெப்சைட்டுகளில் பப்ளிஷ் செய்து மிரட்டுகின்ற மார்டன் மிரட்டலாகி உள்ளது.
23-07-2014, புதன் குவிஸ்

இந்த லோகோ எந்த சாஃப்ட்வேருடையது. அது குறித்து இரண்டு பாயிண்ட்டுகள் குறிப்பு வரைக.

1. எம்.எஸ்.வேர்டில் புகைப்படங்களை இணைத்துக் கொள்ள Insert என்ற டேபில் Pictures என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொண்டு தேவையான புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உடனே அந்த புகைப்படம் எம்.எஸ்.வேர்ட் டாக்குமெண்ட்டில் இணைந்து விடும்.
2. எம்.எஸ்.வேர்டில் தகவல்களை டைப் செய்ய உதவும் பகுதிக்கு டாக்குமெண்ட் என்று பெயர். எம்.எஸ்.வேர்ட் ஃபைல்களுக்கு டாக்குமென்ட் ஃபைலகள் என்று பெயர்.
இந்த லோகோ எந்த சாஃப்ட்வேருடையது. அது குறித்து இரண்டு பாயிண்ட்டுகள் குறிப்பு வரைக.

1.எம்.எஸ்.எக்ஸல் ஃபைல்களுக்கு ஸ்பெரெட் ஷீட்(Spread Sheet) ஃபைல்கள் என்று பெயர். 
2. கணக்கீடுகளை செய்து கொள்ளவும், தகவல்களை அடுக்கிக் கொள்ளவும்(Sorting) உதவுகிறது

3. ஃபார்முலாக்களைப் பயன்படுத்தி கணக்கீடுகளை செய்து கொள்ள முடியும். ஏராளமான ஃபங்ஷன்களும், ஃபார்முலாக்களும் உள்ளன.
இந்த லோகோ எந்த சாஃப்ட்வேருடையது. அது குறித்து இரண்டு பாயிண்ட்டுகள் குறிப்பு வரைக.

1. எம்.எஸ்.பவர்பாயின்ட் என்பது பிரசண்டேஷன் செய்ய உதவும் சாஃப்ட்வேராகும்.
2. பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலகங்களில் பிரசண்டேஷன் செய்ய இந்த சாஃப்ட்வேர் உதவுகிறது...

3. பவர்பாயிண்ட் ஃபைல்களுக்கு பிரசண்டேஷன் ஃபைல்கள் என்று பெயர்.

16-07-2014, புதன் குவிஸ்
1.      இமெயிலில் உள்ள கடிதங்களை எப்படி வேர்டில் சேவ் செய்து வைத்துக் கொள்வது? 

இமெயிலில் வந்த மெயில்களை அப்படியே Ctrl + C போட்டு காப்பி செய்து, எம்.எஸ்.வேர்டில் Ctrl + V போட்டு பேஸ்ட் செய்து சேவ் செய்து கொள்ளலாம்.

2.      இமெயிலில் வீடியோ ஃபைல்களை இணைத்தனுப்புவது எப்படி?

இமெயிலில் வீடியோ லிங்குகளை மட்டும் தான் இணைத்து அனுப்ப இயலும்.

3.      பெயிண்ட் சாஃப்ட்வேரில் டைப் செய்ய இபலுமா?

பெயிண்ட் சாஃப்ட்வேரில் டூல் பாக்ஸில் இருந்து டெக்ஸ்ட் டூலைப் பயன்படுத்தி டைப் செய்யலாம்.

4.      யு-டியூபில் இயங்கிக் கொண்டிருக்கும் வீடியோவின் முகவரியை எப்படி எடுத்து இமெயிலில் அனுப்ப இயலும்?

ஒரு வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும் போது அட்ரஸ் பாரில் அதன் முகவரி இருக்கும். அது தான் அந்த வீடியோவின் முகவரி. அதை காப்பி பேஸ்ட் செய்து இமெயிலில் அனுப்பலாம்

5.      சாட் விண்டோவில் நாம் டைப் செய்து உரையாடுவதை எப்படி டெலிட் செய்வது?

சாட் விண்டோவின் மேல்பக்க வலது மூலையில் Clear Window என்ற விவரம் இருக்கும். அதைக் கிளிக் செய்து சாட் விண்டோவில் உள்ளவற்றை அழித்துக் கொள்ளலாம்

09-07-2014, புதன் குவிஸ்


03-07-2014, வியாழன் குவிஸ்

 • twitter- என்பது ஒரு குறும் வலைபதிவு சேவை.
 • Linked in - சோசியல் நெட்வொர்கிங் ப்ரொஃபஷனல் வெப்சைட் ஆகும். தொழில் நுட்ப வல்லுனர்கள் இணைந்து பணி சார்ந்த தொடர்புகளை உருவாக்க. 
 • You tube - வீடியோக்களை பார்வையிட, பகிர உதவும் வெப்சைட்
 • Blogger - நம்மை பற்றிய , நமக்கு பிடித்தமான தகவல்களை பகிர உதவும் வெப்சைட்.
 • Flicker - புகைப்படம் ஷேர் செய்து கொள்ள உதவும் வெப்சைட்.
 • Facebook - நட்ப்புவட்டம் உருவாக்கிக்கொண்டு செயல்படும் சோசியல் நெட்வொர்க்.
ஹாய்....
ஃபேஸ்புக்கில் புதிதாக இணைந்திருக்கும் வாசகிகளுக்காக மீண்டும் சாட் மீட் குறித்து சிறு அறிமுகம்

1. புதன் தோறும் மதியம் 2-4 மணி வரை சாட் மீட் நடைபெறும்.
2. ஆன்லைனில் சிறு வகுப்புகள் நடைபெறும்.
3. நீங்கள் உங்கள் பொதுவான தொழில்நுட்ப சந்தேகங்களையும் கேட்கலாம். தெளிவு பெறலாம்.
4. வாரந்தோறும் குவிஸ் உண்டு.
5. அனைவரும் பங்கு பெறலாம்.
6. பதில்களை கமெண்ட்டில் டைப் செய்யக் கூடாது
7. கண்டிப்பாக பதில்களை சாட் விண்டோவில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
8. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம்.
9. அன்றைய சாட் மீட் குறித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். அவை http://www.mmsmartlady.blogspot.in/  என்ர மங்கையட் மலர் பிளாகில் பதிவாகும்.
10. அதுபோல குவிஸ்ஸில் வெற்றி பெற்றவர்கள் விவரம் ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும்.
11. குவிஸ்ஸிற்கான பதில்கள் http://www.mmsmartlady.blogspot.in/   மங்கையர்  மலர் பிளாகில் வெளியிடப்படும்.
12. வாசகிகள் கேட்கின்ற தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான பதில்கள் ONe to ONe சாட் மூலமாகவே பதில் அளிக்கப்படும். எனவே சங்கோஜப்படாமல் கேள்விகளைக் கேளுங்கள். சாட் மீட்டில் கலந்து கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்
காம்கேர் கே புவனேஸ்வரி
மங்கையர் மலர் ஸ்மார்ட் லேடி டீம்

25-06-2014, புதன் கிழமை குவிஸ்

1. எம்.எஸ்.எக்ஸல் என்பது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
2. இது எம்.எஸ்.ஆஃபீஸ் சாஃப்ட்வேரின் ஓர் அங்கம்.
3. எம்.எஸ்.வேர்டில் நுழைவதைப் போலவே, எக்ஸல் சாஃப்ட்வேரிலும் Start -> All Programs -> MSEXCEL என்ற விவரத்தின் மூலம் உள்ளே நுழைந்து கொள்ளலாம்.
4. எம்.எக்ஸலில் உள்ளே சென்றவுடன் கிடைக்கின்ற திரையின் பெயர், ஸ்பெரெட் ஷீட்.
5. இதில் ஏராளமான Row க்களும், Column களும் இருக்கும்.

