Wednesday, 4 June 2014

ஹாய்,
நாம் தன்னிறைவுடன் வாழ்வதற்கு நம் உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடல்நிலை சரியாக இருந்தால் நம் மனமும் சீராக இருக்கும். நாம் எண்ணியதை முடிக்க முடியும். ஆம். ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். எனவே, உடலைக் காத்து மனதைப் போற்றுவோம். உடல் ஆரோக்கியம் தான் நமக்கு நம்பிக்கையையும்,  தன்னம்பிக்கையையும் கொடுக்கும் சக்திகளிலேயே முதன்மையானதாகும்.
நம் உடல் ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
இதைப்பற்றி இப்போது பார்க்கலாமா?
- காம்கேர் கே புவனேஸ்வரி


நேரம்
உடல் உறுப்பு
பணி
விடியற்காலை
3.00 மணி – 5.00 மணி
நுரையீரலின் நேரம்
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாக சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை
5.00 மணி – 7.00 மணி
பெருங்குடலின் நேரம்
காலைக் கடன்களை இந்த நேரத்தில் முடித்து விட வேண்டும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை
7.00 மணி – 9.00 மணி
வயிற்றின் நேரம்
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது தான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.   
காலை
9.00 மணி – 11.00 மணி
மண்ணீரலின் நேரம்
காலையில்  உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் 
மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்
  குடிக்கக் கூடாது. மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு 
நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல்
11.00 மணி – 1.00 மணி
இதயத்தின்  நேரம்
இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல்
1.00 மணி – 3.00 மணி
சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில் மிதமான மதிய உணவை உண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது. 
பிற்பகல்
3.00 மணி – 5.00 மணி
சிறுநீர்ப்பையின் நேரம்
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை
5.00 மணி – 7.00 மணி
சிறுநீரகங்களின் நேரம்
பகல் நேர பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு
7.00 மணி – 9. 00 மணி
பெரிகார்டியத்தின் நேரம்
பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock Absorber இதுவே இரவு உணவுக்கு உகந்த நேரம்.
இரவு
9.00 மணி – 11. 00 மணி
உறங்கச் செல்லும் நேரம்
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது  நல்லது
இரவு
11.00 மணி – 1. 00 மணி
பித்தப்பை இயங்கும் நேரம்
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்கக் குறைபாடு ஏற்படும்.
இரவு
1.00 மணி – 3. 00 மணி
கல்லீரலின் நேரம்
இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்தகரிக்கும் நேரம் இது. இந்த பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுப்வீர்கள்