Tuesday 22 April 2014

நாட்டைக் காக்கும் நம் ஓட்டு!


நம் வீட்டிற்கு டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.சி, கம்ப்யூட்டர், மொபைல்  இப்படி ஏதேனும் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் கூட அயிரம் முறை யோசித்து, இண்டர்நெட்டில் அந்த பொருளைப் பற்றி தெரிந்து கொண்டு, நண்பர்களிடம் ஆலோசித்து விட்டு தானே வாங்குகிறோம்.

இவ்வளவு ஏன்?  கடைக்குச் சென்று நெற்றியில் வைத்துக் கொள்ளும் ஐந்து ரூபாய் பெருமானமுள்ள ஸ்டிக்கர் பொட்டு வாங்கச் சென்றால் கூட ‘இது லேட்டஸ்ட் ஸ்டாக் தானே...’ என்று கேட்டு உறுதி செய்து கொண்டு வாங்குகிறோம்.

இவ்வளவு யோசனைகள், கேள்விகள், ஆராய்ச்சிகள் எல்லாம் எதற்காக?

நாம் உழைத்த பணத்தைப் போட்டு பொருளை வாங்கும் போது அதன் தரம் நல்லதாக இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு தான் காரணம்.

ஐந்து ரூபாய் பெருமானமுள்ள நெற்றிப் பொட்டுக்கும், தலையில் வைத்துக் கொள்ளும் ரப்பர் பேண்டுக்குமே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், நம் நாட்டை யார் ஆள வேண்டும்? யார் தகுதியானவர்? மக்கள் நலம் காப்பவர் யார்? என்று யோசித்து முடிவெடுப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம்  சிந்தித்துப் பார்ப்போம்.

நம்  சீரிய சிந்தனையும், தீர்க்கமான முடிவும் தான் நம் நாட்டைக் காக்க நாம் செய்யும் பேருதவி.

தவறாமல் ஓட்டளிப்போம்.
தகுதியானவருக்கு ஓட்டளிப்போம்.
ஓட்டளிக்க தயங்க வேண்டாம்.
ஓட்டளிப்பது நம் உரிமை.

உரிமையைக் காப்போம்; பெருமையை சேர்ப்போம்!!!

-காம்கேர் கே புவனேஸ்வரி