6. Row-க்கள் 1,2,3,4 என்று பெயரிடப்பட்டிருக்கும்

7. Column கள் A,B,C,D என்று பெயரிடப்பட்டிருக்கும்.

8. ஒரு Row-வும், ஒரு Column -மும் மீட் செய்யும் இடத்துக்கு CELL என்று பெயர்

9. செல்லின் முகவரி அந்த செல் எங்கிருக்கிறதோ அதைப் பொருத்து மாறுபடும். இப்போது செல் A1 என்ற இடத்தில் இருப்பதால் A1 என்பது 

தான் செல் முகவரி

எக்ஸலில் கணக்கீடுகள்:

இரண்டு செல்களில் மதிப்புகளை டைப் செய்து கொண்டு அதன்
கூட்டல்(+), கழித்தல் (-), பெருக்கல் (*), வகுத்தல் (/) என்ற கணக்கீடுகளை செய்து கொள்ளும் முறையை இது வரைப் பார்த்தோம். இனி மீண்டும் சொல்கிறேன்
---------------------------------------
B1 என்ற செல்லில் 90 என டைப் செய்யுங்கள்
B2 என்ற செல்லில் 3 என டைப் செய்யுங்கள்
B3 -ல் என்ற செல்லில் =(B1+B2) என டைப் செய்தல் 93 என்ற பதில் கிடைக்கும்(கூட்டல்)
B4 -ல் என்ற செல்லில் =(B1-B2) என டைப் செய்தல் 90  என்ற பதில் கிடைக்கும்( கழித்தல்)
B5 -ல் என்ற செல்லில் =(B1*B2) என டைப் செய்தல் 270 என்ற பதில் கிடைக்கும். (பெருக்கல்)
B6 -ல் என்ற செல்லில் =(B1/B2) என டைப் செய்தல் 30 என்ற பதில் கிடைக்கும் (வகுத்தல்)
---------------------------------------------
A10 என்ற செல்லில் 100 என டைப் செய்யுங்கள்
A11 என்ற செல்லில் 50 என டைப் செய்யுங்கள்

A12 - செல்லில் கூட்டல் – A10+A11
A13 - செல்லில் வகுத்தல் – A10 / A11
A14 - செல்லில் கழித்தல் – A10 -  A11
A15 - செல்லில் பெருக்கல் – A10 * A11
----------------

18-06-2014, புதன் கிழமை குவிஸ் 

குவிஸ் கேள்விகளும், பதில்களும்...

1. ஃபைல்களை சேவ் செய்ய உதவும் ஷார்ட் கட் ...........Ctrl + s
2. டாக்குமெண்ட்டில் உள்ள அத்தனை தகவல்கலையும் ஒரே நேரத்தில் செலக்ட் செய்ய் உதவும் ஷார்ட் கட்..................Ctrl + A
3. பிரிண்ட் எடுக்க உதவும் ஷார்ட் கட்.................Ctrl + P
4. ஒரு கடிதத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிகளை இணைத்து பல கடிதமாக்கும் முறைக்கு ................. என்று பெயர். மெயில் மெர்ஜ்
5. திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலைகளை ஒரே ஒரு கீயில் ஷார்ட் கட்டாக செய்து வைத்துக் கொள்ளும் முறைக்கு ............... என்று பெயர். மேக்ரோ
6. டாக்குமெண்ட்டின் பின்பக்கம் டிம் கலரில் வெளிப்படும் எழுத்துக்களுக்கும், படங்களுக்கும் .............. என்று பெயர். வாட்டர் மார்க்
7. Ctrl + C என்பது ..............காக பயன்படுகிறது. காப்பி செய்வதற்கு
8. Ctrl + X என்பது ...............காக பயன்படுகிறது. கட் செய்வதற்கு
9. எம்.எஸ்.வேர்ட் என்பது ------------காக பயன்படுகிறது. டைப் செய்வதற்காக
10. எம்.எஸ்.வேர்ட் என்பதன் விரிவாக்கும்..............................மைக்ரோ சாஃப்ட் வேர்ட்


04-06-2014, புதன் கிழமை குவிஸ் 


 1. CC - என்றால் என்ன? கார்பன் காப்பி - இமெயில் முகவரிகளை இந்த இடத்தில் கமா கொடுத்து டைப் செய்து அனுப்பலாம்.
 2. BCC - என்றால் என்ன? பிளைண்ட் கார்பன் காப்பி - இமெயில் முகவரிகளை இந்த இடத்திலும் கமா கொடுத்து டைப் செய்து அனுப்பலாம்.
 3. cc - என்ற இடத்தில் இமெயில் முகவரிகளை டைப் ய்து அனுப்பும் போது அவை யார் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். சரியா? தவறா? ஆம். தெரியும்.
 4. நாம் அனுப்பும் இமெயில்கள் மிகவும் பிரைவசியாக இருக்க வேண்டுமென்றால் எதில் இமெயில் முகவரிகளை டைப் செய்து அனுப்பலாம். CC அல்லது BCC? BCC -ல் அனுப்பினால் இமெயிலை பிரைவசியாக அனுப்ப முடியும்.
 5. இமெயில்களை டைப் செய்யும் போது அவ்வப்போது சேவ் செய்ய முடியுமா? முடியும். அதற்கு SAVE DRAFT என்ற விவரம் உதவுகிறது.
 6. JUNK ஃபோல்டர் என்றால் என்ன? தேவையில்லாத, வைரஸ் பாதிக்கப்பட்ட ஃபைல்கள், சந்தேகத்துக்கு உட்பட்ட ஃபைல்கள் இந்த ஃபோல்டருக்கு வந்து சேரும். 
 7. JUNK ஃபோல்டரில் இருந்து INBOX க்கு இமெயில்களை நகர்த்திக் கொள்வது எப்படி? MOVE TO என்ற விவரத்தைப் பயன்படுத்து நகர்த்திக் கொள்ளலாம்.
 8. REPLY, REPLY ALL வித்தியாசம் என்ன? REPLY என்றால் யார் நமக்கு இமெயில் அனுப்பி இருக்கிறாரோ அவருக்கு மட்டும் பதில் இமெயில் அனுப்புவது. REPLY ALL என்றால் நமக்கு இமெயில் அனுப்பிய நபர் நம்மைப் போல  எத்தனைப் பேருக்கு CC / BCC போட்டு அனுப்பி இருக்கிறாரோ அத்தனை பேருக்கும் பதில் இமெயில் அனுப்ப உதவும் வசதி.
 9. ஜிமெயிலில் மிகப்பெரிய ஃபைலை எப்படி அனுப்புவது? கூகுள் டிரைவ் மூலம் அனுப்பலாம்.
 10. ஓன் டிரைவ் என்பது எதற்கு பயன்படுகிறது? ஹாட்பெயிலில் ஃபைல்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதி

28-05-2014, புதன் கிழமை குவிஸ் 
இன்றைய குவிஸ்ஸில் கலந்து கொண்டு கலக்கிய தாய், மகள் இருவருக்கும் வாழ்த்துக்கள். தாய்: Ms. சொர்ணாம்பிகை எட்வர்ட், மகள்; பிரியதர்ஷிணி எட்வர்ட். யாருக்கு யார் ரோல் மாடல் என்று வியக்க வைக்கும் அளவுக்கு இருவருமே போட்டிப் போட்டுக் கொண்டு சாட்-மீட்டில் ஆரம்பத்தில் இருந்து கலந்து கொண்டு வருகிறார்கள். இருவரையும் வாழ்த்துவோம்.

21-05-2014, புதன் கிழமை
குவிஸ் கேள்வியும், பதிலும்!

இன்றைக்கு மூளைக்கு வேலை...

சமூக வலைதளங்கள்(ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக்) - நன்மைகளும், தீமைகளும்!

1.இரண்டு பாராக்கள், அதிகபட்சம் 50 வரிகள்.
2. உண்மையில் நடந்த நிகழ்வை எடுத்துக் காட்டியிருந்தால் நல்லது.
3. உங்கள் கருத்துக்களை சாட் விண்டோவில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. தமிழில் மட்டுமே டைப் செய்ய வேண்டும்.
5. நேரம்: 3.30 க்குள் அனுப்ப வேண்டும்.
வாழ்த்துக்கள்.


காம்கேர் கே புவனேஸ்வரி
மங்கையர் மலர்
ஸ்மார்ட் லேடி டீம்

இன்றைய ஃபேஸ்புக்-சாட்  தங்க கிரீடம் சூட்டப்படுபவர்
திருமிகு. பிருந்தா ரமணி

வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்:


 • பல்வேறுபட்ட மனிதர்களின் நட்பு கிடைக்கிறது.  அதன் மூலம் அவர்களிடம் இருந்து     பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
 • யூ ட்யுப் மூலமாக நம்முடைய பதிவுகளைப் புகைப்படங்களுடன் அப்லோட் செய்ய    முடிகிறது.
 • சமையல் பற்றிய குறிப்புகளை யூ ட்யுப் மூலமாகப் பார்க்கும் பொழுது ஸ்டெப் பை      ஸ்டெப்பாக சொல்லித் தருவதால் நாம் எதையும் செய்ய முடிகிறது.  உதாரணத்திற்குச்     சொல்ல வேண்டும் என்றால் என் பெண் இப்போது தான் திருமணமாகித் தனிக்குடித்தனம்     சென்றாள்.  சமையலில் சந்தேகம் ஏற்பட்டால் என்னிடம் போன் செய்து கேட்பாள்.    தவிர ப்ளாக், யூ ட்யுப் போன்றவைகளில் பார்த்தும் சமையல் செய்து  இன்று நன்றாகவே     சமைக்க ஆரம்பித்து விட்டாள். (6 மாதங்களுக்குள்).  
 • சமையல் தான் என்றில்லை.  கோலம், கைவேலைப்பாடு, சங்கீதம்,   ................இப்படிப்      பல துறைகளிலும் நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது.
 • உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது .  உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நமது ஃபேஸ் புக் சாட் தோழி மல்லிகா      சண்முகம் அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு    உரையாட முடிகிறது.
 • நம்முடைய பள்ளிக்காலத்தில் நம்முடன் படித்தவர்களை இனம் கண்டு நட்பு கொள்ள    முடிகிறது.
 • இருந்த இடத்தில் இருந்து கொண்டே எல்லா இடங்களையும் பார்க்க முடிகிறது.   அங்கு   உள்ளவர்களுடன் உரையாட முடிகிறது.
 • இன்று வேலை நிமித்தமாகப் பல ஆண்களும், பெண்களும் பெற்றோரை விட்டுத்    தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை.  இந்நிலையில் அவர்களுக்குப் பொழுது போக்காக    அமைகிறது இந்த மாதிரியான சமூக வலைதளங்கள் தான்.
 • ஜி மெயில் சாட் மூலமாக நமக்கு வேண்டிய நபர்களுடன் உரையாடல் செய்ய முடிகிறது. 
 • வெளிநாட்டில்/வெளியூரில் நம்முடைய பிள்ளையோ, பெண்ணோ இருந்தால் ஸ்கைப்      மூலமாகப் பேச முடிகிறது.  (அதுவும் அவர்களைப் பார்த்து).  போன வாரம் என் பெண்ணும்  மாப்பிள்ளையும் வண்டியில் அலுவலகம் செல்லும் போது ஆட்டோ ஒன்றின் மீது மோதி     சிறு விபத்து ஏற்பட்டு விட்டது.  அவள் என்னிடம் போன் பேசும் போது "எங்களுக்கு ஒன்றும்  ஜாஸ்தி அடிபடவில்லை; சிறு சிராய்ப்பு தான், பயப்பட வேண்டாம்" என்றாள்.  நான் உடனே    கிளம்பி வரவா என்றால் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.  உடனே ஸ்கைப்பில் வரச்  சொல்லிப் பார்த்துப் பேசியவுடன் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

தீமைகள்:

 • நிறைய நபர்கள் நம்மிடம் உண்மையான தவல்களைச் சொல்லுவதில்லை.     பெண்கள் தான் பாவம்.  தாங்கள் பேசும் நபர்களிடம் உண்மையைச் சொல்லிக்     கடைசியில் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.  
 • நம்மிடம் உண்மையான நண்பர்கள் போலப் பேசிச் சில நேரங்களில் நம்முடைய     வங்கிக் கணக்கு பற்றியத் தகவல்களை அறிந்து கொண்டு நம் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.
 • அடுத்தவர் லிங்கை நாம் அறியாமலேயே அவர்கள் போய்ப் பார்ப்பது.  அதன் மூலம்     தகவல்கள் அறிந்து கொண்டு அவர்களுக்குத் தொல்லைகள் கொடுப்பது (பல     வழிகளிலும்)
 • உண்மையான புகைப்படங்களைப் போட்டால் அதிலும் தில்லுமுல்லு செய்து நம்மை   ஆபத்தில் மாட்டி விடுகிறார்கள்.
 • நம்முடைய தனிப்பட்ட விஷயங்கள் எல்லாமே மற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறது.

இன்றைய ஃபேஸ்புக்-சாட்  தங்க கிரீடம் சூட்டப்படுபவர்
திருமிகு. லஷ்மி தேவி

முகநூல் நன்மைகள்: 

நாம் நம்முடைய நட்பு வட்டத்தை விரிவுபடுத்தி கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது. நம்முடைய பழைய காலத்து தோழர்களையும் , தோழிகளையும் தொடர்பில்லதவர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. என்னுடைய பள்ளி , கல்லூரி நட்பினை புதுப்பித்துக்கொண்டது முகநூல் மூலம் தான். மேலும் நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் துணைபுரிகிறது. பொதுநல நோக்கோடு ரத்ததானம், காணவில்லை போன்ற தகவல்களை பகிரிந்து கொள்ளவும், மருத்துவ குறிப்புகளை நாமமும், நாம் நட்புகளும் அறிய துணை புரிகிறது.  நம்முடைய அறிவினை "up to date அப்டேட்" ஆகா வைத்துக்கொள்ள உதவுகிறது... "முகநூல் முத்து"

முகநூல் தீமைகள்: 

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல முகநூலில் தீமைகளும் உள்ளது வருந்ததக்கது.. ஆம், என்னுடைய தோழி ஒருத்தி "டுப்ளிகாடே"  friend - id க்கு accept குடுத்து விட்டு அந்த friend மூலம் ஆபாசமான படங்கள் பார்க்க நேர்ந்தது. மேலும் தற்போது சுதாரித்துகொண்டாள். மேலும் நம் மனதிருக்கு பிடிக்காத தகவல்களும் பார்க்கநேரிடுகிறது. மேலும் அவ்வப்போது செக் செய்து கொண்டே இருக்கும்படியாகிறது. அதாவது 'முகநூலுக்கு'  போதை அடிமை ஆனார்போல ஒரு எண்ணம் வருகிறது. மேலும் நாம் குடும்ப புகைப்படம்,தகவல்கள், up to date status தருவதால் சிலர் தவறாக கையாள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தெரியாத நட்புகளை தவிர்த்துவிடுவது நல்லது.. முகநூல் மோகத்தால் இளைஞர்கள், மாணவர்கள், கல்லூரிபெண்கள் தங்கள் படிப்பினை கோட்டை விடுகின்றனர்.  நன்மை தீமைகள் இருந்தாலும் நாம் நடந்துகொள்ளுவதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.


இன்றைய ஃபேஸ்புக்-சாட்  வெள்ளி  கிரீடம் சூட்டப்படுபவர்
திருமிகு. மல்லிகா சண்முகம்

நன்மைகள்
 • நட்ப்புறவுகள்அதிகமாக்கிக் கொள்ள பயன் படுகிறது.
 • சமூக ஆர்வளர்கள் தங்கள் கருத்துக்களை,செய்திகளை மக்களிடம் சென்று சேர்க்க பயனுள்ளதாக இருக்கிறது.
 • பயனுள்ள தகவல்களை தேடும் ஒருவர்,தங்களுக்கு கிடைத்த சில தகவல்களை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள உதவுகிறது.
 • இணைய வழி விளம்பரபடுத்தும் நிறுவனாகளுக்கே இது பெரிதும் பயன் படுகிறது
 • வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை,புகைப்படம்,குறும்படம் மூலம் பகிர்ந்துக் கொள்ள உதவுகிறது.
தீமைகள்
 • நம் பொதுவில் வைக்கும் தகவல்களை பயன்படுத்தி நாமே அறிந்திராத சில தீயவர்கள், நம் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ மோசடி செய்வதிருக்கு வழிவகுக்கிறது.
 • மாணவர்கள் தகவல் பகிர்ந்தலில் முகநூலில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களின் கல்விக்காகவும்,உடற்பயிர்ச்சிக்காகவும் உரிய நேரம் அளிப்பதில்லை
 • சிலர் அன்றாட நிகழ்வுகளை பகிர்தல் மூலம் , தீயவர்கள் பலவித மோசடிகள் செய்கின்றனர். ஒருவீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை ஆராய்ந்த காவல் துறையினர், கொள்ளை அடித்தவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்கையில், அந்த வீட்டு பெண் , சமூக வலைத்தளத்தில் தாங்கள் விடுமுறை சுற்றுபயணம் செல்வதாகவும், குறிப்பிட்ட சில தினங்களுக்கு வெளியூரில் இருப்பதாக பகிந்திருந்தையும் வைத்து, அந்த வீட்டில் யாரும் இருக்க வழியில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு, கொள்ளை அடித்தோம் என்பதாக கூறியுள்ளனர்.
 • வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்களுடன் கலந்துரையாடாமல், உறவாடாமல், எப்பொழுதும் இணையத்திலேயே ஒன்றியிருக்க செய்து, உறவினர்களை இழக்க செய்கின்றது.
இன்றைய ஃபேஸ்புக்-சாட்  வெள்ளி  கிரீடம் சூட்டப்படுபவர்
திருமிகு. வசுமதி கண்ணன்

நன்மைகள் : 

நாட்டு நடப்புகள், நமக்கு நண்பர்களாகிறவர்களின் நண்பர்கள் கூட்டம், நாம் பார்க்க முடியாத சூழலில், வெளி நாட்டு சுற்றுலா சென்றவர்கள் அபூர்வ / ஆச்சர்யமான இடங்களை அனுப்பும் புகைப் படங்களால் நாமும் அவர்களோடு இருப்பது போன்ற உணர்வும், உலகில் நடக்கும் அக்கிரமங்களை ஆதாரத்தோடு படிக்கும்போது ஏற்படும் எச்சரிக்கையும், யார்? எப்படியிருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் புகைப் படங்கள், நாளடைவில் அவர்களது வளர்ச்சி, என மொத்தத்தில், களிப்பு, சிரிப்பு நிறைந்த நவரசக்கலவைகள் அரங்கேறும் கலை நய மேடையாய் விளங்குவது அனைவருக்குமான நன்மைகளே!

தீமைகள் : 

ஆண்கள் விரிக்கும் வலையில் பெண்கள் சீரழிவது தினம் தினம் கதையாகி விட்ட நிலையை புரட்டி போட்டது சமீபத்தில் நான் படித்த ஓர் நிகழ்வை.  ஒரு ஆண் மகனை உருக உருக காதலிப்பது போன்று நடித்து, அவளை சந்திக்கச் சென்ற போது, அவன் எதிரில் நின்றாளாம்... தனது மூன்று குழந்தைகளுடன்!.  இதில் அதிர்ச்சி தருகிறோம் என்கிற கேலிச் சிரிப்பும், எகத்தாளமும்.  ஒருவரை ஒருவர் முகம் பாராமல், கேவலமான உணர்ச்சிகளை முன்னிறுத்தி, மற்றவரது முழு வாழ்க்கையையுமே சிதரடிக்கும் வழித்தடமாக்கிக் கொண்டு விட்டனர்   சமூக வலைதளங்களை. பிறரை புண்படுத்திப் பார்க்கும் கிறுக்கு எண்ணங் கொண்டு நிகழும் நிகழ்வுகளுக்கு, இரு பாலருமே  சளைத்தவர்களில்லை. நன்மையும், தீமையும் சமூக வலைதளங்களில்லை, அதை உபயோகிக்கும் முறையில் தான் இருக்கிறது. 

இன்றைய ஃபேஸ்புக்-சாட்  வெண்கல கிரீடம் சூட்டப்படுபவர்திருமிகு. சாரதா சுப்ரமணியன்


பேஸ்புக் நன்மைகள்

நீண்டநாட்கள் தொடர்பு இல்லாதவர்களிடம் தொடர்பு கொள்ளநல்லதொருவாய்ப்பு.
நமக்குதெரிந்தவற்றை நம் சிநேகிதர்களிடமும் அவர்களுக்கு தெரிந்தவற்றை நாமும் பகிர்ந்து கொள்ளலாம். பல அரிதான ஒலிக்காட்சிகளைக் காணலாம்.குறிப்பாகப்பெண்கள் இல்லத்தில் இருந்தபடியே தொழில் செய்ய நல்லவாய்ப்பு.அறுவைச்சிகிச்சைக்கு மருத்துவமணையில் சேர்ப்பதுமுதல் இரத்ததானம் வறை அறிய நல்லதொரு ஊடகம்.. பொருட்கள் வாங்க்கவிற்க இப்படி அடுக்குக்கொண்டேபோகலாம் ...

தீமைகள்

பலர் இந்த ஊடகத்தை துஷ்பிரயோகம் செய்து தேவையில்லா புகைப்படங்கள் ஆபாசஒலிப்படங்கள் வெளியிடுவது,
மேலும் படிக்கும் பள்ளிமாணவர்கள் முதல் கள்லூரிமாணவர்கள் வரை காலவ்ரையில்லாமல் இதிலேயே அமர்ந்து பொழுது போக்குவது என்று தீமைகளும் உள்ளன.
எதுவுமே எல்லைக்குள் இருந்தால் எல்லாவற்றிற்கும் நல்லதே

இன்றைய ஃபேஸ்புக்-சாட்  வெண்கல கிரீடம் சூட்டப்படுபவர்
திருமிகு: கிளாரா கிளைமண்ட்

நன்மைகள்: 

வலைதளங்களின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள முடிகிறது மற்றும் பயனுள்ள செய்திகளை பற முடிகிறது கல்வி  உடல் ஆரோக்கியம் பொது அறிவு அரசியல் நிலவரம் ஆன்மிக்ம் அறிவியல் என பலவற்றில் வளர வலை தளங்கள் இன்றியமையாதது உதாரணமாக உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் தானிய வகைகளை நான் ஃபேஸ் புக் மூலமே பெற்று வருகிறேன் பிர்ந்திருக்கும் உறவுகள் தொடர்பு கொள்ளவும் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களை பகிரவும் உதவுகிறது


தீமைகள்:

இளைய சமுதாயம் பாதிக்கப்புவது மறுக்க முடியாத உண்மை சாட்டங் மூலமும் பயனற்ற வீடியோக்களை பார்ப்பது   பலரின் பாதையை திசை திருப்புகிறது வன்முறையும் பாலியல் செயல்பாடுகளில் ஒழுங்கின்மையும் ஏற்பட ஏதுவாகிறது  ஃபோட்டோஸ் அப்டேட் செய்வதற்கென்றே நேரத்தை வீணடிக்கும் மக்களும் உண்டு கண்மூடித்தனமாக சென்று கொண்டிருக்கும் இக்கூட்டத்திற்கு அனபு பண்பு கலாச்சாரம் எதுவும் மக்கியமில்ல

இன்றைய ஃபேஸ்புக்-சாட்  வெண்கல கிரீடம் சூட்டப்படுபவர்
திருமிகு: ரஜினி பாலா
ஒரு நாணயத்தின் இருபுறம் போல, சமூக வலைதளங்களும் நன்மையையும் தீமையையும் ஒருங்கே பெற்றுள்ளன. இவை வெகு நாட்களாக தொடர்பில் இல்லாத நம் பழைய நண்பர்களைக் கண்டறியவும், யாருக்காவது அவசர உதவி வேண்டியிருந்தால் விரல் நுனியில் வேண்டியவர்களுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்யவும், தொழில் செய்பவர்களுக்கு தம் வியாபாரத்தை உலகின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்று விளம்பரப்படுத்தவும், நம் படைப்புகளை உலகறிய வெளியிடவும் ஒரு உன்னத மனித சங்கிலியாய் திகழ்கிறது. எகிப்து நாட்டின் கொடுங்கோல் ஆட்சியை ஃபேஸ்புக் மூலம்தானே இரவோடு இரவாக பல லட்சம் மக்களை ஒன்றிணைத்து கவிழ்த்தார்கள்?                                        
ஆனால் அதே சமயம் முகம் தெரியாத மனிதர்கள் முகமூடியுடன் சாட் செய்வதால், அவர்கள் விரிக்கும் மாயவலையில் சிறியவர் முதல் பெரியவர் வரை வீழ்ந்து அவதிக்குள்ளாவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது? உதாரணத்திற்கு நம் மங்கையர் மலரில் (ஏப்ரல் 16-30) முள்ளும் மலரும் பகுதியில் வெளிவந்த ஒரு உண்மை சம்பவமே போதும். அது இரு தோழிகள் ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்ட முகம் தெரியாத நண்பர்களை சந்திக்கச் சென்ற போது அவர்களது சுயரூபம் தெரியவர,  தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் ஓடிவந்த அனுபவம். இதுபோன்ற கதைகள் ஏராளம். எனவே சமூக வலை தளங்களை சிந்தித்து சுயஅறிவுடன் உபயோகிப்பது அவசியம்.

14-05-2014, புதன் கிழமை
குவிஸ் கேள்வியும், பதிலும்!


A
Apple

Electrical

LCD

DISK

Kilo Byte

....இப்படி ஓரெழுத்து தொழில்நுட்ப வார்த்தையில் இருந்து தொடங்க வேண்டும். வார்த்தையின் இறுதி எழுத்தில் இருந்து அடுத்த வார்த்தைத் தொடங்க வேண்டும். இப்படியாக 10 வார்த்தைகளை தொடுக்க வேண்டும்.முதலில் ஓரெழுத்து...

அந்த எழுத்தில் இருந்து அடுத்து இரண்டெழுத்து வார்த்தை...

அந்த வார்த்தையின் இறுதி எழுத்தில் இருந்து அடுத்து மூன்றெழுத்து வார்த்தை...

அந்த வார்த்தையின் இறுதி எழுத்தில் இருந்து அடுத்து 4 எழுத்து வார்த்தை...இப்படியாக 10 எழுத்து வார்த்தை வரை தொடர வேண்டும்.


அத்தனையும் கம்ப்யூட்டர், இண்டர்நெட் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வார்த்தையாக மட்டுமே இருக்க வேண்டும்.

நேரம்: 3.15 pm வரை

வழக்கம் போல சாட் விண்டோவில் மட்டுமே பதில்களை அனுப்ப வேண்டும்.

வாழ்த்துக்கள்.

காம்கேர் கே புவனேஸ்வரி


மங்கையர் மலர், ஸ்மார்ட் லேடி டீம்இன்றைய குவிஸ்ஸிற்கான விடைகளுக்கு, நம் ஃபேஸ்புக் ரீடர் Ms.பிருந்தா ரமணியின் பதிலையும், Ms. லஷ்மி தேவியின் பதிலையும் டெடிகேட் செய்து அவர்கள் இருவரையும் வாழ்த்துகிறேன்.
பிருந்தா ரமணியின் பதில்கள்

1. k

2. kb
3. bit
4. type
5. email
6. log out
7. twitter
8. read only
9. yahoo mail
10. leased line

லஷ்மி தேவியின் பதில்கள்
07-05-2014, புதன் கிழமை
குவிஸ்  கேள்வியும், பதிலும்
இன்றைய குவிஸ்

1. Computer
2. Software 
3. Technology
4. Social Networking
5. Mail


இந்த ஐந்து வார்த்தைகளில் இருந்து அதிகபட்ச கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வார்த்தைகளை கண்டு பிடித்து எழுதவும். அதாவது இதிலுள்ள எழுத்துக்களின் காம்பினேஷன்களை வைத்து டெக்னாலஜி வார்த்தைகளை எத்தனை எழுத முடியுமோ அத்தனையையும் எழுதுங்கள்.

நேரம் 3.15 க்குள் அனுப்ப வேண்டும்.
சாட் விண்டோவில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஆங்கில வார்த்தைகளால் மட்டுமே டெக்னாலஜி வார்த்தைகள் அமையப் பெற வேண்டும்.


இதற்கு மிகச் சிறப்பாக பதில் அளித்த Ms. ரஜினி பாலா அவர்களின் பதிலையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.1) Google

 2)  g mail 
3) yahoo 
4) Skype 
5) Hot mail 
6) Twitter  
7)Whatsapp 
8) Home page 
9) Ctrl 
10) Alt 
11)  Shift 
12) Caps Lock 
13) Enter 
14) app 
15) Esc 
16) Mouse 
17) Monitor 
18) Laptop 
19) Key 
20) UPS 
21) CPU 
22) PC 
23) Cut 
24) Copy 
25) Paste 
26) Print 
27) Scan 
28) Spam  
29) Program 
30) Pop Up 
31) Plug in 
32) Page 
33) Surf 
34) Security 
35) Spyware 
36) User 
37) Hacker  
38) Phishing 
39) Format 
40) FTP 
41) HTML 
42)  http 
43) log in 
45) cookie 
46) OS 
47) Apple 
48) Microsoft 
49) Malware 
50) Macintosh 
51) Net cafe  
52) Netscape 
53) Network 
54) RAM 
55) ROM 
56) PROM 
57)  Photoshop   
58) Outlook 
59) firewall 
60) floppy 
61) flash 
62) memory 
63)  font  
64) file  
65) Icon  
66) host  
67) Graphics 
68) Online 
69) offline 
70) Search 
71)  URL  
72) User name 
73) Scroll 
74) Screenshot 
75) Snapshot  
76) Table 
77) Tag 
78) Trash  
79) Compose 
80) WiFi30-04-2014, புதன் கிழமை
            குவிஸ் கேள்வியும், பதிலும்

இன்றைய குவிஸ்ஸிற்கான விடைகளுக்கு, நம் ஃபேஸ்புக் ரீடர் Ms.லஷ்மி தேவியின் பதிலையே டெடிகேட் செய்து அவரை வாழ்த்துகிறேன்.
23-04-2014, புதன் கிழமை

Assorted Sweet போல Assorted quiz….

1.      www.sendspace.com – இந்த வெப்சைட் எதற்கு பயன்படுகிறது?
பெரிய சைஸ் ஃபைல்களை அதிவேகமாக ஒரு இமெயில் முகவரியில் இருந்து மற்றொரு இமெயில் முகவரிக்கு அனுப்ப உதவுகிறது.
2.      Wi-Fi என்றால் என்ன? Li-Fi என்றால் என்ன?
Wireless network என்று பொருள்படும். அதாவது கேபிள் இல்லாமல் கம்ப்யூட்டர்களை நெட்வொர்க் தொடர்பில் இணைக்க உதவும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்.
இண்டர்நெட் இயங்கவும் தகவல்களைப் பரிமாறவும் இனி சூரிய சக்தியே போதும். பகலில் கிடைக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி சூரிய சக்தித் தகடுகள் மூலம் உலகளாவிய வலையின் சமிக்ஞைகளைக் கண்டறியவும் தகவல்களைப் பரிமாறவும் அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.
கேபிள்கள் மூலம் இணைக்கப்படாத ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் இணி இண்டர்நெட்டை இயக்கலாம். இண்டர்நெட் வேலை செய்யத் தேவையான ஆற்றலையும் சூரிய சக்தித் தகடுகள் வழங்கும். கரண்ட் போய்விட்டால் கம்யூட்டரை இயக்க முடியாது என்னும் நிலைமை போயே போய்விடும்.
இந்தத் தொழில்நுட்பத்தை லைஃபை (Li-Fi) என அழைக்கின்றனர்.  
3.      நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கி விட்டதே? சரி, தவறு.
சரி
4.      கண்ணாடி போல இருக்கும். ஆனால் இது மூக்குக் கண்ணாடி அல்ல! இது என்ன?
கூகுள் கிளாஸ்
5.      மேகம் மழையைக் கொடுக்கும். இந்த மேகம் தகவல்களைக் கொடுக்கும். இது என்ன?
கிளவுட் கம்ப்யூட்டிங்
6.      யு-டியூபில் நாம் எடுக்கும் வீடியோக்களை பப்ளிஷ் செய்ய முடியுமா?
முடியும்.
7.      யு-டியூபில் விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?
   நாம் என்ன வீடியோ பார்த்துக் கொண்டிடுக்கிறோமோ, அந்த வீடியோவின் முகவரியை காப்பி செய்து, பிரவுசர் சாஃப்ட்வேரில் பேஸ்ட் செய்து. முகவரிக்கு முன், www. க்குப் பின் ss என்ற இரண்டெழுத்தைச் சேர்த்து கீபோர்டில் எண்டர் கீயை அழுத்தினால் டவுன்லோடு செய்ய அதுவே வழிகாட்டிக் கொண்டே வரும். விரிவான பதிலை தெரிந்து கொள்ள http://mmsmartlady.blogspot.in/p/blog-page_7299.html என்ற மங்கையர் மலரின் லிங்கைப் பார்க்கவும்.


16-4-2014 புதன் கிழமை

குவிஸ் கேள்வியும்-பதிலும் 


9-4-2014 புதன் கிழமை
குவிஸ் கேள்வியும்-பதிலும் 

C
CGI
Common Gateway Interface. வெப்சர்வரில் இயங்குகின்ற வெப்சைட்டுகள் மற்றும் புரோகிராம்களுக்குத் தேவையான விதிமுறைகளை நிர்ணயம் செய்கின்றன.

O
OCR
Optical Character Recognition. நாம் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் ( PDF, IMAGES, PAPER DOCUMENTS Files) அல்லது புத்தகங்களிலிருந்து தட்டச்சு செய்யாமலேயே கணினியில் பயன்படுத்தும் எழுத்துக்கோப்புகளாக(.doc files) மாற்றுவதற்கு இம்மென்பொருள் உங்களுக்கு உதவும்.

M
MPEG
Moving Picture Experts Group.
ஆடியோ, வீடியோக்களை உருவாக்கும் போது பயன்படுத்தும் ஃபார்மேட்

P
PDF
Portable Document Format.  இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் கொண்டு திறக்கலாம். 
பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும்.

U
URL
Uniform Resource Locator.  வெப்சைட் முகவரியை யு.ஆர்.எல் முகவரி எனலாம்.

T
TCP/IP
Transmission Control Protocol/Internet Protocol.   
இண்டர்நெட்டில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்ள உதவும் புரோகிராம்/தொழில்நுட்பம்

E
E-Book
electronic book. கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், இ-புக் ரீடர், மொபைல் போன்றவற்றில் படிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் புத்தகம்.

R
RGB
Red-Green-Blue
இவ்வகை கலர் கலவை கிராஃபிக்ஸ் வேலைகளில் பயன்படுகின்றன.


                         
                         2-4-2014 புதன் கிழமை 
                     குவிஸ் கேள்வியும்-பதிலும்


26-03-2014 புதன் குவிஸ் 
கேள்வியும் - பதிலும்


குறுக்கெழுத்து குவிஸ் 
சிவப்பு கலர்: Space / Not Usable
1


பை

ன்

ங்
2ஸ்


பே
ஜ்
3

யா

நா
தெ


4

டி

ப்
5
பி

க்

6
போ7
யு


ட்
8

தா


9
மே

ரோ

10
பா


ட்

  1.   முதல் பெண் புரோகிராமர்
2.   இயந்திரத்தையும்  கணிதத்தையும் இணைத்தவர்
3.   மேகக் கணினி சப்ஜெக்ட்டில் ஸ்பெஷலிஸ்ட்-மைக்ரோ சாஃப்ட்டில் பணி.
4.   வீடியோ
5.   இது உங்களைப் படைப்பாளியாக்கும்
6.   ஃபேஸ்புக்கில் நீண்ட நாட்களாக அமைதியாக இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஹாய் சொல்லல்
7.   தமிழை எல்லா ஊடகங்களிலும் பயன்படுத்தும் முறை
8.   இந்த பெண்ணின் பெயரில்  தமிழ் மொழிக்கான ஃபாண்ட் .
9.   எம்.எஸ்.வேர்டில் ஷார்ட் கட்டாக சில வேலைகளை செய்து கொள்ள உதவும் வசதி
10. முதல் மூன்றெழுத்து நடிகர் பவர் ஸ்டார் பெயரில்  இருக்கும். பிரசண்டேஷன் செய்ய உதவும் சாஃப்ட்வேர்.

குவிஸ் பதில்
1
டா

பை
ன்
கி
ங்
2
சா
ர்
ஸ்

பா
பே
ஜ்
3
த்
யா

நா
தெ
ள்
ளா
4
யு
டி
யூ
ப்
5
பி
ளா
க்

6
போ
க்


7
யு
னி
கோ
ட்
8
தா


9
மே
க்
ரோ

10
 ப
ர்

பா
யி
ண்
ட்

19-03-2014 புதன் குவிஸ் பதில்கள்
Red  = Fill upYellow  = SpaceBlue = Not Usable
QUIZ:  Fill up the Blank
Example:
B


L


A

E


Answer: BILL GATES
C

O

D

CU
T
I
N
G


AB


KG
E

G

A

S

H
AA

PV

B

R
Red  = Fill upYellow  = SpaceBlue = Not Usable
QUIZ:  Fill up the Blank

C
L
O
U
D

C
O
M
P
U
T
I
N
G

F
A
C
E

B
O
O
KG
O
O
G
L
E

G
L
A
S
S
W
H
A
T
S

A
P
PV
I
B
E
R1. Cloud Computing – மேகக் கணினி –உலகளாவிய மிகப் பெரிய சர்வர் .  
2.   Face Book – முகநூல் – நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது.
3.   Google Glass - நம் கண்கள் எதையெல்லாம் நோக்குகின்றனவோ, அவற்றையெல்லாம் கூகுள் கிளாஸின் காமிரா நோக்கும். தகவல்களை சேகரிக்கும்
4.   Whats App – ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஒரு அப்ளிகேஷன். குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ ஃபைல்கள் போன்றவற்றை இண்டர்நெட் தொடர்பின் உதவியுடன்  ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் வைத்துள்ள நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
5.   Viber – இதுவும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஒரு அப்ளிகேஷன். இதன் மூலம் தொலைபேசியில் பேசுவதைப் போல பேச முடியும். ஸ்மார்ட்போனில் வைபர்  வைத்துள்ள நண்பர்களுடன் மட்டும் தான் பேச முடியும்  என்பது குறிப்பிடத் தக்கது. 


13-03-2014, வியாழன் குவிஸ் பதில்கள்


1. லேப்டாப்பில் பாஸ்வேர்ட் போட்டு பயன்படுத்துவதைப் போல கைரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்த முடியுமா? ஆம்? இல்லை?

பதில்: முடியும்.

2. கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்ய பயன்படுத்தும் போது அதை இண்டர்நெட் வெப்பக்கங்கள், ப்ளாக், ஃபேஸ்புக் போன்றவற்றில் பயன்படுத்த எந்த ஃபாண்டில் டைப் செய்யப்பட்டிருக்க வேண்டும்?

பதில்: யுனிகோட்

3. ஃபேஸ்புக்கில் ஆன் லைனில் இல்லாதவர்களுக்கும் தகவல்களை அனுப்ப முடியும். சரியா? தவறா?

பதில்: சரி.

4. இமெயில் பாஸ்வேர்ட் தொலைந்து விட்டால் எப்படி திரும்பப் பெறுவது?

பதில்: நம் மொபைல் எண் மற்றும் இரகசியக் கேள்வி இரண்டையும் இமெயில் உருவாக்கும் போது கொடுத்திருப்போம். அவற்றில் மூலம் இழந்த பாஸ்வேர்டை திரும்பப் பெற இயலும். Forget Password என்ற விவரத்தைக் கிளிக் செய்தால் அது உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டே வரும்.

5. ஃபேஸ்புக்கில் நம் புகைப்படங்களை அப்டேட் செய்து கொண்டே இருப்பது பாதுகாப்பானதா? உங்கள் கருத்து 1 வரியில்.

பதில்: கூடுமானவரை பர்சனல் புகைப்படங்களை அப்டேட் செய்யாமல் இருப்பது சிறந்தது.


26-02-2014, புதன் கிழமைக்கான குவிஸ் பதில்கள்

மைக்ரோ சாஃப்ட்டின் புதிய தலைமை செயல் அதிகாரி: சத்யா நாதெள்ளா


சத்யா நாதெள்ளா

இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, உலகின் மிகப் பெரும் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேகக் கணினிய தொழில்நுட்பத்தில் சத்யா நாதெள்ளாவுக்கு இருக்கும் அனுபவம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வழிநடத்திச் செல்ல அவருக்கு உதவிகரமாக இருக்கும் என அதன் நிறுவனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாதெள்ளா, நிறுவனத்தின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கு இடையூறாக எந்தத் தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
பில்கேட்ஸ் வகித்து வந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, கடந்த 2000-மாவது ஆண்டு, ஸ்டீவ் பால்மர் தேர்வானார். அதன் பின்னர் சுமார் 13 ஆண்டுகள் கழித்து, மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சத்யா நாதெள்ளாவுக்கு தற்போது 46 வயதாகிறது.

இவர் தனது இளங்கலை படிப்பான எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கை மங்களூர் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மாஸ்டர் டிகிரியை (கம்ப்யூட்டர் சையின்ஸ்) விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ. மாஸ்டர் டிகிரியை சிகாகோ பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.
வாட்ஸ்-அப் மொபைல் அப்ளிகேஷனை வடிவமைத்தவர்: ஜான் கூக்
இன்று உலகமெங்கும் வாட்ஸ்-அப் மொபைல் அப்ளிகேஷன் மூலம் உலகெங்கிலும் உள்ளவர்களுடன் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை எளிதாகக் குறைந்த கட்டணத்தில் அனுப்பி பயனடைந்து வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தால் 19 பில்லியன் டாலர்களுக்கு அதிபதியாகியுள்ள ஜான் கூமின் கடந்த கால வாழ்க்கை போராட்டம் நிறைந்தது.
சோவியத் யூனியன் உடைநத பிறகு உக்ரைனில் யூதர்களுக்கு எதிரான போலீஸாரின் அடக்கு முறையில் இருந்து தப்பித்து தாயுடம் அமெரிக்காவில் குடியேறிய ஜான் கூம் ஒரு வேளை சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. சாப்பாட்டிற்காக பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். பழைய புத்தகக் கடையில் இருந்து கம்ப்யூட்டர் புத்தகங்களை வாங்கிப் படித்தார். பிறகு ஒரு மளிகைக் கடையில் தரையை சுத்தம் செய்கின்ற பணியை செய்தவாறே கல்லூரிப் படிப்பை முடித்தார். இதற்கிடையில் அவரது தாய்க்கு புற்று நோய் பாதித்தது.
கல்லூரிப் படிப்பை முடித்த பின் சிலிகான் வேலியில் உள்ள ஒரு பாதுக்காப்பு நிறுவனப் பணியில் சேர்ந்தார். அங்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரையன் ஆக்டன் நண்பரானார்.
ஜான் கூமின் தாய் இறந்த பிறகு ஆக்டன் ஆதரவளித்தார். இருவரும் இணைந்து யாகூவில் பணியாற்றியவாறு தங்களுடைய கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 2007-ல் யாகூவை விட்டு வெளியேறிய பின், மொபைல் போன்களில் பயன்படுத்தும் வாட்ஸ்-அப் அப்ளிகேஷனை வெற்றிகரமாக தயாரித்து செயல்படுத்தினர்.
இந்த தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. எந்த இடத்தில் தன் தாயுடன் ஒருவேளை சாப்பாட்டிற்காக கையேந்தி வரிசையில் நின்றாரோ, அதே சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

16 வயதில் இருந்து போராடத் தொடங்கிய ஜான்கூம் தன் 38 வயதில் கோடீஸ்வராகி சாதித்துள்ளார்.

19-02-2014, புதன் கிழமைக்கான குவிஸ் பதில்கள்

சைபர் க்ரைம் என்றால் என்ன?
வெர்ச்சுவல்  உலகில் வாழுந்து வரும் டிஜிட்டல் மனிதர்களாகிய நம்மை இணைப்பது இன்டர்நெட், வங்கி மற்றும் மொபைல் இவை மூன்றும் தான். இவற்றின் மூலம் நடைபெறுகின்ற குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர். சுருங்கச் சொன்னால்  கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த குற்றங்களுக்கு சைபர் க்ரைம் என்று பெயர்.
 தனிநபர்களின் கம்ப்யூட்டர்களில் இருந்து அவர்கள் அனுமதி இன்றி அவற்றைப் பயன்படுத்துவது, அவர்களின் தகவல்களை பென் டிரைவ், சிடி போன்றவற்றில் காப்பி எடுத்தல் இவையும் சைபர் குற்றமாகவே கருதப்படும். அதுபோலவே காமிரா மற்றும்  மொபைல் மெமரி கார்ட் இவற்றில் உள்ள தகவல்கள் மீதான அத்துமீறல்களும் சைபர் குற்றம் என்ற பிரிவில் தான் வரும்.
ஸ்கிம்மர்  என்றால் என்ன?
சைபர் க்ரைமில் ஈடுபடும் திருடர்கள் ஸ்கிம்மர் என்ற கருவியை ஏ.டி.எம் இயந்திரத்தில் அல்லது ஸ்வைப்பிங் செய்கின்ற இயந்திரத்தில்,  கார்டை பொருத்தும் இடத்தில் நமக்கே தெரியாமல் பொருத்தி வைத்திருப்பார்கள். நாம் அதை கவனிக்காமல், நம் கார்டை பொருத்தி விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறி நம் வேலையை கவனிக்கச் சென்று விடுவோம். நம் கார்டின் ஒட்டு மொத்த பயோடேட்டாவும் அந்த ஸ்கிம்மர் கருவியில் பதிவு செய்யப்படுகின்றன.
ஸ்கிம்மரில் இருந்து தகவல்கள் ரீடர் என்ற கருவி மூலம் கம்ப்யூட்டரில் பதிவாக்கப்படுகின்றன.
பின்னர் அந்த தகவல்கள் இமெயில் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அது போலவே வெளிநாடுகளில் இருந்தும் தகவல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் புதிதாக கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஸ்கிம்மர் மூலம் சேகரிக்கப்பட்ட கார்ட் எண் மற்றும் பிற விவரங்கள் என்கோடிங் செய்யப்படுகின்றன.
இவற்றை வைத்துக் கொண்டு மற்றவர்கள் அக்கவுண்ட்டில் இருந்து ஆன்லைன் பர்சேஸ், ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்தல் போன்றவை கனஜோராக நடைபெறுகின்றன.
இது போன்ற ஏமாற்று வேலைகள் நைஜீரியன் நாட்டினரால் பெரும்பாலும் செய்யப்படுவதால் இதற்கு நைஜீரியன் மோசடி என்று பெயர்.
OTP என்றால் என்ன?
One time Password  என்பதன் சுருக்கமே OTP என்பதாகும். ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யும் போது, OTP – One time Password  என்ற பாஸ்வேர்ட் நம் மொபைலுக்கு அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்டைப் பயன்படுத்தி தான் ஆன்லைனில் நாம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இது பணப்பரிமாற்றத்துக்கு சிறப்புப் பாதுகாப்புக் கொடுக்கிறது. இந்த பாஸ்வேர்ட் நம் மொபைலுக்கு அனுப்பப்படுவதால், வேறு யாரேனும் நம் அக்கவுண்ட்டை நம் அனுமதியின்றி பயன்படுத்திக் கொண்டிருந்தால் நமக்கு தெரிந்து விடும். நாம் விழித்துக் கொள்ளலாம் அல்லவா?
ஹேக்கிங் என்றால் என்ன?
நம்மை அறியாமல் நம் மூலமாகவே அல்லது நமக்குத் தெரியாமல் நம் இமெயில், வங்கி மற்றும் பல ஆன்லைன் அக்கவுண்ட்டுகளின் பாஸ்வேர்டைத் திருடுவதே பிணீநீளீவீஸீரீ எனப்படுகிறது. இச்செயலை செய்பவர்களுக்கு பிணீநீளீமீக்ஷீs என்று பெயர்.
இமெயில் முகவரி, சமூக வலைதள முகவரி, வங்கி அக்கவுண்ட் மற்றும் பிற ஆன்லைன் அக்கவுண்ட்டுகளின் பாஸ்வேர்டைத் திருடுவதே இவர்களின் முதன்மையான நோக்கமாகும். இதுபோல வெப்சைட்டுகளையும் திருடி விடுகிறார்கள்.
ஃபிஷ்ஷிங் என்றால் என்ன?
மீன் பிடிக்கத் தூண்டில் போடுவதைப் போல, நமக்கு போக்கு காண்பித்து, உங்களுக்கு உயர்ரகக் கார் பரிசு விழுந்துள்ளது, லாட்டரியில் ஒருகோடி பரிசு விழுந்துள்ளது என்பதைப் போன்ற ஆசை வார்த்தைகளைக் கொட்டி இமெயில் அனுப்பி, நம்மிடம் இருந்தே நம் வங்கி அக்கவுண்ட்டின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை வாங்கிக் கொண்டு நம் வங்கி அக்கவுண்ட்டை முடக்குதல்; நம் கம்ப்யூட்டரையும், நம் ஆன்லைன் அக்கவுண்ட்டுகளையும் செயலிழக்கச் செய்தல் போன்ற வேலைகள் சைபர் வேர்ல்டில் திறம்பட நடைபெறும். இதற்கு Phishing  என்று பெயர். 
வாழ்த்துக்கள்
காம்கேர் கே புவனேஸ்வரி
12-02-2014, புதன் கிழமைக்கான குவிஸ் பதில்கள்SID என்பது என்னஎதற்காக இதை ஸ்பெஷல் நாளாக வைத்திருக்கிறார்கள்?இது குறித்து 5 அல்லது 6 வரிகளுக்குள் எழுதவும். - இது தான் இன்றைய கேள்வி.

இதற்கான பதில் http://www.mmsmartlady.blogspot.in/p/blog-page_22.html  இந்த லிங்கில் உள்ளது.  படித்துப் பார்க்கவும்விரிவான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்வாழ்த்துக்கள்.  நன்றி

இப்படிக்கு அன்புடன்,
காம்கேர் கே புவனேஸ்வரிஸ்மார்ட் லேடி டீம்

05-02-2014, புதன் கிழமைக்கான குவிஸ் பதில்கள்

Quiz-1:

சரியான பதிலுக்குப் பொருத்தமான எண்களுடன் விடையை தெரிவிக்கவும்.
1.   கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்யப் பயன்படும் முறை…
a)   யுனிகோட்
b)   பைனரிகோட்
c)   ஃபாண்ட்
பதில்: 1.A

2.   நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ள உதவுகின்ற சோஷியல் நெட்வொர்க்?
a)   ப்ளாக்
b)   இமெயில்
c)   ஃபேஸ்புக்

பதில்: 1.C

3.   ப்ளாக் என்பது?
a)   பதிவுகளை எழுத்து/படம்/வீடியோ இவற்றுடன் இணைத்து வெளிப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
b)   வீடியோ பதிவுகளுக்கு மட்டும் உதவுகிறது
c)   புகைப்படப் பதிவுகளுக்கு மட்டுமானது.

பதில்: 1.A

4.   யு-டியூப் என்பது?

a)   வீடியோ பதிவுகளை பப்ளிஷ் செய்வதற்கு உதவும் வெப்சைட்
b)   இது வெப்சைட்டே அல்ல. சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கம்.
c)   புகைப்படங்களை வெளிப்படுத்த உதவும் வெப்சைட்
பதில்: 1.A

5.   பிகாசா என்பது?

a)   வீடியோ பதிவுகளுக்கானது
b)   புகைப்படப் பதிவுகளுக்கு மட்டுமானது
c)   நட்பு வட்டத்தை வளர்க்க உதவும் வெப்சைட்

பதில்: 1.B

Quiz-2:

ஐகான் எந்த வெப்சைட்டிற்கானது?


ஃபேஸ்புக்

ப்ளாக்

பிகாசா வெப் ஆல்பம்

யு-டியூப்

Quiz-3
சாஃப்ட்வேர் எதற்கு பயன்படுகிறது?

1.  எம்.எஸ்.வேர்ட் – டைப் செய்ய்
2.  எம்.எஸ்.எக்ஸல் – கணக்கீடுகள் செய்ய
3.  எம்.எஸ்.பவர்பாயிண்ட் – பிரசண்டேஷன் செய்ய
4.  ஃபோட்டோஷாப் – புகைப்படங்கள்/படங்களை மேனேஜ் செய்ய
5.  பேஸ்மேக்கர் – பக்கங்களை வடிவமைக்க
6.  கோரல் டிரா – படம் வரைய

7.  டேலி – அக்கவுண்ட்டிங் செய்ய

Quiz-4
சரியா? தவறா?

1.  பெயிண்ட் சாஃப்ட்வேரில் கோலம் வரைய முடியும். - சரி
2.  எம்.எஸ்.எக்ஸல் என்பது டைப் செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. - தவறு
3.  எம்.எஸ்.பவர்பாயிண்ட் என்பது கணக்கீடுகள் செய்வதற்கும், படம் வரைவதற்கும் உதவுகிறது. - தவறு
4.  2-D அனிமேஷன் செய்வதற்கு ஃப்ளாஷ் என்ற சாஃப்ட்வேர் உதவுகிறது. - சரி
5.  3-D அனிமேஷன் செய்வதற்கு மாயா சாஃப்ட்வேர் உதவுகிறது. - சரி
6.  இன்-டிஸைன் சாஃப்ட்வேர் புத்தக வடிவமைப்பிற்கு உதவுகிறது. - சரி
7.  ப்ளாகில் கதை எழுத முடியும். - சரி
8.  யு-டியூபில் நாம் பாடுவதை வீடியோவாக்கி வெளிப்படுத்த முடியும். - சரி
9.  பிகாசாவில் புகைப்படங்களை பதிவு செய்து கொள்ளலாம். - சரி
10.     கூகுள் குரோம் என்பது பிரவுசர் சாஃப்ட்வேர். - சரி

11.     கூகுள் என்பது சர்ச் இன்ஜின் - சரிQuiz-5:

படத்தைப் பார்த்து ஆளை கண்டுபிடிக்கவும்…
Match the Following...